இணையவழி நீதிமன்றங்கள், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் நீதிபதிகள்.! புதுசா இருக்கே.!

|

இப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களின் வேலைகளை சுலபமாக்கும் விதமாக வெளிவருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக அனைத்து வேலைகளையும் எளிமைப் படுத்த பல்வேறு நிறுவனங்கள் புதிய புதிய
தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துவருகிறது.

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ்

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ்

அதன்படி சீனாவில் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக 12மகாணங்களில் இணையவழி நிதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, அதில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் அதாவது செயற்கை நுண்ணறிவு முறையில் உருவாக்கப்பட்டு நீதிபதிகள் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இணையதளம்

இணையதளம்

குறிப்பாக இணையதளம் மற்றும் நவீன தகவல் தொழில்நுட்பங்களை நீதித் துறையில் பயன்படுத்துவதை சீன அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சீனாவில் மிகவும் பிரபலமான வீ-சாட் சமூக வலைதளம் மூலம் இணையவழி நீதிமன்றங்களை அதிகாரிகள் அடைத்துள்ளனர்.

காற்றின் வேகத்தில் பயணிப்போமா?- அடுத்தக்கட்டத்திற்கு தயாராகும் இந்தியாகாற்றின் வேகத்தில் பயணிப்போமா?- அடுத்தக்கட்டத்திற்கு தயாராகும் இந்தியா

சுமார் 12 மாகாணங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள

அதன்பின்பு சுமார் 12 மாகாணங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அத்தகைய நீதிமன்றங்களில் பொதுமக்கள் வீ-சாட் மூலம் வழக்கு தொடர முடியும். அந்த வழக்குகளை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நீதிபதி விசாரிப்பார் அந்த நீதிபதிக்கான உருவமும் கொடுக்கப்பட்டிருக்கும்.

நாடு முழுவதும்

இதில் வாதிகளிடமும், பிரதிவாதிகளிடமும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி விசாரணை நடத்தப்படும். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் அளிக்கும் பதில்களின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது 12மாகாணங்களில் மட்டுமேஇணையவழி நீதிமன்றங்கள் செயல்பட்டாலும், நாடு முழுவதும் பல்வேறு வழக்குகளில் இணையதள தொழில்நுட்பங்கள், செயலிகள் சோதித்துப் பார்க்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 90சதிவகித வழக்குகளில் இணையதள

குறிப்பாக இந்த இணையவழி நீதிமன்றங்கள் மூலம் வழக்குகள் விரைவாகவும், துல்லியமாகவும் முடிக்கப்படுகின்றன, இதன்மூலம் சீனாவில் நீதிபதிகளுக்கான வேலைப் பளுவும் குறைகிறது. மேலும் கடந்த அக்டோபர் நிலவரப்படி, சீன நிதிமன்றங்களிலுள்ள 90சதிவகித வழக்குகளில் இணையதள மற்றும் தகவல் தொழில்நுட்பங்கள் ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சுமார் 1,18,764 வழக்குகள்

சுமார் 1,18,764 வழக்குகள்

பின்பு இந்த வீ-சாட் இணையவழி நீதிமன்றங்கள் பொருத்தவரை, இதுவரை சுமார் 1,18,764 வழக்குகள் அந்த நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டதாகவும், அவற்றில் 88,401 வழக்குகள் முடித்து வகைப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Best Mobiles in India

English summary
China introduces new digital courts: Artificial-intelligence judges deliver verdicts via chat app : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X