கெத்து.. ChaGPT-க்கு சீனா போட்ட 4 ரூல்ஸ்.. இதையே எல்லா நாடுகளும் செஞ்சா எவ்ளோ நல்லா இருக்கும்?
டீக்கடை பென்ச், பஸ் ஸ்டாண்ட் தொடங்கி மீன் மார்க்கெட், மின்சார ரயில்களில் கூட பேசுபொருளாகும் அளவிற்கு ஏஐ (AI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் (Artificial Intelligence) ஆனது அடிமட்ட லெவலுக்கு இறங்கி அடிக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது.
சில மாதங்களுக்கு முன்பு வரையிலாக, இன்டெலெக்சுவல் (Intellectual) மற்றும் ஏலைட் (Elite) வகையினரின் பிரத்யேக டாப்பிக் ஆக இருந்த' ஏஐ' இப்போது கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் உள்ள மக்களின் மத்தியிலும் 'ஹாட் டாப்பிக்' ஆக மட்டுமின்றி, கலந்துரையாடும் அளவிற்கு ஒரு 'நார்மல்' ஆன டாப்பிக் ஆகவும் உருமாறியுள்ளது!

இதற்கெல்லாம் காரணம் சாட்ஜிபிடி (ChatGPT) தான் என்றாலும் கூட இத்தாலி, யுஎஸ், ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், சீனா போன்ற சில நாடுகள் சாட்ஜிபிடி-ஐ தடையும் செய்துள்ளனர். குறிப்பாக சீனா, சாட்ஜிபிடி-ஐ தடை செய்தது மட்டுமின்றி இன்னும் ஒருபடி மேலே சென்று, சாட்ஜிபிடி போன்ற தொழில்நுட்பங்கள் சீனாவிற்குள் வர வேண்டுமென்றால் அது 4 விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
தொழில்நுட்ப பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு (Regulation in Tech Usage) பெயர் போன சீனா, ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸின் வேகமான வளர்ச்சியை மனதில் வைத்து, அந்நாட்டின் சைபர்ஸ்பேஸ் நிர்வாகத்தின் (Cyberspace Administration of China) வழியாக ஜெனரேட்டிவ் ஏஐ-க்கான (Generative AI) சில முக்கிய விதிகளை வகுத்துள்ளது.
முதல் விதி: ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட கன்டென்ட் (Content) ஆனது "சோசலிசத்தின் முக்கிய மதிப்புகளை" (Core Values of Socialism) பிரதிபலிக்க வேண்டும். இரண்டாவது விதி: சாட்ஜிபிடி போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் கன்டென்ட் ஆனது எந்த வடிவத்திலும் அரசின் அதிகாரத்தை தகர்க்க கூடாது.
மூன்றாவது விதி: இது மிகவும் முக்கியமான விதியாக பார்க்கப்படுகிறது. ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் மாடல்களை பயிற்றுவிப்பதற்காக பயன்படுத்தப்படும் தரவுகளில் இனம் (Race) மற்றும் பாலினம் (Gender) ஆகியவற்றின் அடிப்படையில் மக்களுக்கு எதிராக எந்த பாகுபாடும் (Discrimination) இல்லை என்பதை ஏஐ நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
நான்காவது விதி: ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட கன்டென்ட் போலியானதாகவோ (Fake) அல்லது தவறான தகவல்களின் (False information) ஆதாரமாகவோ இருக்கக்கூடாது. இந்த விதிகள் எப்போது முதல் அமலுக்கு என்று கேட்டால்.. கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, ஏஐ-யின் வளர்ச்சியை சீனா மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதால், இந்த புதிய விதிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியிலேயே நடைமுறைக்கு வரும்.
ஒருபக்கம், சீன அரசாங்கம் சாட்ஜிபிடி மீது தடை மற்றும் சாட்ஜிபிடி போன்ற தொழில்நுட்பங்களுக்கு கடுமையான விதிகளை அறிவித்துள்ளது. மறுபக்கம் அதே நாட்டில் உள்ள சீன பெரு நிறுவனங்கள் (Chinese Companies) சாட்ஜிபிடி-யின் போட்டியாளர்களை (ChatGPT Rivals) உருவாக்குவதற்கான தங்களது நோக்கங்களையும் அறிவித்துள்ளன.
சீனாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப ஜாம்பவான்களான பைடு (Baidu), அலிபாபா (Alibaba) மற்றும் ஜேடி.காம் (JD.com) போன்ற நிறுவனங்கள் மைக்ரோசாஃப்ட்டின் சாட்ஜிபிடி-யை போன்றே அல்லது சாட்ஜிபிடி-க்கு எதிரான சீன போட்டியாளர்களை உருவாக்கும் தங்களுடைய சொந்த திட்டங்களை அறிவித்துள்ளன என்பதை இங்கே நினைவூட்ட விரும்புகிறோம்.
மேற்கண்ட சீன நிறுவனங்கள் எல்லாமே, ஏஐ தொடர்பான சீன அரசாங்கம் அறிவித்துள்ள கடுமையான விதிமுறைகளுக்கு ஏற்ப தங்களுடைய தயாரிப்புகளை உருவாக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இதேபோன்ற விதிமுறைகள் மற்ற நாடுகளில் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளதா? வந்தால் எப்படி இருக்கும்? உங்கள் கருத்து என்ன?


Click it and Unblock the Notifications