மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை ஹேக் செய்தது சீனா: அமெரிக்கா ஓபன்!

|

அமெரிக்கா உட்பட மேற்கத்திய நட்பு நாடுகள் மைக்ரோசாப்ட் எக்ஸ்சேஞ்ச் மின்னஞ்சல் சேவையக மென்பொருளை சீனா ஹேக் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளன. அதேபோல் சீன அரசாங்கத்துடன் தொடர்புடைய கிரிமினல் ஹேக்கர்கள் ரேன்ஸம்வேர் உட்பட பிற சட்டவிரோத இணைய நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ரேன்ஸம்வேர் தாக்குதல்கள்

ரேன்ஸம்வேர் தாக்குதல்கள்

சைபர்பேஸில் பொறுப்பற்ற தன்மையோடு சீனா நடந்து கொள்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சீன அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் முன்வைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவை தளமாகக் கொண்ட சிண்டிகேட்களிடமிருந்து வரும் ரேன்ஸம்வேர் தாக்குதல்களை தடுக்க நிர்வாகம் முயன்றபோதும் சீன ஹேக்கர்களிடம் இருந்து தொடர்ந்து வரும் அச்சுறுத்தலை நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.

யுஎஸ் உட்பட பாதிக்கப்பட்ட நாடுகள் குற்றச்சாட்டு

யுஎஸ் உட்பட பாதிக்கப்பட்ட நாடுகள் குற்றச்சாட்டு

பல மில்லியன் டாலர்கள் இழந்ததாக கோரிக்கையுடன் யுஎஸ் உட்பட பாதிக்கப்பட்ட நாடுகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. சீன அரசாங்கத்துடன் தொடர்புடைய கிரிமினல் ஒப்பந்த ஹேக்கர்கள் இணைய பயனர்களை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சொந்த லாபத்திற்கு மிரட்டி திருட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம்

அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம்

இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஹேக்கிங் தாக்குதலுக்கு உள்ளானதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது., இதில் சீன அரசாங்த்தின் உதவியுடன் அமெரிக்காவின் பல நிறுவனங்கள் ஹேக் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இவை அனைத்து சொந்த லாபத்திற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது சீன நிறுவனங்கள் வளர்ச்சி, அவர்கள் வியாபாரா முன்னேற்றம் ஆகியவைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அரசுத்துறைக்கு சொந்தமான கணினிகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நான்கு சீன ஹேக்கர்கள் ஹேக்கிங்

நான்கு சீன ஹேக்கர்கள் ஹேக்கிங்

இதுகுறித்து அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட அறிக்கையில் 4 சீனர்கள் இந்த ஹேக்கிங்கில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசுத்துறை கணினிகள், நிறுவனங்கள், பல்கலைக்கழக கணினிகள் உட்பட டஜன் கணக்கான கணினி அமைப்புகளை குறிவைத்து நான்கு சீன ஹேக்கர்கள் ஹேக்கிங் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. வர்த்தக ரகசியங்கள், விஞ்ஞான தொழில்நுட்பங்கள் மற்றும் தொற்று நோய் ஆராய்ச்சி உள்ளிட்ட ரகசியங்களை குறிவைத்து ஹேக்கிங் செயல் நடைபடுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஹேக்கிங்கை பகிரங்கமாக சுட்டிக்காட்டி அதற்கு எதிரான பொருளாதார தடைகளுடன் இணைக்கப்பட்ட போது, பிடென் நிர்வாகம் பெய்ஜிங்கிற்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக நடக்கும் மோசடி செயல்கள்

பொதுவாக நடக்கும் மோசடி செயல்கள்

பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளங்களின் மூலம் நட்பாக பேசிப்பழகி பண மோசடி செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதுகுறித்து பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், ஏமாற்றுபவர்கள் நூதன முறையை கையாண்டு ஏமாற்றிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி

குறிப்பாக மின்னஞ்சல், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அதற்கு முதற்கட்ட பணத்தையும் வாங்கி ஏமாற்றிய நிகழ்வையும் நாம் கேட்டிருப்போம். அதேபோல் பேஸ்புக்கில், வாட்ஸ் ஆப்பில் தொடர்புகொண்டு ஆசை வார்த்தைகள் கூறி பண மோசடி செய்தது குறித்த செய்திகளை நாம் கடந்து வந்திருக்கிறோம்.

பரிசு விழுந்திருப்பதாக கூறி மோசடி

பரிசு விழுந்திருப்பதாக கூறி மோசடி

அதுமட்டுமின்றி சில சமயங்களில் ஒரு பிரபல நிறுவனத்தில் இருந்து உங்கள் மெயில் ஐடிக்கு கோடிக்கணக்கான பணம் பரிசாக கிடைத்திருக்கிறது என ஒரு மின்னஞ்சல் வரும். ஓரிரு நாளில் விமான நிலையத்தில் இருந்து சுங்க அதிகாரி பேசுவதாக கூறி ஒருவர் போன் செய்து உங்களது பரிசுத் தொகை விமான நிலையத்திற்கு வந்துள்ளது. அதை பெறுவதற்கு வரி செலுத்த வேண்டும் போன்ற காரணங்களை கூறி நம்மிடம் முன்பணம் கேட்பார்கள். இதுபோல் மோசடி செய்பவர்கள் குறித்தும் கேள்விப்பட்டிருப்போம். இதுபோன்ற செயல்களில் இருந்து எச்சரிக்கையோடு இருக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறது.

Best Mobiles in India

English summary
China hacks Microsoft: US Accuses

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X