சீனா அதிரடி : ஏலியன் தேடலில் புதிய திருப்பம்.!

|

அமெரிக்காவுடன் எல்லா விடயத்திலும் போட்டி போடும் சீனா, தற்போது ஏலியன் தேடல் சார்ந்த விடயத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவையே 'தூக்கி சாப்பிடும்' அளவிற்கு ஒரு காரியத்தில் இறங்கி உள்ளது.

நாசா நடத்தும் ஏலியன் வேட்டை..!

அதாவது, உலகிலேயே மிகவும் பெரிய தொலைநோக்கியின் மூலம் லட்சக்கணக்கான நட்சத்திரங்களில் வேற்றுகிரக வாசம் சார்ந்த தேடலை நிகழ்த்தி ஒரு படி முன்னே சென்று, அமெரிக்காவின் நாசாவை பின்னுக்கு தள்ள திட்டமிடுகிறது சீனா..!

சூப்பர் பவர் :

சூப்பர் பவர் :

ராணுவ பலம், ஆயுத பலத்தில் மட்டுமல்ல விண்வெளி ஆராய்ச்சியிலும் கூட 'சூப்பர் பவர்' நாடு போட்டி நடந்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.

பலவகை :

பலவகை :

அப்படியாக அமெரிக்காவின் நாசா, இந்தியாவின் இஸ்ரோ என உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களும், துறைகளும் தினந்தினம் பல வகையான விண்வெளி ஆராய்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

மைல் கல் :

மைல் கல் :

அது ஒருபக்கம் இருக்க, விண்வெளி ஆராய்ச்சியின் மாபெரும் மைல் கல்லாக கருதப்படும் வேற்று கிரக வாச தேடலை, யார் முதலில் கண்டுபிடிக்கிறார்களோ அந்த நாட்டிற்க்கு விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் நிரந்தரமான இடம் உண்டு என்பது தான் நிதர்சனம்.

வரலாறு :

வரலாறு :

பெரும்பாலான விண்வெளி வரலாற்று சாதனைகளில் தடம் பதித்த அமெரிக்கா, அந்த நிரந்தரமான இடத்தை தக்க வைத்துக் கொள்ளும்படியாகத்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

போட்டி :

போட்டி :

சுமார் 30 கால்பந்து மைதானங்கள் அளவில், உலகிலேயே மிகவும் பெரிய தொலைநோக்கியை உருவாக்கி, ஏலியன் தேடலில் அமெரிக்காவுடன் போட்டி போட இருக்கிறது சீனா..!

ரேடியோ தொலைநோக்கி :

ரேடியோ தொலைநோக்கி :

இது சீன ராணுவ தலைமையின் கீழ் நடக்கும் விண்வெளி ஆராய்ச்சி என்பதோடு, இதுதான் உலகின் மிக பெரிய ரேடியோ தொலைநோக்கி (World's largest radio telescope) என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஃபாஸ்ட் :

ஃபாஸ்ட் :

இந்த மாபெரும் தொலைநோக்கியின் பெயர் 'ஃபாஸ்ட் :' (FAST) ஆகும். அதாவது, ஃபைவ்-ஹன்ரட்-மீட்டர் அபெர்சர் ஸ்ஃபெரிகல் டெலஸ்கோப் (Five-hundred-meter Aperture Spherical Telescope) என்பதாகும்.

எளிமை :

எளிமை :

இந்த மாபெரும் தொலைநோக்கி மூலம், மிகவும் கடினம் என்று கணிக்கப்படும் வான்வெளி ஆராய்ச்சிகளையெல்லாம் மிகவும் எளிமையாக முடிக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

முக்கியமானவை :

முக்கியமானவை :

அவ்வகை கடினமான ஆராய்ச்சிகளில் ஏலியன் சார்ந்த தேடல் மிகவும் முக்கியமானவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நட்சத்திரங்கள் மற்றும் சூரிய குடும்பங்கள் :

நட்சத்திரங்கள் மற்றும் சூரிய குடும்பங்கள் :

இந்த தொலைநோக்கியானது சாத்தியமான அனைத்து ரேடியோ சிக்னல்களையும் கவரும், அதன் மூலம் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் சூரிய குடும்பங்களில் ஏலியன் தேடலை நிகழ்த்த முடியும்.

கருத்து :

கருத்து :

இந்த மாபெரும் 'டிஷ்' (Dish) மூலம் மிகவும் துல்லியமான தகவல்களை கண்டறிய முடியும் என்று 'ஃபாஸ்ட்' தொலைநோக்கிதிட்டத்தின் தலைமை விஞ்ஞானி கருத்து கூறியுள்ளார்.

உணர்ச்சிமிக்க காது :

உணர்ச்சிமிக்க காது :

மேலும், ரேடியோ தொலைநோக்கி என்பது ஒரு உணர்ச்சிமிக்க காது போன்றது, அது அண்டத்தின் வெள்ளை நிசப்தத்தின் மிகவும் அர்த்தமான ரேடியோ மெசேஜ்களை கேட்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாசா :

நாசா :

கடந்த ஜூலை மாதம், பூமி கிரகம் போன்றே வாழ்வாதாரங்கள் கொண்ட கெப்லர்-452பி (Kepler-452B) கிரகத்தை நாசா கண்டுப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

பிரபஞ்சம் :

பிரபஞ்சம் :

அது போன்ற வேற்றுகிரக உயிர் சார்ந்த தேடலொடு சேர்த்து பிரபஞ்சம் எங்கிருந்து ஆரம்பித்தது போன்ற பெரிய ஆய்வுகளை இந்த 'ஃபாஸ்ட்' தொலைநோக்கி மூலம் நடத்த உள்ளது சீனா..!

நம்பிக்கை :

நம்பிக்கை :

மேலும், இந்த பிரபஞ்சத்தில் நாம் தனியாக இல்லை என்று நம்பும் பலரின் நம்பிக்கை விரைவில் 'ஃபாஸ்ட்' உண்மையாக்கும் என்றும் நம்பப்படுகிறது.

நிறைவு :

நிறைவு :

2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகின் மாபெரும் ரேடியோ தொலை நோக்கியான 'ஃபாஸ்ட்' கட்டுமானப்பணிகள், 2016-ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று சீன அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முன்னேற்றம்  :

முன்னேற்றம் :

2003-ஆம் ஆண்டில் இருந்து விண்வெளி ஆராய்ச்சியில் சீனா நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிஷன் :

மிஷன் :

மேலும், ஹெவி லிஃப்ட் ராக்கெட் (heavy-lift rocket), நிலாவிற்கு இரண்டாம் ரோபோட்டிக் மிஷன் (second robotic mission to the moon), 60 டன் எடை கொண்ட விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (space station) என பல கட்டுமானங்களை சீனா செயல்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
ஏலியன் தேடலில் அமெரிக்காவுடன் போட்டி போட இருக்கிறது சீனா. மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்..!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X