கொடி பறக்குதா- இரண்டாவதாக சாதனை படைத்த நாடு: நிலவில் பறக்கும் நட்சத்திர செங்கொடி!
நிலவில் இருந்து மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் சீனாவின் விண்கல பயணம் வெற்றிகரமாக தொடங்கப்பட்டது. அமெரிக்காவிற்கு அடுத்த நாடாக சீனா நிலவில் தன் நாட்டின் கொடியை நாட்டியுள்ளது.

மூன்றாவது நாடாக சீனா
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான பயணத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. முன்னதாக அமெரிக்கா, ரஷ்யா நாடுகள் நிலவில் மாதிரிகளை கொண்டு வந்துள்ளது. தற்போது மூன்றாவது நாடாக சீனா நிலவின் மாதிரிகளை சேகரித்துள்ளது.

நிலவில் கொடி நாட்டிய சீனா
அமெரிக்காவிற்கு பிறகு நிலவில் கொடி நாட்டிய இரண்டாவது நாடாக சீனா இருக்கிறது. நிலவில் நாட்டிய சீன கொடியின் படத்தை சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2 மீட்டர் அகலமும், 90 சென்டிமீட்டர் உயரமும் இந்த கொடி இருக்கிறது.
நிலவுக்கு அனுப்பப்பட்ட சாங் விண்கலம்
சீனாவின் சாங் விண்கலம் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி நிலவுக்கு அனுப்பப்பட்டது. நிலவின் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவர கோடிக்கணக்கில் சீனா முதலீடு செய்துள்ளது. ஒரு வார பயணத்துக்கு பிறகு விண்கலத்தில் இருந்து லேண்டர் நிலவில் தரையிறக்கப்பட்டது.

பெண் கடவுளாக நிலவு
நிலவு பெண் கடவுளாக சீனாவில் மதிக்கப்படுகிறது. சாங் என்று நிலவு கடவுளை சீன மக்கள் அழைக்கின்றனர். அதை கருத்தில் கொண்டே சாங்-5 என இந்த விண்கலத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மாதிரிகளை சேகரித்துக் கொண்ட விண்கலம்
நிலவில் இருந்து மண், பாறைகள் போன்ற மாதிரிகளை சேகரித்துக் கொண்டு விண்கலத்தின் கேப்சூல் புறப்பட்டு விட்டது. இந்த விண்கலம் பூமிக்கு பத்திரமாக திரும்பினால் உலகில் நிலவில் மாதிரிகளை சேகரித்த மூன்றாவது நாடு எந்ற பெருமையை சீனா அடையும்.
ரோவர் மூலம் தேசிய கொடி
அமெரிக்காவிற்கு பிறகு சீனா நிலவில் கொடியை நாட்டியுள்ளது. நிலவில் தரையிறக்கப்பட்ட சீனாவில் சாங்-5 விண்கலத்தின் ரோவர் மூலம் தேசிய கொடி நாட்டப்பட்டுள்ளது. மாதிரிகளை சேகரித்த விண்கலம் கடந்த வியாழக்கிழமை பூமிக்கு திரும்ப புறப்பட்டுவிட்டது.
புகைப்படங்களை பகிர்ந்த சீனா
நிலவில் இருந்து விண்கலம் புறப்படும் வீடியோ காட்சிகளையும், கொடி நாட்டப்பட்ட புகைப்படம், ரோவர் மூலம் நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை சீனா வெளியிட்டுள்ளது. அதோடு தாங்கள் சாதனை படைத்துள்ளதாக சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மகிழ்ச்சியடைந்துள்ளது.
Source: CCTV


Click it and Unblock the Notifications