மரணப் பீதியில் சீனா, காரணம் ஆண்ட்ராய்டு கேம்.!?

By Meganathan
|

வெளியான சில நாட்களில் உலகம் முழுக்க அதிரடி ஹிட்டடித்த போக்கிமான் கோ, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நாடுகளிலும் அதிகம் விளையாடப்பட்டு வருகின்றது. நம்ம ஊர்களில் பலர் கோவில் உட்படப் பல்வேறு இடங்களில் போக்கிமான் வேட்டையில் ஈடுபட்டு வருவதை அவர்கள் பதிவு செய்யும் ட்வீட் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

உலகம் முழுக்கப் பிரபலமாகி வரும் போக்கிமான் கோ அதிகாரப்பூர்வமாகச் சீனாவில் இன்னும் வெளியிடப்படவில்லை. வெளியாகாத போக்கிமான் கோ கேம் குறித்துச் சீனா பயம் கொள்வதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சாதாரண ஆண்ட்ராய்டு கேம் குறித்துச் சீனா ஏன் அச்சம் கொள்ள வேண்டும் என்பதற்கான உண்மை பின்னணி தான் இந்தத் தொகுப்பு..

போக்கிமான் கோ

போக்கிமான் கோ

போக்கிமான் கோ ஆக்மென்ட்டட் ரியால்டு கேம் விளையாட்டில் பயனர்கள் நிஜ வாழ்க்கையில் நடந்து சென்று ஸ்மார்ட்போன் திரையில் தெரியும் விர்ச்சுவல் கார்டூன் கதாப்பாத்திரங்களைக் கண்டறிய வேண்டும்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

அமெரிக்காவில் போக்கிமான் கோ விளையாடுவதால் பல்வேறு திருட்டு சம்பவங்களும் கார் விபத்துகளும் அதிகரித்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விளக்கம்

விளக்கம்

அமெரிக்க அதிகார சபை உறுப்பினர் ஒருவர் போக்கிமான் கோ ஆப் டெவலப்பர்களை விளையாட்டின் தரவு தனியுரிமை பாதுகாப்பு குறித்து விளக்கமளிக்கக் கோரியுள்ளார்.

சீனா

சீனா

உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் மற்றும் ஆன்லைன் கேமிங் சந்தையாக விளங்கும் சீனாவில் போக்கிமான் கோ இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை, இருந்தும் இந்தக் கேம் ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் சதி திட்டமாக இருக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

வேண்டாம்

வேண்டாம்

சீனாவின் ரகசிய ராணுவ தளங்களை அறிந்து கொள்ள அமெரிக்கா மற்றும் ஜப்பான் விரித்திருக்கும் வலை தான் போக்கிமான் கோ, யாரும் இந்தக் கேமினை விளையாடாதீர்கள் எனச் சீன சமூகவலைத்தளம் வெய்போவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ரகசியம்

ரகசியம்

ஜப்பானின் நின்டென்டோ கோ லிமிடெட் நிறுவனம் போக்கிமான் உரிமையை வைத்திருக்கின்றது. மேலும் அமெரிக்காவின் கூகுள் இணைந்து சீனாவின் ரகசிய ராணுவ தளங்களை அறிந்து கொள்ள வாய்ப்பிருக்கின்றது என இது குறித்து வெளியான சதியாலோசனை கோட்பாட்டில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கேம் கூகுள் மேப்ஸ் சேவையை அதிகம் பயன்படுத்துகின்றது.

கோட்பாடு

கோட்பாடு

தேடிக் கண்டுபிடிக்கப்பட வேண்டிய போக்கிமான் கதாப்பாத்திரங்களை நின்டென்டோ மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களிலும், மக்கள் செல்ல அனுமதி இல்லாத ராணுவ தளங்களில் வைக்கப்பட்டிருக்கலாம் என இந்தக் கோட்பாடு தெரிவிக்கின்றது.

போர்

போர்

இவ்வாறு நடக்கும் பட்சத்தில், தவிர்க்க முடியாத காலங்களில் போர் நடக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் ஜப்பான் மற்றும் அமெரிக்கா சீனாவை எளிதாகத் தாக்கி அழிக்க இந்தக் கேம் வழி செய்யலாம் என வெய்போ தளத்தில் வெளிவரும் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்சுறுத்தல்

அச்சுறுத்தல்

இந்தக் கேமினை விளையாட எனக்கு நேரம் கிடைக்கவில்லை, இதனால் இது குறித்து வெளியான பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது எனச் சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் லீ கங் தெரிவித்துள்ளார்.

நின்டென்டோ

நின்டென்டோ

போக்கிமான் கோ சீனாவில் வெளியிடப்படுவது குறித்து நின்டென்டோ நிறுவனம் சார்பில் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
China, Fears That Pokemon Go May Aid Locating Military Bases Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X