உறுதி : செயற்கை சூரியனை உருவாக்குகிறது சீனா..!

Written By:

செயற்கையாக எதை வேண்டுமானாலும் உருவாக்கிக்கொள்ளலாம் என்பதற்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு என இந்த ஆராய்ச்சியை கூறலாம். அதாவது சீன விஞ்ஞானிகள் எப்போதுமே முடிவுக்கு வராத சுத்தமான ஏரிசக்தியை (never-ending supply of clean energy) வழங்கும் செயற்கை சூரியனை (artificial Sun) உருவாக்குகிறார்கள் என்ற செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
3 மடங்கு :

3 மடங்கு :

அணுக்கரு இணைவு (Nuclear Fusion ) பயன்படுத்தி சூரியனின் மையப்பகுதியில் இருக்கும் வெப்பத்தை விட 3 மடங்கு அதிக வெப்பத்தினை ஹைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி உருவாக்குகின்றனர்.

வெப்பநிலை :

வெப்பநிலை :

கட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் வரையிலாக ஒரு மென்மையான 50 மில்லியன் டிகிரி செல்சியஸ் அளவிலான வெப்பநிலையை பராமரிக்க முடிந்ததாக விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

டோநட் வடிவ உலையில் :

டோநட் வடிவ உலையில் :

சீனாவில் உள்ள ஹீஃபி நகரில் உள்ள உடல் அறிவியல் நிறுவனத்தில் (Institute of Physical Science) உள்ள டோநட் வடிவ உலையில் (doughnut-shaped reactor) இந்த ஆய்வானது மேற்கொள்ளப்ப்பட்டு வருகிறது.

 ஹைட்ரஜன் வெடிகுண்டு :

ஹைட்ரஜன் வெடிகுண்டு :

வெப்பாற்றல் ஆயுதமான ஒரு ஹைட்ரஜன் வெடிகுண்டு வெடிப்பு நிகழ்த்தும் சக்தியை இந்த செயற்கை சூரியன் ஆய்வும் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தி :

உற்பத்தி :

இவ்வகையான அணு ஆராய்ச்சிகளில், சில நொடிகளுக்கு மட்டுமே மிகவும் சக்தி வாய்ந்த வெப்பத்தினை உற்பத்தி செய்ய முடியும்.

ஜெர்மனி விஞ்ஞானிகள் :

ஜெர்மனி விஞ்ஞானிகள் :

அப்படியாக, இதுவரையிலாக ஜெர்மனி விஞ்ஞானிகள் அணுக்கரு இணைவு மூலம், 80 மில்லியன் டிகிரி செல்சியஸ் ஹைட்ரஜன் வாயுவை வெப்பத்தை பயன்படுத்தி 2 மெகாவாட் நுண்ணலை கதிர்வீச்சுதனை (microwave radiation) உருவாக்கி உள்ளனர்.

காந்த சக்தி :

காந்த சக்தி :

சீன விஞ்ஞானிகளோ 102 வினாடிகளுக்கு 50 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பசக்தியை, மிகவும் பலமான காந்த சக்தி கொண்டு உலைக்குள் அடக்கி வைத்து உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளனர்.

க்ளைமேக்ஸ் காட்சி :

க்ளைமேக்ஸ் காட்சி :

ஸ்பைடர் மேன் 2-ஆம் பாகத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில், இணைவு விளைவின் மூலம் மலிவான மற்றும் சுத்தமான எரிசக்தியை உற்பத்தி செய்ய டாக்டர் ஆக்டோபஸ் முயற்சி செய்து தோற்றுப்போவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புகைப்படங்கள் : கெட்டி

Read more about:
English summary
China close to creating 'artificial star' three times hotter than Sun. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot