Home
News

சிறுவர்கள் ஆன்லைன் கேம் விளையாட நூதன தடை.! எங்கு தெரியுமா?

சிறுவர்கள் ஆன்லைன் கேம் விளையாட அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதேபோல் வீடியோ கேம் விளையாடுவது என்றால் பெரியவர்கள் தொடங்கி சிறியவர்கள் வரை அனைவருமே குதூகலம் ஆகிவிடுவர், அதுவும் இளைஞர்களை பற்றி சொல்லவே தேவையில்லை.

 2D, 3D கேம்கள் என பல

அதுவும் இந்த காலத்தில் 2D, 3D கேம்கள் என பல வந்தவண்ணம் உள்ளன, மனிதனின் ஓய்வு நேரத்தில் வீடியோ கேம் விளையாடியது போய் தற்போது இளைய தலைமுறையினர் பலர் எந்நேரமும் அதிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர் என்றுதான் கூறவேண்டும்.

 ஒரு சிலர் உணவு, உறக்கம் என

குறிப்பாக ஒரு சிலர் உணவு, உறக்கம் என அனைத்தையும் மறந்து கேம் விளையாட அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் 18 வயதுக்கு கீழுள்ள சிறுவர்கள் ஆன்லைன் கேம் விளையாட நூதன தடை விதித்துள்ளது சீனா.

 கீழ் உள்ள சிறுவர்கள் ஒரு நாளில்

அதாவது 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் ஒரு நாளில் ஒரு மணி நேரம் மட்டுமே ஆன்லைன் கேம் விளையாட முடியும். அதற்கு மேல் அவர்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 குறிப்பாக இதில் சில க

குறிப்பாக இதில் சில கட்டுப்பாடுகளும் அமல் படுத்தப்பட்டுள்ளன. அதாவது இரவு 8 மணி முதல் 9 மணி வரையில் மட்டுமே விளையாட வேண்டும் என்றும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, பொதுவிடுமுறை நாட்களில் மட்டுமே விளையாட முடியும் என்று தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கும்

அதேபோல் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அது என்னவென்றால், பயனர்கள் அனைவரும் தங்களது சரியான விவரங்களை கொடுத்து தான் பதிவு செய்துள்ளனரா? என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 இருக்கும். குறிப்பாக கடந்

சீனாவில் கேம் விளையாட கொண்டுவரப்பட்ட இந்த நூதன தடை பல நாடுகளில் நடைமுறைக்கு வந்தால் இன்னும் அருமையாக இருக்கும். குறிப்பாக கடந்த 6ஆண்டுகளில் இந்த செல்போன் வீடீயோ கேம் தாக்கம் மிகவும் அதிகம் என்று கூறலாம்.

புதிய கட்டுப்பாடுகளை

குறிப்பாக தொடர்ந்து ஆன்லைன் கேம் விளையாடுவதால் சிறுவர்களுக்கு பல பிரச்சனைகள் வரும் என நினைத்து சீனா இதுபோன்ற புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இதுபோன்ற கட்டுப்பாடுகள் அனைத்து இடங்களிலும் வரவேண்டும் என்பது மக்களின் கருத்து.

Best Mobiles in India

English summary
China bans children from playing online games for more than three hours a week: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X