Home
News

குறி நிலாவுக்கு: ஜோடி போடும் சீனா, ரஷ்யா- நேரடியாக நிலாவில் ஆய்வு மையம்!

விண்வெளி ஆய்வு குறித்து பார்க்கையில், பிற நாடுகளைவிட சீனா தாமதமாகவே இந்த தளத்தில் அடியெடுத்து வைத்தது. இருப்பினும் சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சி பிறநாடுகளை திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாக இருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான பயணத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. முன்னதாக அமெரிக்கா, ரஷ்யா நாடுகள் நிலவில் மாதிரிகளை கொண்டு வந்தது. இந்த வரிசையில் மூன்றாவது நாடாக சீனா நிலவின் மாதிரிகளை சேகரித்துள்ளது.

நிலவில் கொடி நாட்டிய சீனா

நிலவில் கொடி நாட்டிய சீனா

அமெரிக்காவிற்கு பிறகு நிலவில் கொடி நாட்டிய இரண்டாவது நாடாக சீனா இருக்கிறது. நிலவில் நாட்டிய சீன கொடியின் படத்தை சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது. நிலவின் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவர கோடிக்கணக்கில் சீனா முதலீடு செய்தது. ஒரு வார பயணத்துக்கு பிறகு விண்கலத்தில் இருந்து லேண்டர் நிலவில் தரையிறக்கப்பட்டது. சாங்-5 என இந்த விண்கலத்துக்கு பெயர் சூட்டப்பட்டது.

சந்திர மாதிரிகளை சேகரித்த சீனா

சந்திர மாதிரிகளை சேகரித்த சீனா

நிலவில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக ரஷ்யா மற்றும் அமெரிக்கா இதேபோல் சந்திர மாதிரிகளை சேகரித்தது. பூமியல் உள்ள கரிம மண்ணை போல் சந்திரினில் இருக்கும் மணல் மாதிரிகள் இல்லை என்றே கூறப்படுகிறது. சந்திரனில் இருக்கும் மண்ணில் கரிம ஊட்டச்சத்துகள் இல்லை எனவும் அவை மிகவும் வறண்டவையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து

இந்த நிலையில் சந்திர ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்கும் திட்டங்களில் சீனாவும் ரஷ்யாவும் ஒத்துழைப்பில் ஈடுபட்டு வருகிறது. சீனா தேசிய விண்வெளி நிர்வாகம் மற்றும் ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டது. சீனாவும் ரஷ்யாவும் தற்போது சந்திரனில் ஒன்றாக ஒரு ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்க அதிகாரப்பூர்வமாக திட்டமிட்டுள்ளது. சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகத்தின் நிர்வாகி ஜாங் கெஜியன் மற்றும் ரஷ்யாவின் மாநில விண்வெளி கார்ப்பரேஷன் ரோஸ்கோஸ்மோஸின் பொது மேலாளர் டிமிட்ரி ரோகோசின் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையத்தை நிர்ணாணிப்பதற்கான இணை ஆலோசனை நடத்தப்பட்டது.

சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையம்

சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையம்

சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையம் என்பது நீண்ட கால விஞ்ஞான பரிசோதனை தளமாகும். இதற்கான காலக்கெடு இன்னும் கூறவில்லை. மேலும் 2031 ஆம் ஆண்டுக்குள் சீனா நிலவில் தனது தளத்தை அமைக்க விரும்பவுதாக தகவல்கள் தெரிவிக்கிறது. சந்திர ஆராய்ச்சி நிலையம் திட்டமிடல், வடிவமைப்பு, செயல்பாடு என அனைத்திலும் ரஷ்யா மற்றும் சீனா இணைந்து கூட்டணியுடன் பணியாற்ற திட்டமிட்டு இருக்கிறது. சந்திரனின் மேற்பரப்பில், சுற்றுப்பாதையில் அல்லது இரண்டிலும் விண்வெளி ஆய்வு மையங்களை அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விண்வெளி ஆராய்ச்சியில் போட்டிப்போடும் நாடுகள்

நிலவு குறித்து பல்வேறு வகையிலான அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அமைக்கப்படும் சந்திர ஆராய்ச்சி நிலையம் குறித்த அறிவிப்பு ரஷ்ய முதல் மனித விண்வெளி பயணத்தின் 60வது ஆண்டு விழாவை கொண்டாட தயாராகி வரும் நேரத்தில் வெளியாகியுள்ளது. அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சிக்கு கடும் போட்டியாக இருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சிகளில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு கடும் போட்டி இருக்கும் நேரத்தில் ரஷ்யா மற்றும் சீனா இணைந்து சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையத்தை அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

File Images

Source: earthsky.org

Best Mobiles in India

English summary
China and Russia Officially Planning to Built a International Lunar Research Station in Moon!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X