கூட்டணி : சீனாவும், பாகிஸ்தானும்..!

Posted By:

ஒரு நாட்டின் வளர்ச்சியை நிர்ணயப்பதில் விண்வெளி தொழில்நுட்ப துறைக்கு இருக்கும் பங்கு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் போகின்றது. அந்த வகையில் சூப்பர் பவர் நாடுகளுக்கு இடையே மறைமுகமான தொழில்நுட்ப உலகப்போர் ஒன்றே நடந்து கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

சீனாவை வீழ்த்துமா இந்தியா..!?

அந்த மறைமுக போரில் 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற கோட்பாடு கொண்ட உலக நாடுகள் ஒன்று கூடிக் கொள்வது வழக்கமான ஒன்றே, அந்த வரிசையில் தற்போது சீனாவும் பாகிஸ்தானும் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சிக்காக கைக்கோர்த்துள்ளன..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வளர்ச்சி :

வளர்ச்சி :

பாகிஸ்தானின் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு தரப் சீனா சம்மதித்து உள்ளது..!

தீர்மானம் :

தீர்மானம் :

இவ்விரு நாடுகளுக்கு இடையேவும் உள்ள கராமே- சிஞ்சியாங் தீர்மானத்தை (Karamay-Xinjiang) அடிப்படையாக கொண்டு இந்த ஒத்துழைப்புக்கு சம்மதம் தெரிவித்துள்ளது சீனா..!

கொள்கை :

கொள்கை :

சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே உள்ள பொருளாதார கொள்கைகளில், கராமே- சிஞ்சியாங் தீர்மானமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது..!

கோரிக்கை :

கோரிக்கை :

பாகிஸ்தானின் திட்டம் மற்றும் முன்னேற்ற அமைச்சரான அஷன் இக்பால் (Ahsan Iqbal) இந்த சீனா - பாக் கூட்டணியை ஏற்றுக் கொள்ளுமாறு கடந்த வாரம் நடந்த சீனா - பாக் மன்ற சந்திப்பில் சீனாவிடம் கேட்டுக் கொண்டார்.

சம்மதம் :

சம்மதம் :

ஆகஸ்ட் 12-ஆம் தேதி முடிந்த சந்திப்புக்கு இரண்டு நாட்கள் கழித்து, பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும், விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் சீனா சம்மதம் தெரிவித்துள்ளது.

வலிமை :

வலிமை :

இந்த கூட்டணி மூலம் பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே உள்ள நட்பு மேலும் வலிமை அடைய இருக்கிறது என்று கூறியுளார் பாகிஸ்தானின் திட்டம் மற்றும் முன்னேற்ற அமைச்சரான அஷன் இக்பால்.

பணி :

பணி :

இந்த உடன்படிக்கைப்படி சீனா மற்றும் பாகிஸ்தான் ஒன்றிணைந்து விண்கலங்களை ஏவும் பணிகளில் ஈடுபடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது..!

வருங்கால லட்சியங்கள் :

வருங்கால லட்சியங்கள் :

இது போன்ற செயல்கள் சீனா மற்றும் பாகிஸ்தானின் வருங்கால லட்சியங்களை அடைய வழி வகுக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று அஷன் இக்பால் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது..!

புரிதல் :

புரிதல் :

இந்த சந்திப்பு மற்றும் ஒப்பந்தம் மூலம் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளின் புரிதல் அதிகமாகி இருக்கிறது என்று சீன தூதரான சன் விடோண்ங் (Sun Weidong) கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது..!

எல்லை :

எல்லை :

இந்த ஒப்பந்தம் மட்டுமின்றி சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லை சார்ந்த விடயங்களுக்காக வருடா வருடம் சந்திப்பு நடத்தவும் இரண்டு நாடுகளும் முடிவெடுத்துள்ளன..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Check here about China agrees cooperation with Pakistan in space technology. Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்