Just In
- 12 hrs ago
ஒரே சார்ஜிங்கில் 25 நாள் யூஸ் பண்ணலாம்: Vivo அறிமுகம் செய்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்!
- 13 hrs ago
Samsung Vs Xiaomi: ஒரே நேரத்தில் பிரமாண்ட போட்டி- எந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் பெஸ்ட்?
- 14 hrs ago
அடடே சூப்பர்! 5G-க்கான கட்டணம் இவ்வளவு தானா? 5ஜி யூஸ் பண்ண புது சிம் வாங்க வேண்டுமா?
- 14 hrs ago
போன் வாங்குற ஐடியா இருந்தா இந்த Vivo 5ஜி மாடலை சூஸ் பண்ணுங்க.! தரமான அம்சங்கள்
Don't Miss
- News
ஆடி கடைசி சனி.. உங்களுக்கு சனி தோஷம் இருக்கா? இந்த பரிகாரம் செய்ய மறக்காதீங்க
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது...
- Automobiles
இந்தியாவில் அதுக்குள்ள இவ்ளோ செல்டோஸ் கார்கள் விற்பனை ஆயிருச்சா! இதையெல்லாம் நம்பவே முடியலயே!
- Movies
மொட்ட தலையை தடவி பார்த்து கமெண்ட் அடித்த வடிவேலு.. எனக்கு எண்டே கிடையாதுடா!!
- Finance
ரூ.20 பாக்கி.. 22 வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.. எப்படி தெரியுமா?
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
- Sports
எல்லை மீறி செல்லும் ஊர்வசி - ரிஷப் பண்ட் சண்டை.. யார் கூறுவது உண்மை?.. இணையத்தில் வெடிக்கும் போர்!!
- Education
இரண்டாவது பெரிய துறைமுகத்தில் பணி வாய்ப்பு?
286 முறை கிரெடிட் செய்யப்பட்ட சம்பளம்.. ரூ.1.42 கோடியை திரும்ப கேட்ட பின் என்னாச்சு தெரியுமா?
1 மாதத்திற்கு 30 நாள், இந்த 30 நாட்களில் நம் அனைவரின் கவனமும், பெரும்பாலும் சம்பள தேதியை நோக்கி எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. சிலர் இல்லை என்று மறுத்தாலும், இது தான் நடைமுறையில் நம்முடைய வாழ்க்கையில் நடக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது. சம்பள தேதியில் மொபைல் SMS ரிங்க்டோன் கேட்கும் போது கிடைக்கும் ஆனந்தம் இருக்கிறதே, அய்யயோ! அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

1 மாதத்தில் சுமார் 286 முறை மீண்டும்-மீண்டும் கிரெடிட் செய்யப்பட்ட சம்பளம்
என்னதான் சம்பளம் கிரெடிட் ஆன 3 தினங்களுக்குள் செலவுகள் எல்லாம் போக, வெறும் மினிமம் பேலன்ஸ் மட்டுமே எஞ்சியிருக்கும் என்று தெரிந்தும் கூட, சம்பள தேதி நாம் வெறுப்பதில்லை. 1 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே சம்பளம் கிடைக்கும் என்று தெரிந்தும், அதை எண்ணி மகிழ்ச்சியடைகிறோம். மாதத்திற்கு 1 முறை மட்டும் கிரெடிட் ஆகும் உங்களுடைய சம்பளம் 1 மாதத்தில் சுமார் 286 முறை மீண்டும்-மீண்டும் கிரெடிட் செய்யப்பட்டால் என்ன செய்வீர்கள்.

286 முறை ஒரே நபருக்கு நிறுவனத்தால் வரவு வைக்கப்பட்ட சம்பளம்
எது? 286 முறை என்னுடைய சம்பளம் எனது கணக்கில் வரவு வைக்கப்படுமா? இதெல்லாம் கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது. நடைமுறையில் இது சாத்தியமில்லை என்று நீங்கள் நினைப்பது இங்கு எங்களுக்குக் கேட்கிறது. உண்மையைச் சொல்லப் போனால், ஒரு ஊழியரின் வங்கிக் கணக்கில் அந்த நிறுவனம் ஒரே மாதத்தில் சுமார் 286 முறை அவருடைய சம்பள தொகையை கிரெடிட் செய்துள்ளது. இந்த சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊழியரின் கணக்கில் தவறாக 165,398,851 சிலியன் பெஸோஸ் சம்பளம்
ஆம், சிலி நாட்டில் ஒரு பிரபல நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியரின் கணக்கில் அவருடைய மாதாந்திர சுமார் 286 முறை கிரெடிட் செய்யப்பட்டுள்ளது. 286 முறை ஒரே மாதத்தில் கிரெடிட் செய்யப்பட்ட பின்னர், அந்த ஊழியரின் கணக்கில் 165,398,851 சிலியன் பெஸோஸ் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி, இந்த தொகை சுமார் ரூ. 1.42 கோடி ஆகும். இந்த எதிர்பாராத நிகழ்வு டெக் சிஸ்டத்தில் ஏற்பட்ட ஒரு சிறிய கோளாறு காரணமாக எழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

1 மாதத்திற்கு இவருடைய அசல் வருமானம் எவ்வளவு தெரியுமா?
சிலி உள்ளூர் ஊடகத்தின் தகவல் படி, அந்த நபர் Consorcio Industrial de Alimentos அல்லது Cial என்ற நிறுவனத்தில் பணிபுரிந்திருக்கிறார். இது சிலியில் உள்ள பிரோஸன் உணவு மற்றும் பிரெஷ் உணவுப் பொருட்களைத் தயாரித்து விநியோகம் செய்யும் பிரபல நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம், அதன் ஒரு குறிப்பிட்ட ஊழியருக்கு மொத்தம் 500,000 பெசோக்களை வழங்க வேண்டும். இந்திய மதிப்பின் படி ரூ.43,000 ஆகும்.

தவறாக கொடுக்கப்பட்ட 1.42 கோடி ரூபாய் சம்பளம்
இது தான் அந்த ஊழியரின் ஒரு மாதச் சம்பளத் தொகை என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், எதிர்பாராத விதமாக அவருடைய சம்பள தொகை 286 முறை தொடர்ந்து கிரெடிட் செய்யப்பட்டு, இறுதியில் அவருக்கு 165,398,851 பெசோக்களை வழங்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி அவருக்குத் தவறுதலாக வழங்கப்படச் சம்பள தொகையின் மதிப்பு சுமார் 1.42 கோடி ரூபாய் ஆகும்.

பணத்தை திரும்ப கேட்டதும் டிவிஸ்ட் எடுத்த ஊழியர்
சம்பவம் நடந்த உடனேயே, சியால் நிர்வாகம் அந்த ஊழியரை அணுகி, நடந்ததைத் தெளிவாகக் கூறியுள்ளது. தவறுதலாக அவர் கணக்கில் கிரெடிட் செய்யப்பட்ட 285 மாத சம்பள தொகையை மீண்டும் நிறுவனத்திடமே ஒப்படைக்கும் படி நிறுவனம் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த ஊழியரும் வங்கிக்குச் சென்று பணத்தை ஒப்படைக்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், சிறிது நேரத்தில் அவருடைய முடிவை அவர் மாற்றிக்கொண்டதாகத் தெரிகிறது.

சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட போன்
காரணம், நிறுவனம் மீண்டும் அவரை தொடர்பு கொண்டு அழைத்த போது, அவர் அசதியில் உறங்கிவிட்டார் என்றும், நாளை பணத்தை ஒப்படைத்துவிடுவதாகக் கூறியுள்ளார். ஆனால், மறுநாளும் அவரிடம் இருந்து எந்த செயல்பாடுகளும் காணப்படவில்லை. பாதிக்கப்பட்ட நிறுவனம் அவரை போன் மூலம் தொடர்புகொள்ள நினைத்தபோது அவரின் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு நிறுவனம் அதிர்ந்தது.

பணத்தை அபேஸ் செய்துவிட்டு வேலையை இராஜினாமா செய்த ஊழியர்
இறுதியில், ஜூன் 2 ஆம் தேதி அன்று, அந்த நபர் இனி நிறுவனத்திற்கு பணியாற்ற வரப்போவதில்லை என்று கூறி, அவருடைய ராஜினாமாவை மெயில் மூலம் சமர்ப்பித்திருக்கிறார். ஊழியரின் இந்த செயலை கண்டு நிறுவனம் ஆடிப் போனது. இறுதியில், வேறு வழியின்றி பாதிக்கப்பட்ட நிறுவனம் காவல்துறையில் புகார் அளித்து அவரையும், அவரிடம் இருக்கும் 1.42 கோடி ரூபாயை மீட்டித்தரும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

உங்கள் கணக்கில் இப்படி 286 முறை சம்பளம் வரவு வைக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?
தவறாக வந்த தொகை என்று தெரிந்தும், அந்த ஊழியர் சிறிய தயக்கமும் இன்றி ஒட்டுமொத்த தொகையையும் அபேஸ் செய்துவிட்டு, எஸ்கேப் ஆனா சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேலை உங்கள் கணக்கில் இப்படித் தவறுதலாக 286 முறை சம்பளம் கிரெடிட் செய்யப்பட்டிருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? உங்களின் நடவடிக்கை என்னவாக இருந்திருக்கும் என்ற பதிலைக் காண ஆர்வமாக இருக்கிறோம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086