Home
News

ஆன்லைன் வகுப்புகளுக்கு கடும் கட்டுப்பாடு: இனி இந்த விதிமுறைகள் கட்டாயம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பை பார்க்கலாம். இனி வரும் நாட்களில் ஆன்லைன் வகுப்புகளை பள்ளி நிர்வாகம் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலு்ம பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் வகுப்பு வீடியோக்களை பள்ளி நிர்வாகம், பெற்றோர், ஆசிரியர் பிரதிநிதிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டார்.

ஆன்லைன் வகுப்புகளுக்கு முறையான வழிகாட்டுதல்கள்

ஆன்லைன் வகுப்புகளுக்கு முறையான வழிகாட்டுதல்கள்

மேலும் இதுகுறித்து முதலமைச்சர் அளித்த உத்தரவில், ஆன்லைன் வகுப்புகளுக்கு முறையான வழிகாட்டுதல்கள் வகுக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை, கல்லூரி கல்வி இயக்கனர், சைபர் கிரைம், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு அதிகாரிகள், உளவியல் நிபுணர்கள் ஆகிய உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை

போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை

மேலும் கல்வி நிறுவனங்களில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை தடுக்கும் வகையிலான பரிந்துரைகளை வாரத்திற்குள் தயாரிக்க கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் ஆன்லைன் வகுப்புகளில் முறையில்லாமல் நடந்துக் கொள்வோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டார். மேலும் மாணவ, மாணவிகள் புகார் அளிக்க இலவச உதவி எண்களை உருவாக்கவும் அறிவுறுத்தினார். இதில் வரும் புகார்களை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

சிறையில் அடைத்து விசாரணை

சிறையில் அடைத்து விசாரணை

சென்னை கே.கே.நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியான பத்மா சேஷாத்ரி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் அந்த பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் தொந்தரவு புகார்களை அளித்தனர். இதையடுத்து பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் ராஜகோபலனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கொரோனா வைரஸ் பரவல்

கொரோனா வைரஸ் பரவல்

கொரோனா வைரஸ் பரவலையடுத்து பள்ளி கல்லூரிகள் மூடும் நிலை ஏற்பட்டது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளை தொடர்ந்தனர். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வீடியோ கால் மூலமாக வகுப்புகளை எடுத்து வந்தனர். கொரோனா பரவல் கொஞ்சம் கட்டுக்குள் வந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் மெதுவாக கட்டுப்பாடுகளுடன் திறக்கும் நிலைக்கு வந்தது.

கொரோனா பரவல் இரண்டாம் அலை

கொரோனா பரவல் இரண்டாம் அலை

இருப்பினும் கொரோனா பரவல் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. அதேசூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகள் தேர்வுகளை, தேர்வு நாட்களையும், தேர்வு எழுதும் முறையையும் அறிவித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய மாநில அரசுகள் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் மாணவர்களின் படிப்புகள் என்னவாகும் என்பது கேள்விக்குறியானது. இதையடுத்து மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்லூரிகள் ஆன்லைன் வகுப்பு எடுத்து வருகிறது. மாணவர்களுக்கு சில பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகின்றனர். அதேபோல் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வலியுறித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

File Images

Best Mobiles in India

English summary
Chief Minister M.K.Stalin announced the New Rules for the Online Class
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X