மெரினா கடற்கரையில் செல்பி புள்ளையா மாறுங்க: "நம்ம சென்னை" செல்பி மேடை- பொதுமக்கள் ஆர்வம்!

|

சென்னை மெரினா கடற்கரையை மேலும் அலங்கரிக்கும் விதமாக பொதுமக்கள் மகிழும் வகையில் ரூ.24 லட்சம் செலவில் செல்பி மேடை அமைக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் செல்பி புள்ளையா மாறுங்க:

தமிழகத்தில் புகழ் பெற்ற இடங்களில் மெரினா கடற்கரையும் ஒன்று. குறிப்பாக தமிழக மக்கள் அனைவருக்கும் சென்னையின் பிடித்த இடமாக இருப்பது மெரினாதான். பலரின் சோகத்தை கரைக்கும் கடலின் அலை, புன்னகையை எதிரொலிக்கும் கடலின் ஓசை என்ன எதற்கும் பஞ்சமிருக்காது.

ஜொலிக்கும் கடற்கரை கடைகள், தலைவர்கள் சமாதி என சுத்தி பார்ப்பதற்கு கூடும் கூட்டம் ஏராளம். மேலும் இந்த இடத்தை அலங்கரிக்கும் விதமாக நம்ம சென்னை என்ற டிஜிட்டல் போர்ட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடை மீது ஏறி பொதுமக்கள் ஆர்வமோடு புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பகிரலாம்.

இதேபோல் டெல்லி, ஐதராபாத், பெங்களூர் ஆகிய இடங்களிலும் கட்டமைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. சென்னை மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள நம்ம சென்னை டிஜிட்டல் போர்ட் அமைக்க ஸ்மார்ட் சிட்டி பணி நிதி அளித்துள்ளது. இதன் எடை 2.5 கிலோ ஆகும்.

நம்ம சென்னை செல்பி பலத்த சூறாவளி காற்றையும் தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த செல்பி மேடை சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 10 அடி உயரம், 2 அடி தடிமன், 28 அடி அகலம் கொண்டதாக இருக்கிறது.

நம்ம சென்னை செல்பி மேடையை தமிழக முதலமைச்சர் எடப்பாட பழனிசாமி திறந்து வைத்தார். நம்ம சென்னை செல்பி மேடையில் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் ஆர்வமுடன் கண்டும், புகைப்படம் எடுத்துக் கொண்டும் மகிழ்கின்றனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Chief Minister Edappadi Palanisamy Inaugurated Namma Chennai Selfie Stage at Marina Beach

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X