Home
News

அரசு பள்ளிகளில் வழங்கப்பட்ட டேப்லெட்களில் ஆபாச படங்கள்.!

இந்த டேப்லெட் மாடல்கள் அனைத்தும் இன்டர்நெட் வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

By Prakash S

சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் அனைத்து அரசு பள்ளிகளிலும் தற்சமயம் பயோமெட்ரிக் முறையில் தான் வருகை பதிவேடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இதற்கு வேண்டி ஒவ்வொரு பள்ளிக்கும் டேப்லெட் வழங்கப்பட்டு இருக்கிறது.

அரசு பள்ளிகளில் வழங்கப்பட்ட டேப்லெட்களில் ஆபாச படங்கள்.!

இந்த டேப்லெட்டில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும், குறிப்பாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு இதுவரை 51 ஆயிரம் பள்ளிகளுக்கு டேப்லெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இன்டர்நெட் வசதி

இன்டர்நெட் வசதி

இந்த டேப்லெட் மாடல்கள் அனைத்தும் இன்டர்நெட் வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் இந்த டேப்லெட் மாடல்களை ஆன் செய்தவுடனேயே ஆபாச படங்கள் திரையில் தோன்றி ஓடுகின்றன.

புகார்கள்

புகார்கள்

மேலும் இதைப்பற்றி தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன, எனவே மறு உத்தரவு வரும் வரை இந்த டேப்லெட் மாடல்களை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலேஷ் சோனி

நிலேஷ் சோனி

குறிப்பாக இதைப்பற்றி சத்தீஸ்கர் மாநில தகவல் தொழில்நுட்ப துறை திட்ட மேலாளர் நிலேஷ் சோனி அவர்கள் தெரிவித்தது என்னவென்றால் குறிப்பிட்ட டேப்லெட்களில் யாராவது ஆபாச படம் பார்த்திருக்க வேண்டும், அல்லது டவுன்லோடு செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

விளம்பரங்கள்

விளம்பரங்கள்

மேலும் அவர் தெரிவித்தது என்னவென்றால் இது போன்ற படங்களை பார்த்துகொண்டு இருக்கும் போதே சில விளம்பரங்கள் தோன்றும்,
அதை கிளிக் செய்தால் டேப்லெட்களை ஆக்கிரமித்து ஆபாச படம் தானாகவே தோன்ற ஆரம்பித்து விடும் என்று நிலேஷ் சோனி
தெரிவித்தார்.

சென்னை

சென்னை

மேலும் இதுபோன்ற ஆபாச படங்களை நீக்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, பின்பு இதற்காக சென்னையில் இருந்து நிபுணர் குழு அழைக்கப்பட்டுள்ளது, அவர்கள் வந்து சரி செய்த பின்பு அனுமதி வழங்கப்படும் என்று நிலேஷ் சோனி கூறினார்.

Best Mobiles in India

English summary
Chhattisgarh Govt Schools Complain of Obscene Pictures on Tablets Given to Mark Attendance: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X