இதெல்லாம் பாவம்..மொபைல் போனை மீட்க அணையை காலி செய்த அதிகாரி: நடந்தது இதுதான்.!
இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. குறிப்பாக சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தான் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக அதிநவீன ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றே கூறலாம்.
அதேபோல் சமூகவலைதளங்களில் வித்தியாசமான புகைப்படங்களைப் பதிவிட வேண்டும் என பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். நினைவுகளை சேகரித்து வைக்க புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் காலம் மாறி லைக், கமெண்ட், ஷேர்களுக்காக புகைப்படங்கள் எடுக்கும் காலம் வந்து விட்டது. சமூகவலைதளங்களில் வித்தியாசமான புகைப்படங்களை பதிவிட வேண்டும் என ஒவ்வொருவரும் எடுக்கும் முயற்சி பெரும் ஆபத்துகளை சந்திக்க வழிவகுக்கிறது.

இந்நிலையில் சத்தீஸ்கரில், நீர்த்தேக்கத்தில் விழுந்த விலை உயர்ந்த மொபைல்போனை மீட்க 21 லட்சம் நீரை வெளியேற்ற உத்தரவிட்ட மூத்த அரசு அதிகாரிக்கு, ரூ.53 ஆயிரம் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது இது சார்ந்த தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதாவது சத்தீஸ்கரில், கான்கேர் மாவட்டத்தின் கோயிலிபேடா பகுதியில், உணவுத் துறை அதிகாரியாக இருந்த ராஜேஷ் விஷ்வாஸ், சமீபத்தில் கெர்கட்டா நீர்த்தேக்கத்திற்குச் சென்றார். அப்போது செல்பி எடுக்க முயன்ற போது, கை தவறி அவரது மொபைல் போன் 15 அடி ஆழ நீர்த்தேக்கத்தில் விழுந்தது.
எனவே இந்த போனை மீட்க, இரண்டு டீசல் பம்ப் செட்கள் வாயிலாக, நீர்த்தேக்கத்தில் இருந்த நீரை, மூன்று நாட்களுக்கு ராஜேஷ் வெளியேற்றினார். இதன்படி 1500 ஏக்கர் நிலங்களுக்கு தேவையான 21 லட்சம் லிட்டர் நீர் வீணாக வெளியேற்றப்பட்டது. பின்பு இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து ராஜேஷ் விஸ்வாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், மொபைல் போனில் முக்கிய அரசு தரவுகள் இருந்ததால், உடனே எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக நீரை வெளியேற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அனுமதி வாங்கினேன் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நீர்த்தேக்கத்தில் இருந்து நீரை வெளியேற்ற, ராஜேஷ் விஸ்வாசுக்கு வாய்மொழி உத்தரவு வழங்கிய மூத்த அரசு அதிகாரிக்கு வெறும் 53 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பின்பு இந்த அபராத தொகையை 10 நாட்களுக்குள் நீர்வளத்துறையில் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அறிவார்ந்த உலகம் தண்ணீர் பிரச்சினை குறித்து வருமுன் காக்க தவறினால் நகரங்களில் வீட்டு வாடகை விட தண்ணீருக்கு அதிக பணம் செலவு செய்ய வேண்டும். சமீபகாலமாக மருத்துவத்திற்கும், தண்ணீருக்கும் ஒவ்வொரு குடும்பமும் செய்யும் செலவு அதிகரித்து வருவதை கண்கூடாக காண்கிறோம். ஆனால் தண்ணீரை சேமிக்கவும், சிக்கனமாக பயன்படுத்தவும் யாரும் முன்வருவது இல்லை.
இதே நிலை நீடித்தால் தண்ணீர் பிரச்சினைக்காக பல போராட்டங்களை சந்திக்க வேண்டிவரும். எனவே வருங்கால சந்ததியினருக்குக் குடிநீர் பிரச்சினை என்பது ஏற்படாத வகையில் நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கு தேவையான நிதிகளை ஒதுக்கீடு செய்து கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். பொதுமக்களிடம் தண்ணீர் தேவை குறித்தும், அதனை பெருக்குவதற்கும் விழிப்புணர்வை மாணவ சமுதாயத்தினர் ஏற்படுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications








