சென்னை யூடியூபர் கைது: கோயில் திருப்பணிக்கு ரூ.34 லட்சம் வசூல்- பூதாகரமாகும் விவகாரம்., என்ன நடந்தது?

|

பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் திருப்பணிக்கு என ரூ.34 லட்சம் வரை வசூல் செய்து மோசடி செய்ததாக யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த யூடியூபர் பெயர் கார்த்திக் கோபிநாத் ஆகும். 32 வயதான கோபிநாத்தை இதுதொடர்பாக போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் தகவலின்படி, முதற்கட்ட விசாரணையில் ஆன்லைனில் வசூலித்த பணத்தை தவிர, குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக் கோபிநாத் தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் கிட்டத்தட்ட ரூ.6 லட்சம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் குற்றவாளிகளால் சேதப்படுத்தப்பட்ட சில கோவில்களை பழுதுபார்ப்பதற்கும் புதுப்பிக்கவும் நிதி வசூலித்ததாக கோபிநாத் கூறியதாக போலீஸார் தரப்பு தெரிவித்திருக்கிறது.

அதிகாரிகளிடம் முறையான அனுமதியின்றி வசூல்

அதிகாரிகளிடம் முறையான அனுமதியின்றி வசூல்

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான அனுமதியின்றி தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை சீரமைப்பதற்கு என ஆன்லைன் மூலம் நிதி திரட்டியதாக பிரபல யூடியூபர் கைது செய்யப்பட்டால் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலின் பெயரை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் ரூ.34 லட்சம் வரை வசூல் செய்துள்ளார். மாநிலத்தில் உள்ள கோயில்களின் பாதுகாப்பு இந்து சமய அறநிலையத்துறை (HRCE) துறைக்கு தெரியாமல் பல லட்சங்கள் திரட்டியதற்காக ஆவடி மத்திய குற்றிப்பிரவு போலீஸார் மூலம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலைகளை புதுப்பிப்பதாக கூறி வசூல்

சிலைகளை புதுப்பிப்பதாக கூறி வசூல்

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள கோயில் செயல் அலுவலர் அளித்த புகாரின் பேரில், கோபிநாத் கைது செய்யப்பட்டதாக ஆவடி காவல் ஆணையரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கோபிநாத் "இளைய பாரதம்" என்ற பெயரில் யூடியூப் சேனலை தொடங்கி மதுர காளியம்மன் கோயிலின் சிலைகளை புதுப்பிப்பதாக கூறி முறையான அனுமதியில்லாமல் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த தொகையை கோபிநாத் தனது சொந்த நோக்கத்திற்காக தவறாக பயன்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

மாநில பாஜக தலைவர் அண்ணாமலை

இந்து கைது நடவடிக்கையை தொடர்ந்து, கோபிநாத்துக்கு நெருக்கமானவர் என கூறப்படும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இந்த அப்பாவிகள் அனைவரையும் விட்டுவிட்டு நேராக வருமாறு TN Int PSY - OPS (Psychological Operations) பிரிவு மற்றும் திமுக பிரச்சார சக்திகளை கேட்டுக்கொள்கிறேன்., நான் ஒரு சாதாரண மனிதனாக காத்திருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். இலவச க்ரவுட் சோர்சிங் தளம், சிறுவாச்சூர் கோயில் திருப்பணி என்ற பெயரில் ரூ.33.28 லட்சம் வசூலித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் நிதி கோரி இருந்த மனுவில், "சிறுவாச்சூர் கோயில் சிலைகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன" என குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

15 நாட்கள் நீதிமன்ற காவல்

15 நாட்கள் நீதிமன்ற காவல்

காவல்துறை கைது செய்த கோபிநாத் மீது 420, 406 மற்றும் 66(d) IT Act தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. கோபிநாத் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அமத்தூர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளது. கோபிநாத்தை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஆஜர்படுத்திய பிறகு கோபிநாத் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். அப்போது ஏராளமான பாஜக-வினர் திரண்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்து சமய அறநிலையத் துறையின் செயல் அலுவலருக்குக் கடிதம்

இந்து சமய அறநிலையத் துறையின் செயல் அலுவலருக்குக் கடிதம்

இதுகுறித்து விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தளத்தில் வெளியான தகவலின்படி, கோபிநாத் சமீபத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் செயல் அலுவலருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கோயில் திருப்பணிக்காக வசூலிக்கப்பட்ட பணத்தை வழங்குவதாகத் தெரிவித்துள்லார். ஆனால் "அரசு கோயிலின் பாதுகாவலர்கள் இருக்கும் போது கோபிநாத் தனது சொந்தக் கணக்கில் பணத்தை வசூலிக்கக் கூடாது என கூறி, செயல் அலுவலர் அதை ஏற்க மறுத்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Chennai Youtuber Arrest For Raises Temple Renovation Fund without Permission

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X