அடடே.,ரோபோவுக்கு இப்படி கூட கோபம் வருதா? சென்னை மாணவர் உருவாக்கிய சூப்பர் ரோபோ.!

|

தற்போது நாட்டில் பல்வேறு துறைகளில் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சில இடங்களில் மனிதர்களுக்கு மிகவும் உதவியாய் இருக்கிறது இந்த ரோபோக்கள். அதேபோல் ரோபோக்கள் வளர்ச்சியும் பங்கெடுப்பும் பிரதான வகையில் முன்னேறிக் கொண்டு வருகிறது.

ரோபா

ரோபா

சுருக்கமாக கூறவேண்டும் என்றால், உலோக பாகங்களை நகர்த்துவதில் இருந்து காபி வழங்குவது வரை அனைத்து பயன்பாடுகளிலும் ரோபோ பங்காற்றத் தொடங்கி விட்டது. மேலும் இப்போது ரோபாடிக்ஸ் துறையில் மனிதர்களின் கண்டுபிடிப்பும் பங்காற்றலும் பெருமளவு முன்னேறி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

கோடீஸ்வரர் பில்கேட்ஸ் பயன்படுத்தும் போன் இதுதான்- ஐபோன் இல்ல., அவரே இதைதான் யூஸ் பண்றாரு!கோடீஸ்வரர் பில்கேட்ஸ் பயன்படுத்தும் போன் இதுதான்- ஐபோன் இல்ல., அவரே இதைதான் யூஸ் பண்றாரு!

சென்னையைச் சேர்ந்த மாணவன்

சென்னையைச் சேர்ந்த மாணவன்

இந்நிலையில் தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த மாணவன் பிரதீக் உணர்ச்சிகளைக் கொண்ட ஒரு ரோபோவை வடிவமைத்துள்ளார். குறிப்பாகஇந்த ரோபோவுக்கு ரஃபி என்று பெயரிட்டுள்ளார் அந்த மாணவர்.

ரெடியா., இந்தியாவில் ஹைப்பர்லூப்- விமான வேகம் பயணம்: சென்னை ஐஐடி உடன் கூட்டு சேர்ந்த இந்தியன் ரயில்வே!ரெடியா., இந்தியாவில் ஹைப்பர்லூப்- விமான வேகம் பயணம்: சென்னை ஐஐடி உடன் கூட்டு சேர்ந்த இந்தியன் ரயில்வே!

 ரோபோவை திட்டினால்?

ரோபோவை திட்டினால்?

குறிப்பாக இந்த ரோபோ உங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும். நீங்கள் ரோபோவை திட்டினால்,மன்னிப்பு கேட்கும் வரை உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காது. அதேபோல் நீங்கள் சோகமாக இருந்தாலும் ரோபோவால் புரிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார் மாணவர் பிரதீக் .

முதல் 5ஜி வீடியோ கால்: சென்னை ஐஐடியில் வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தார் அமைச்சர் அஷ்வினி வைனவ்! வீடியோ.!முதல் 5ஜி வீடியோ கால்: சென்னை ஐஐடியில் வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தார் அமைச்சர் அஷ்வினி வைனவ்! வீடியோ.!

முகத்தை அடையாளம் காணும் திறன்

முகத்தை அடையாளம் காணும் திறன்

மேலும் முகத்தை அடையாளம் காணும் திறன், பேச்சை உள்வாங்கி அதற்கு பதில் அளிக்கும் திறன், நாம் பேசும் போது உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறன் ஆகியவை இந்த ரோபோவின் அடிப்படை திறனாக உள்ளது.

உங்கள் போனில் இந்த 7 ஆப்ஸ்களை உடனே டெலிட் செய்யவும்.! பேஸ்புக் பாஸ்வேர்டை திருடும் எனத் தகவல்.!உங்கள் போனில் இந்த 7 ஆப்ஸ்களை உடனே டெலிட் செய்யவும்.! பேஸ்புக் பாஸ்வேர்டை திருடும் எனத் தகவல்.!

தற்போது குழந்தையை போல் செயல்படும் இந்த ரஃபி ரோபோ வரும்காலத்தில் தொழில்நுட்ப கனவுகளை சீக்கிரம் கைகளுக்கு எடுத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு நடமாடும் ரோபோக்கள்

இரண்டு நடமாடும் ரோபோக்கள்

அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு வழிகாட்ட இரண்டு நடமாடும் ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவ்வளவு தான் வாழ்க்கை- ஒரே ஒரு புகைப்படத்தில் மொத்த வாழ்க்கை தத்துவம்: ஆனந்த் மஹிந்திரா டுவீட் வைரல்!இவ்வளவு தான் வாழ்க்கை- ஒரே ஒரு புகைப்படத்தில் மொத்த வாழ்க்கை தத்துவம்: ஆனந்த் மஹிந்திரா டுவீட் வைரல்!

பயணிகளுக்கு உதவ பயன்படும்

பயணிகளுக்கு உதவ பயன்படும்

குறிப்பாக இரண்டு ரோபோக்களும் பயணிகளுக்கு உதவ பயன்படும். அதாவது பயணிகளுக்கு தேவையான தகவல்கள், விமான நிலையத்தில் உள்ள வசதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை மேற்கொள்ளும் இந்த ரோபோக்கள். குறிப்பாக இப்போது ஆங்கில கட்டளைக்கு மட்டுமே செயல்படுகிறது இந்த ரோபோ. ஆனால் விரைவில் தமிழ் மொழியிலும் இந்த ரோபோக்கள் செயல்படும்.

"உழைக்காமல் வளரமுடியாது" யாரும் இந்த மோசடியில் சிக்க வேண்டாம்., குறிப்பாக போலீஸ்- தமிழக டிஜிபி அதிரடி!

செயற்கை நுண்ணறிவு

மேலும் இந்த ரோபோக்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில், பயணிகளின் கேள்விகளுக்கு ஒலி வடிவிலான பதில்களை தரும். பின்பு விமான நிலையம் வரும் பயணிகளை அணுகி அவர்களின் தேவைகளை கேட்கும் என்றும், பயணிகள் உதவி மையத்துடன் தொடர்புகொண்டு பேச உதவும் என்றும் கூறப்படுகிறது.

மனிதன் முடிவு செய்கிறான்

மனிதனுக்கு தேவையான பணிகளை செய்ய உயிருள்ள மனிதனை விட வேகமும், திறனும் நிறைந்த ஒரு உயிரற்ற மின்னணு கருவி தான் ரோபோ. குறிப்பாக மனிதனால் உருவாக்கப்படும் இந்த ரோபோ எந்தெந்த வேலைகளை செய்ய வேண்டும் என்பதை அதனை உருவாக்கும் மனிதன் முடிவு செய்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

photo courtesy: ANI

Best Mobiles in India

English summary
Chennai student who designed a robot : it doesn't answer queries if scolded: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X