ஸ்மார்ட்போன் திருடிய சிறுவனுக்கு பரிசு வழங்கிய போலீசார்! எதற்காக தெரியுமா?

|

சென்னை பள்ளி மாணவர் ஒருவர் மொபைல் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மாணவனை விசாரித்த அதிகாரி, போனை திருடிய மாணவன் சொன்ன கதையைக் கேட்டு அவருக்கு மொபைலை பரிசாக வழங்கியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி அந்த பள்ளி மாணவன் அதிகாரிகளிடம் என்ன சொன்னான் தெரியுமா?

போன் பறிப்பில் ஈடுபட்ட பள்ளி சிறுவன்

போன் பறிப்பில் ஈடுபட்ட பள்ளி சிறுவன்

நேற்று சென்னையில் ஒரு பள்ளி சிறுவன் போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விசாரித்தபோது சில உண்மைகள் தெரியவந்துள்ளது. அந்த சிறுவனுக்கு படிப்பில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. ஆனால் ஏழை மாணவன் என்பதால், சமயத்தில் நடத்தப்பட்டு வரும் ஆன்லைன் வகுப்புகளில் பங்குபெற அவரிடம் மொபைல்போன் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

13 வயது மாணவருக்கு செல்போன் அவசியம்

13 வயது மாணவருக்கு செல்போன் அவசியம்

பள்ளிச் சிறுவனின் தந்தை சென்னையில் உள்ள ஒரு பிஸ்கட் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அதேபோல், மாணவனின் தாய் அருகில் உள்ள வீடுகளில் வேலை செய்து வருகிறார். அரசுப் பள்ளியில் படித்து வரும் 13 வயது மாணவருக்கு செல்போன் அவசியம் என்ற நிலையில் தனது பெற்றோரிடம் கேட்டிருக்கிறார். ஆனால், அதற்கு நம்மிடம் வசதி இல்லை என்று பெற்றோரும் பதில் அளித்து விட்டனர்.

மீண்டும் விலைகுறைப்பை அறிவித்துள்ள டாடா ஸ்கை நிறுவனம்.! முழுவிவரம்.!மீண்டும் விலைகுறைப்பை அறிவித்துள்ள டாடா ஸ்கை நிறுவனம்.! முழுவிவரம்.!

வருத்தத்தில் இருந்த சிறுவன்

வருத்தத்தில் இருந்த சிறுவன்

கொரோனா காலத்தில் நடத்தப்பட்டு வரும் ஆன்லைன் வகுப்புகளில் மாணவனால் பங்குபெற முடியவில்லை என்ற வருத்தத்திலிருந்திருக்கிறார். பள்ளி மாணவனிடம் ஸ்மார்ட் போன் இல்லாத காரணத்தினால், அதை சாக்காக வைத்து அந்த சிறுவனை உள்ளூர் ரவுடிகள் இருவர் தவறாக வழி நடத்தி உள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுவனுக்கும், ரவுடிகளுக்கும் எப்படி தொடர்பு?

சிறுவனுக்கும், ரவுடிகளுக்கும் எப்படி தொடர்பு?

மாணவன் இருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 2 ரவுடிகள் மொபைல் பறிக்கும் வேலையை பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர். பள்ளி சிறுவனுக்கும், ரவுடிகளுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது தெளிவாக தெரியவில்லை, ஆனால் போன் பறிப்பில் தங்களுக்கு உதவி செய்தால் சிறுவனுக்கு மொபைல் போன் கொடுப்பதாகக் கூறி ஏமாற்ற வார்த்தை பேசி சிறுவனின் மனதைக் குழப்பியுள்ளனர்.

போலீசாரிடம் சிக்கிய மாணவன்

போலீசாரிடம் சிக்கிய மாணவன்

மாணவனும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், ஸ்மார்ட்போன் கிடைத்தால் போதும் என்ற நோக்கத்தில், ரவுடிகள் கூறியபடி மொபைல் பறிப்பில் ஈடுபட்டிருக்கிறார். சிறுவன் மொபைல் பறிப்பில் ஈடுபட்டபோது காவல்துறையிடம் சிக்கிக்கொண்டார். அதிகாரிகள் சிறுவனை பிடித்து விசாரணை செய்த போது, சிறுவன் ஏன் போன் பறிப்பில் ஈடுபட்டான் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

100-க்கும் அதிகமான பெண்களிடம் ஆபாச பேச்சு., கல்லூரி மாணவிகள் டார்கெட்: ஒரே ஒரு சிம்கார்ட் டுவிஸ்ட்!100-க்கும் அதிகமான பெண்களிடம் ஆபாச பேச்சு., கல்லூரி மாணவிகள் டார்கெட்: ஒரே ஒரு சிம்கார்ட் டுவிஸ்ட்!

பரிசு வழங்கிய போலீசார்

பரிசு வழங்கிய போலீசார்

சிறுவனை போன் பறிப்பில் ஈடுபடுத்திய இரண்டு ரவுடிகளையும் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.சிறுவன் தனது பிரச்சனையை காவல்துறை அதிகாரியிடம் விளக்கியுள்ளான், சிறுவனின் கதையை கேட்ட காவல் அதிகாரி அவன் கல்வி கற்க உதவும் வகையில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Chennai School Boy Who Caught For Mobile Snatching Receives New Smartphone As A Gift From Tamil Nadu Police : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X