ஹலோ வங்கி மேலாளர் பேசுறேன்மா.. 9 பேரிடம் பண மோசடி.. பணம் மீண்டும் கிடைத்தது எப்படி?

|

சென்னையில் வசிக்கும் நபர்களிடம் ஒரு கும்பல் போனில் தொடர்பு கொண்டு, வங்கி மேலாளர் பேசுவதாகக் கூறி அடுத்தடுத்து 9 பேரின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை அபேஸ் செய்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளது. பணத்தை இழந்தவர்கள் போலீசில் புகார் அளித்து, இவர்கள் இழந்த பணத்தை கீழ்ப்பாக்கம் சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீஸார் பத்திரமாக மீட்டுக் கொடுத்துள்ளனர்.

வங்கி மேலாளர் பேசுகிறேன் என்று பேசிய அடையாளம் தெரியாத நபர்

வங்கி மேலாளர் பேசுகிறேன் என்று பேசிய அடையாளம் தெரியாத நபர்

சென்னையில் உள்ள சூளை, சாமிபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் கன்னியம்மாள், இவர் அதேபகுதியில் உள்ள ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறார். இவரின் சேமிப்பு கணக்கிற்குச் சொந்தமான ஏடிஎம் கார்டும் பத்திரமாக அவரிடம் இருந்துள்ளது. கன்னியம்மாள் போனிற்கு சென்ற வாரம் 12ம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அழைத்து, வங்கி மேலாளர் பேசுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

 வங்கி கணக்கு விபரம் மற்றும் ஏடிஎம் கார்டு விவரங்கள்

வங்கி கணக்கு விபரம் மற்றும் ஏடிஎம் கார்டு விவரங்கள்

வங்கி மேலாளர் பேசுகிறேன் என்று கேட்டவுடன் கன்னியம்மாள் என்ன விஷயம் என்று கேட்டிருக்கிறார். மறுமுனையில் பேசிய போலி வங்கி மேலாளர், கன்னியம்மாளின் வங்கி கணக்கு விபரம் மற்றும் ஏடிஎம் கார்டு விவரங்களை உடனடியாக தெரிவிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார்.

என்ன நேக்கா ஆட்டையை போட பாத்தப்பா.. டெலிவரி செய்யவேண்டிய போனை அபேஸ் செய்த Amazon டெலிவரி பார்ட்னர்..என்ன நேக்கா ஆட்டையை போட பாத்தப்பா.. டெலிவரி செய்யவேண்டிய போனை அபேஸ் செய்த Amazon டெலிவரி பார்ட்னர்..

ஏடிஎம் கார்டு முடக்கப்படும்.. மிரட்டல்

ஏடிஎம் கார்டு முடக்கப்படும்.. மிரட்டல்

அவர் கேட்கும் தகவலைக் உடனே கொடுக்காவிட்டால் கன்னியம்மாளின் ஏடிஎம் கார்டு முடக்கப்படும் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.கன்னியம்மாளும் பேசுவது போலி வங்கி மேலாளர் என்பதை அறியாமல், அவர் கேட்டபடி ஏடிஎம் கார்டு விவரங்களைக் கொடுத்திருக்கிறார். பிறகு கன்னியம்மாளின் போனிற்கு வந்த OTP எண்ணையும் அந்த நபர் கேட்க, கன்னியம்மாளும் OTP எண்களை கூறியிருக்கிறார்.

கணக்கிலிருந்து மாயமான பணம்

கணக்கிலிருந்து மாயமான பணம்

அழைப்பு துண்டிக்கப்பட்ட சிறிது நேரத்தில் கன்னியம்மாளின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.49,999 பணம் ஆன்லைன் மூலம் எடுக்கப்பட்டுள்ளது என்று மெசேஜ் வந்துள்ளது.மெஸ்ஸகை பார்த்து அதிர்ந்து போன கன்னியம்மாள், உடனடியாக கீழ்ப்பாக்கம் சைபர் கிரைம் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

Google Maps சொன்னா சரியா தான் இருக்கும் என்று நம்பி போனவர் கதி.. கண்மூடித்தனம் வேண்டாம் மக்களே..!Google Maps சொன்னா சரியா தான் இருக்கும் என்று நம்பி போனவர் கதி.. கண்மூடித்தனம் வேண்டாம் மக்களே..!

சைபர் கிரைம் போலீஸார் நடத்திய விசாரணை

சைபர் கிரைம் போலீஸார் நடத்திய விசாரணை

இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார், கன்னியம்மாள் கணக்கு வைத்திருக்கும் வங்கியை தொடர்பு கொண்டு, மோசடி செய்யப்பட்டுள்ளதைத் தெரிவித்து உரிய வழிகாட்டுதலின் படிப் பணத்தைத் திரும்பிக் கொடுக்கும்படி வங்கிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளது.

பணம் திரும்பிப் பெற்றுக்கொடுக்கப்பட்டதா?

பணம் திரும்பிப் பெற்றுக்கொடுக்கப்பட்டதா?

சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகத்தினரும், கன்னியம்மாள் இழந்த ரூ.49,999 பணத்தை வங்கிக் கணக்கிற்கு உடனடியாக செலுத்தியுள்ளார். கன்னியம்மாள் உட்பட கீழ்பாக்கம் பகுதியில் இதுவரை சுமார் 9 நபர்கள் பணத்தை இதுபோல் இழந்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கியிடமிருந்து பணம் திரும்பிப் பெற்றுக்கொடுக்கப்பட்டதாகவும் கீழ்ப்பாக்கம் சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Chennai Online Frauds Kilpauk Cyber Crime Police Taking Action Immediately : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X