பஸ் டிக்கெட் பெற புது வசதி அறிமுகம்.. ரொக்கம் இல்லாத பயணம்.. சென்னையில் ETM மூலம் டிக்கெட்.. பயணிகள் மகிழ்ச்சி
பொதுமக்கள் ஆனந்தம். சென்னையில் உள்ள அணைத்து பொதுப்பெருந்துகளிலும் இனி மின்னணு இயந்திரங்கள் (Electronic ticket machine) மூலம் பயணிகள் கட்டணம் செலுத்தி, அவர்களுக்குரிய பயணசீட்டை (ticket) பெற்றுக்கொள்ளும் டிஜிட்டல் பேமெண்ட் டிக்கெட் சேவை (digital payment ticket service) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எந்த ஆண்டிலும் இல்லாத அளவில், இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் பல திருத்தங்கள், பல புதிய விதிமுறைகள், மற்றும் ரூல்ஸ்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிமுகம் செய்துள்ளன. சில புதிய மாற்றங்களை மக்கள் ஏற்க மனம் மருதாலும், ஒரு சில மாற்றங்களை மக்கள் மகிழ்ச்சியோடு ஏற்க துவங்கியுள்ளனர். அப்படி மக்கள் மகிழ்ச்சியோடு ஏற்க துவங்கிய மாற்றம் தான் பொதுப்பெருந்துகளில் அறிமுகம் செய்யப்பட்ட டிஜிட்டல் பேமெண்ட் டிக்கெட் சேவை.

சென்னையில் ETM மூலம் டிக்கெட்.. பயணிகள் மகிழ்ச்சி:
ஜூன் 2 ஆம் தேதி முதல், தமிழ்நாடு பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (எம்டிசி - MTC) மின்னணு டிக்கெட் இயந்திரங்களை (ETM) சென்னை முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய முறைத்தபடி பொதுமக்கள் இனி ரொக்கமாக பணம் அல்லது காசு கொடுக்காமல், நேரடியாக டிஜிட்டல் பேமெண்ட் சேவை மூலம் கட்டணத்தை செலுத்தி, பயணசீட்டை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சி டிக்கெட் செயல்திறனை மேம்படுத்துவதையும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இனி பொதுப்பெருந்துகளில் சில்லறை தட்டுப்பாடு ஏற்படாது என்றும், மிச்ச சில்லறைக்காக பயணிகள் காத்திருந்து நடத்துனரிடம் கேள்வி எழுப்ப வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தை மேம்படுத்த தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.
அதில் முக்கிய மாற்றமாக பயணசீட்டு வழங்கும் முறையில் சில மாறுபாடுகளை தமிழக அரசு கொண்டு வர முயற்சி செய்து வந்தது. இதற்கான சோதனையை பல மாதங்களுக்கு முன்பாக தமிழக போக்குவரத்துக்கு கழகம் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, சென்னையில் உள்ள எல்லா அரசு பேருந்துகளிலும் டிஜிட்டல் கட்டண விருப்பத்தின் மூலம் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெரும் சேவை அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

இனி பஸ் டிக்கெட் பெற ரொக்கம் தேவையில்லை.. டிஜிட்டல் பேமெண்ட் மூலம் டிக்கெட் அறிமுகம்:
பயணிகள் இப்போது டெபிட் கார்டுகள் (debit card), கிரெடிட் கார்டுகள் (credit card), யுபிஐ (UPI), கூகுள் பே (Google Pay) மற்றும் போன்பே (PhonePe) போன்ற மொபைல் ஆப்ஸ்களை பயன்படுத்தி டிக்கெட்டுகளை பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, எல்லா நடத்துனர்களிடமும் பிரத்தியேக ETM கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. முதன்முதலில் சோதனை அடிப்படையில் பிப்ரவரியில் இவை குறைந்த எண்ணிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஜூன் 2ம் தேதிக்கு பிறகு, சென்னையில் உள்ள 32 டிப்போக்களிலும் இவை முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களின் உதவியுடன் பொதுமக்கள் UPI, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி டிக்கெட்டுகளை வாங்கலாம். ரொக்கமாக பணம் கொடுத்து டிக்கெட் வாங்கும் பழைய முறையும் செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய ETM கருவிகளை இயக்க பேருந்து நடத்துனர்களுக்கு பயிற்சி அழைக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி நடத்துனர்கள் மற்றும் பயணிகள் இருவருக்கும் ஒரு மென்மையான மாற்றத்தை உறுதி செய்யும் என்று தமிழக போக்குவரத்து கழகம் நம்புவதாக தெரிவித்துள்ளது. இனி சென்னை மாநகரப் பேருந்துகளில் பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்கலாம். பயணிகளுக்கு ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டாலோ அல்லது பயணத்தின் போது ஏதேனும் கேள்விகள் இருந்தாலோ, உதவிக்கு 149 என்ற ஹெல்ப்லைன் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








