சிங்கப்பூர் போல மாறும் சென்னை.. MTC பேருந்தில் புது சேவை.. மேம்படும் மொபைல் ஆப்ஸ் சேவை.. மக்களே கவனியுங்க..
சென்னையை (Chennai) சிங்கப்பூர் போல மாற்றம் செய்யும் பல வேலைகளை தமிழக அரசு மும்முரமாக செய்து வருகிறது. அதில் குறிப்பிட்டு கூறும் வகையில், சென்னை மாநகர பேருந்து (Chennai MTC bus service) சேவையில் புதிய மேம்படுத்தல்களை பொதுமக்கள் விரைவில் காணவிருக்கிறார்கள். சென்னை பொது பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் போக்குவரத்தை பயணத்தை சிறப்படைய செய்யும் வகையில் இரண்டு முக்கியமான சேவைகளை ஒரே மொபைல் ஆப்ஸ் மூலம் கிடைக்க செய்யும் வேலையை தமிழக போக்குவரத்து கழகம் மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில், புறநகர் மின்சார ரயில்கள் (local electric trains), மெட்ரோ ரயில்களில் (metro trains) என்று என்ன தான் புதிய-புதிய போக்குவரத்து சேவை நடைமுறைக்கு வந்தாலும், இன்னும் எல்லா இடங்களுக்கும் செல்லும் ஒரே சேவையாக சென்னை மாநகர போக்குவரத்துக்கு சேவை மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. MTC இன் கீழ் மொத்தமாக 3688 பேருந்துக்குள் இயக்கப்படுகிறது. இதில் 3492 பேருந்துகள் (bus) ஒவ்வொரு நாளும் சராசரியாக இயக்கப்படுகின்றன.

சிங்கப்பூர் போல மாறும் சென்னை.. MTC பேருந்தில் வரப்போகுது புது சேவை:
MTC தினசரி சுமார் 830 வழித்தடங்களில் 5000 சேவைகளை இயக்குகிறது.அதிகப்படியான மக்கள் பேருந்து மூலமாகவே ஒவ்வொரு நாளும் பயணிக்கிறார்கள். ஆகையால், சென்னை மக்களின் பேருந்து பயணத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், புதிய மொபைல் ஆப்ஸ் சேவையை (MTC bus mobile apps) அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சென்னை பொது பேருந்துகளில் விரைவில் மொபைல் ஆப்ஸ் மூலம் டிக்கெட் புக்கிங் (ticket booking) மற்றும் பஸ் டிராக்கிங் (bus location tracking) போன்ற சேவைகளை மக்கள் அணுக முடியுமென்று கூறப்பட்டுள்ளது.
தற்போது, சென்னை பஸ் ஆப்ஸ் (Chennai bus apps) மூலம் பேருந்து எந்த இடத்தில் இருக்கிறது? எப்போது பயனர் இருக்கும் பேருந்து நிலையத்தை வந்தடையும்? என்பது போன்ற தகவலை இந்த ஆப்ஸ் காண்பிக்கிறது. இருப்பினும், இதில் காண்பிக்கப்படும் நேரம் மற்றும் பேருந்தின் லொகேஷன் (MTC bus live location) துல்லியமாக இருப்பதில்லை என்று பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். ஆகையால், பொதுமக்களின் புகார்களுக்கு செவி சாய்த்து, சென்னை பேருந்து போக்குவரத்துக்கு கழகம் சென்னை பஸ் ஆப்ஸ் பஸ் டிராக்கிங் சிஸ்டத்தை (chennai bus tracking system) மேலும் ஒரு படி முன்னேறி மேம்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
எல்லா போக்குவரத்திற்கும் ஒரே டிக்கெட் சேவை:
புதிய ஜிபிஎஸ் டிராக்கர்களை (GPS trackers) பேருந்தில் நிறுவுவதன் மூலம், மக்களுக்கு துல்லியமான ட்ராக்கிங் காண்பிக்கப்படும். அதேபோல, மெட்ரோ, புறநகர் ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் வகையில் சென்னைக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டத்தை வகுப்பது தொடர்பான நடவடிக்கைகளை சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் (கும்டா) மேற்கொண்டு வருகிறது.
இது ஒரு புறம் இருக்க, பயணிகளின் போகோவரத்தை எளிமையாக்கும் நோக்கத்தில் ஒரே ஆப்ஸ் இல் எல்லா சேவைளையும் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில், பொது பேருந்துகளில் பயணிக்க தேவையான டிக்கெட்டை முன்பதிவு செய்ய அனுமதிக்கும், அதே நேரத்தில், பயணிகள் பயணிக்க விரும்பும் பேருந்தின் லைவ் லொகேஷன் (bus live location) மிகவும் துல்லியமாக காண்பிக்கப்படும் வகையில், ஒரே மொபைல் ஆப்ஸ் மூலம் இந்த சேவைகள் அணுக கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரூந்து நிலையங்களில் LED டிஸ்பிளே:
இது தவிர, பயணிகள் தங்கள் புகார்கள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்க ஒரு பிரத்தியேக சேவையும் இதில் இணைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.அதேபோல், சென்னை பேருந்து நிலையங்களில் விரைவில் LED டிஸ்பிளே திரைகள் (LED display boards) நிறுவப்பட்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த வழி தடத்தில் வரும் அணைத்து பேருந்துகளின் விபரம், அந்த பேருந்து வந்து சேரும் நேரம், லைவ் லொகேஷன் போன்ற தகவல்கள் இந்த டிஸ்பிளேவில் காண்பிக்கப்டும் என்று கூறப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 500 LED டிஸ்பிளேக்கள் நிறுவப்பட்டுள்ளது என்றும், அந்த சோதனை திருப்திகரமாக முடிந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. விரைவில் பல இடங்களில் இவை நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. QR ஸ்கேன் மூலம் டிக்கெட் எடுப்பது, பேருந்தின் லைவ் லொகேஷன் மற்றும் பேருந்து நிலையங்களில் LED டிஸ்பிளே போன்ற அம்சங்களை நாம் சிங்கப்பூர் பேருந்து நிலையங்களில் பார்க்க முடிகிறது. அதேபோன்ற சேவை விரைவில் சென்னையை மாற்றம் செய்ய போகிறது என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








