இந்த ஸ்மார்ட்வாட்ச் கையில் இருந்தா போதும்: சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய தடைகளே இல்லை!

|

சென்னை மெட்ரோ ரயிலில் பயணத்தின்போது நேரடி தொடர்புகளை தடுக்க ஸ்மார்ட் கைக்கடிகாரம் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளன.

மெட்ரோ ரயில் பயணம்

மெட்ரோ ரயில் பயணம்

மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாமல் பயணச்சீட்டு பெற்று பயணிக்க புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்ய சென்னை மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் ரயில் சேவை

செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் ரயில் சேவை

கொரோனா பரவலை தடுக்க மார்ச் 22 ஆம் தேதி முதல் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த சேவையானது செப்டம்பர் 7 ஆம் தேதிமுதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ரயில் சேவை இயங்கும் வழித்தடம் குறித்து பார்க்கையில் சென்னை விமானநிலையம்- வண்ணாரப்பேட்டை வரையிலும், பரங்கிமலையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரையிலும் ரயில்கள் இயக்கப்பட்டன.

1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள்

1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள்

சென்னை மெட்ரோ பயணம் மீண்டும் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் பயணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் பயணத்தின்போது மக்கள் ஒருவருக்கொரான நேரடி தொடர்புகளை தடுக்க க்யூஆர் கோட் முறை, ஸ்மார்ட் கார்ட் வாங்குவது போன்ற தொடர்பில்லா பயணச்சீட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய ஸ்மார்ட் வாட்ச்

புதிய ஸ்மார்ட் வாட்ச்

கூடுதலாக தொடர்பு இல்லாமல் பயணச்சீட்டு பெற்று பயணிக்கும் முறையாக புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்ய சென்னை மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

SBI அதிரடி அறிவிப்பு: இனி பணம் எடுக்க ATM-ஐ மட்டும் பயன்படுத்த வேண்டாம்! ADWM கூட இருக்கே!SBI அதிரடி அறிவிப்பு: இனி பணம் எடுக்க ATM-ஐ மட்டும் பயன்படுத்த வேண்டாம்! ADWM கூட இருக்கே!

ஸ்மார்ட் வாட்ச் செயல்பாட்டு முறை

ஸ்மார்ட் வாட்ச் செயல்பாட்டு முறை

ஸ்மார்ட் வாட்ச் முறை மெட்ரோ ரயில் நிலையங்களில் இரண்டு மாதங்களில் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாட்ச் அடையாள ரேடியோ அதிர்வெண் சிப்புடன் பொருத்தப்பட்டிருக்கும். இது ஸ்மார்ட்கார்ட் போன்ற முறையாகும்.

ஸ்மார்ட் வாட்ச்சில் சிப் பொருத்தப்பட்டிருக்கும்

ஸ்மார்ட் வாட்ச்சில் சிப் பொருத்தப்பட்டிருக்கும்

ஸ்மார்ட் வாட்ச்சில் சிப் பொருத்தப்பட்டிருக்கும் இது ஸ்மார்ட் கார்டு போல் தானாகவே கட்டணத்தை வசூலித்துக் கொள்ளும். டாப்-அப் செய்யும் முறை குறித்து பார்க்கையில் ஸ்மார்ட் வாட்ச்சை ரீசார்ஜ் செய்வதற்காக டிக்கெட் கவுன்ட்டர் ஊழியரிடம் கொடுக்க வேண்டும். டிக்கெட் வழங்கும் இயந்திரம் மூலமாக டாப்-அப் செய்யமுடியும் என தெரிவிக்கப்படுகிறது.

நேரடி தொடர்புகள் தவிர்க்க நடவடிக்கை

நேரடி தொடர்புகள் தவிர்க்க நடவடிக்கை

கொரோனா பரவலைத் தடுக்க ஒருவருக்கொருவரான நேரடி தொடர்புகள் தவிர்க்கப்படும் எனவும் அதோடு இதன்மூலம் நேரம் சேமிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச் பரிசோதனையானது இரண்டு மாதங்களில் தொடங்கும் என கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Chennai Metro Train Going to Allows Smart Watch Ticketing Method to Without Contact

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X