10 நிமிடத்தில் ஒரு படம் டவுன்லோட்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அட்டகாச ஆப்!

|

பேருந்து, மின்சார ரயில் மட்டுமின்றி தற்போது மெட்ரோ ரயில் பல்வேறு பகுதிகளிலும் பெருமளவு அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. இருப்பினும் சாலை போக்குவரத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தே காணப்படுகிறது.

இருசக்கர வாகனம் அல்லது காரில் கவனம் செலுத்தும் மக்கள்

இருசக்கர வாகனம் அல்லது காரில் கவனம் செலுத்தும் மக்கள்

பொதுவாக அலுவலகத்துக்கு செல்பவர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தினால். தாங்கள் பயன்படுத்தப்படும் இருசக்கர வாகன பெட்ரோல், சாலை போக்குவரத்து நெரிசல் அதுமட்டுமின்றி இருசக்கர வாகனம் வெளியிடும் புகையினால் ஏற்படக் கூடிய விளைவு ஆகியவைகளை கட்டுப்படுத்தலாம்.

போக்குவரத்து நெரிசல்கள் அதிகரிப்பு

போக்குவரத்து நெரிசல்கள் அதிகரிப்பு

பொதுபோக்குவரத்து பல்வேறு வகையில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் சாலையில் செல்லும் வாகன நெரிசல்களும் அதிகரித்துக் கொண்டே தான் காணப்படுகிறது. இதை கட்டுபடுத்துவதற்கு பெரும்பாலானோரை பொது போக்குவரத்து பயன்படுத்த வைப்பதே ஒரே வழி என்பதில் சந்தேகம் இல்லை.

அடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா?-ரிசர்வ் வங்கி பதில்அடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா?-ரிசர்வ் வங்கி பதில்

சென்னை மெட்ரோவில் அட்டகாச அறிமுகம்

சென்னை மெட்ரோவில் அட்டகாச அறிமுகம்

அதன்படியான அறிமுகம் ஒன்று சென்னை மெட்ரோவால் வெளியிடப்பட இருக்கிறது. ரயிலில் பயணம் செய்யும் போது வீடியோக்கள், திரைப்படங்களை இலவசமாகப் பார்க்கவும் டவுன்லோடு செய்யவும் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பயணிகளைக் கவரும் விதமாக இந்தத் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

வைபை மூலம் திரைப்படங்கள், வீடியோக்கள்

வைபை மூலம் திரைப்படங்கள், வீடியோக்கள்

இதற்காகவென்றே உருவாக்கப்படும் வைபை மூலம் திரைப்படங்கள், வீடியோக்களை பார்க்கவும் பதிவிறக்கம் செய்யவும் முடியும். இந்த வசதி இந்த வார இறுதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

sugarbox app அறிமுகம் செய்யும் மெட்ரோ

sugarbox app அறிமுகம் செய்யும் மெட்ரோ

இதை பயணிகள் பயன்படுத்த வேண்டிய செய்யவேண்டியது என்னவென்றால் சுகர்பாக்ஸ் என்ற ஆப்-ஐ (sugarbox app) டவுன்லோடு செய்து ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். அதன் பிறகு இந்த வைபை மூலம் வீடியோக்களை இலவசமாகப் பார்க்கலாம்.

தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகள்

தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகள்

அதுமட்டுமின்றி இந்த வைபை மூலம் தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளை பயன்படுத்தி வீடியோக்கள் பார்க்கலாம், டவுன்லோட் செய்யலாம். அதுமட்டுமின்றி பயணிகள் தொலைக்காட்சித் தொடர்கள் முதல் திரைப்படங்களை பயணத்தின் போதே பார்க்கலாம் அல்லது டவுன்லோடு செய்து வைத்துக் கொண்டு ஆஃப் லைனிலும் பார்க்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Jio vs Airtel vs Vodafone: இனி புலம்பல் வேண்டாம்., இதான் ஒரே தீர்வு-அந்த திட்டத்திற்கு எது சிறந்தது?Jio vs Airtel vs Vodafone: இனி புலம்பல் வேண்டாம்., இதான் ஒரே தீர்வு-அந்த திட்டத்திற்கு எது சிறந்தது?

திரைப்படம் ஒன்றை டவுன்லோட் செய்ய 10 நிமிடங்கள்

திரைப்படம் ஒன்றை டவுன்லோட் செய்ய 10 நிமிடங்கள்

இதில் குறிப்பிடத்தகுந்த சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், திரைப்படம் ஒன்றை டவுன் லோடு செய்ய ஆகும் நேரம் வெறும் 10 நிமிடங்கள்தான். இந்த ஆப் அதிவேக டவுன்லோடு வசதி கொண்டதாகும் என தெரிவிக்கப்படுகிறது. பயணத்தின் போது பயணிகளை மகிழ்விப்பது மட்டுமின்றி மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த ஊக்குவிப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Chennai metro rail is set to launch sugarbox app for passengers!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X