ஆர்டர் செய்த மொபைல் வீட்டுக்கு வந்தது: திறந்து பார்த்தா?-ஒரு மனசாட்சி வேண்டாமா?

|

தனது மகளின் ஆன்லைன் வகுப்பிற்காக தந்தை மொபைலன் போனை ஆர்டர் செய்துள்ளார். அவர் ஆர்டர் செய்த செல்போன் வீட்டுக்கு டெலிவரி ஆன நிலையில் அதை திறந்து பார்த்தும் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆன்லைன் ஆர்டர் அதிகரிப்பு

ஆன்லைன் ஆர்டர் அதிகரிப்பு

ஆன்லைன் ஆர்டரின் தேவை இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக கொரோனா காலத்தில் மக்கள் வெளியே சென்று பொருட்களை வாங்குவதற்கு பதிலாக வீட்டில் இருந்தே ஆன்லைனில் ஆர்டர் செய்வதற்கே ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நினைத்துக் கூட பார்க்கமுடியாத சலுகை

நினைத்துக் கூட பார்க்கமுடியாத சலுகை

பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களை பயன்படுத்தும்போது அதில் நினைத்துக் கூட பார்க்கமுடியாத சலுகையோடு பொருட்கள் விற்பனைப்பதிவு விளம்பரம்போல் காட்டப்படும். அதை பலர் கடந்துசென்றுவிடுவார்கள், ஆர்வத்தில் சிலர் அதை ஆர்டர் செய்ய முயற்சிப்பார்கள்.

ஆன்லைன் வகுப்புக்காக மொபைல்

ஆன்லைன் வகுப்புக்காக மொபைல்

அதேபோல்தான் சென்னையில் ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி, இவர் தனது மகளின் ஆன்லைன் வகுப்பு பயன்பாடுக்காக செல்போன் வாங்க வேண்டும் என பல நாட்களாக திட்டமிட்டுள்ளார். பல மாடல்களை பார்த்துக் கொண்டிருந்த அவர், எதிர்பாரா விதமாக பேஸ்புக்கில் ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார்.

ரூ.12,000 மதிப்புள்ள செல்போன்

ரூ.12,000 மதிப்புள்ள செல்போன்

அந்த விளம்பரத்தில் ரூ.12,000 மதிப்புள்ள செல்போனை சலுகை விலையில் ரூ.2,999-க்கு வழங்குவதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்த முகமது அலி, மகளின் ஆன்லைன் வகுப்புக்கு இது சரியாக இருக்கும் என அதை ஆர்டர் செய்துள்ளார்.

ரூ .5,999 விலையில் அட்டகாசமான Detel செமி-ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்! எப்படி வாங்கலாம்?ரூ .5,999 விலையில் அட்டகாசமான Detel செமி-ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்! எப்படி வாங்கலாம்?

6 நாட்களுக்கு பிறகு டெலிவரி

6 நாட்களுக்கு பிறகு டெலிவரி

ரூ.12,000 மொபைல் சலுகை விலையில் ரூ.2999-க்கு முகமது அலி ஆர்டர் செய்துள்ளார். இவர் ஆர்டர் செய்த மொபைல் 6 நாட்களுக்கு பிறகு வீட்டுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் டெலிபரி செய்ய வந்த நபரிடம் இருந்து பார்சலை வாங்கிய முகமது அலி, பார்சலை பரித்து பார்த்தபிறகு தான் பணம் தருவேன் என கூறியுள்ளார்.

மொபைலுக்கு பதிலாக 2 சீட்டுக்கட்டுகள்

மொபைலுக்கு பதிலாக 2 சீட்டுக்கட்டுகள்

ஆனால் டெலிவரி செய்ய வந்த நபர் பணத்தை கொடுத்துவிட்டு பார்சலை பிரித்து பார்க்கும்படி கூறியுள்ளார். இருப்பினும் உறுதியாக இருந்த முகமது அலி, பார்சலை பிரித்து பார்த்துள்ளார். அந்த பார்சலில் ஆர்டர் செய்த மொபைலுக்கு பதிலாக 2 சீட்டுக்கட்டுகள் இருந்துள்ளது. இதையடுத்து ஆர்டர் செய்த பொருளுக்கும், டெலிவருக்கும் சம்பந்தமில்லை என கூறி டெலிவரி செய்ய வந்த நபர் நகர்ந்து செல்ல முயற்சித்துள்ளார்.

காவல்நிலையத்தில் புகார்

காவல்நிலையத்தில் புகார்

ஆனால் முகமது அலி மற்றும் அங்கிருந்த நபர்கள் டெலிவரி செய்ய வந்த நபரை பிடித்து பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீஸார் டெலிவரி நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் தங்களுக்கு வரும் பார்சலை டெலிவரி செய்வது மட்டுமே தங்களது வேலை என கூறி விவரித்துள்ளார். இதையடுத்து டெலிவரி செய்த நிறுவனத்தின் போன் நம்பர், விலாசத்தை வாங்கி அந்த நபரை அனுப்பி வைத்தனர்.

பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்

பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்

ஆன்லைன் மோசடி அதிகரித்து வரும் இந்த நேரத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையோடு கவனமாக செயல்பட வேண்டும் என் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலியான விளம்பரங்களை நம்பி ஏமாறவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் ஆர்டர் செய்து சீட்டுக்கட்டு வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

Best Mobiles in India

English summary
Chennai man Order Mobile For Online Class Received Playing Cards instead of mobile

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X