Home
News

அப்படி போடு.. இனி பஸ்ஸில் காசு கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டாம்.. சென்னை, மதுரை, கோவை மக்களே ககவனியுங்க..

இனி சிட்டி பஸ்ஸில் சில்லறை தட்டுப்பாடு இல்லாமல் எளிமையாக டிக்கெட் எடுக்க அனுமதிக்கும் புதிய கேஷ்லெஸ் அம்சம் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. பணம் மற்றும் சில்லறை இல்லாமல் டிஜிட்டல் கேஷ் மூலம் டிக்கெட் எடுக்கும் சேவை எப்படி செயல்படுமென்று பார்க்கலாமா?

இந்த புதிய கேஷ்லெஸ் சேவையை தமிழ்நாட்டில் உள்ள மூன்று போக்குவரத்து கழகம் முதற்கட்டமாக நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (TNSTC) கீழ் இயங்கும், MTC (சென்னை - Chennai), மதுரை (Madurai) மற்றும் கோயம்புத்தூர் (Coimbatore) பிரிவுகளில், இனி பயணச்சீட்டுக் கட்டணத்தை மொபைலிட்டி கார்டு (Mobility card) அல்லது யுபிஐ (UPI) மூலம் செலுத்தும் பணமில்லா டிக்கெட் முறையை தமிழ்நாடு அறிமுகப்படுத்தவுள்ளது.

அப்படி போடு.. இனி பஸ்ஸில் காசு கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டாம்..

இப்போது நாம் ஹோட்டல், சில்லறை கடைகள் போன்ற இடங்களில் கியூஆர் கோடுகளை (QR code) ஸ்கேன் செய்வதன் மூலம் பணத்தை செலுத்தி வருகிறோம். இதேபோல விரைவில், பொது பேருந்துகளில் மக்கள் பயணிக்கும் பொழுதும், இனி UPI ஆப்ஸ் மூலமாக பணம் செலுத்தி, பயணசீட்டு பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது போக அரசு பேருந்துகளில் பிரத்தியேக ஸ்மார்ட் கார்டுகளை வைத்து பயணிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது மெட்ரோ ரயில்களில் மக்கள் பயன்படுத்தும் பாஸ் போல செயல்பட கூடியது. மெட்ரோவில் ஒரு மாதத்திற்கு தேவையான முன்தொகையை செலுத்தி நாம் பாஸ் வாங்குவது போல, இந்த ஸ்மார்ட் கார்டுகளை மக்கள் பேருந்தில் பயணிக்கவும் இனி பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. உங்களுக்கு வழங்கப்படும் கார்டின் எண்ணிற்கு நீங்கள் ஆன்லைன் மூலம் ரீசார்ஜ் செய்துகொண்டால் போதுமானது.

எந்த பேருந்திலும் வேண்டுமானாலும் பயணிக்கலாம். பேருந்துகளில் வைக்கப்படப்போகும் இயந்திரங்களில் நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை கிளிக் செய்து, உங்கள் ஸ்மார்ட் பாஸ் கார்டை ஒருமுறை டச் செய்து எடுத்தால் போதும், கட்டணம் வசூலிக்கப்படும். இந்த இயந்திரம் பெரும்பாலும் நடத்துனர் கைகளில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திற்கான கட்டணம் சரியாக வசூலிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய இது நடத்துனரிடம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அப்படி போடு.. இனி பஸ்ஸில் காசு கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டாம்..

பயணிகளுக்கு வழங்கப்படும் பயணசீட்டுகளில் கூட QR கோட் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. உங்காளுங்கன்னு பயணசீட்டை நடத்துனர் தான் வழங்குவார். ஆனால், கட்டண முறைக்கு நீங்கள் பணத்தை பயன்படுத்தாமல், கேஷ்லெஸ் முறைப்படி சரியான கட்டணத்தை செலுத்தி பயணிக்கலாம். இதன் மூலம் பணம் நேரடியாக அரசுக்கு சென்றடையும். இந்த திட்டத்திற்காக மொத்தம் 9 ஆயிரம் பேருந்துகளில் இந்த சேவை கொண்டு வரப்பட உள்ளது.

இதற்காக, 20 ஆயிரம் இயந்திரங்களை தமிழக அரசு வாங்கவுள்ளது. மொத்தம் 40 லட்சம் பேர் தினசரி இந்த சேவையின் மூலம் பயன்பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக அடுத்த 5 வருடத்தில் சுமார் 85 லட்சம் ரூபாய் செலவு செய்யப்படவுள்ளது. கேரளாவில் இதுபோன்ற சேவை இப்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலும் இந்த சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தால், ஒரே ஸ்மார்ட் பாஸ் அட்டையின் மூலம் மெட்ரோ, எலெக்ட்ரிக் ட்ரெயின் போன்ற பயணங்களுக்கு தேவையான கட்டணத்தையும் ஒரே அட்டையில் கிடைக்கும் படி செய்யலாம் என்று தமிழக அரசு திட்டம் தீட்டி வருவதாக கூறப்பட்டுள்ளது. எது எப்படியாக இருந்தாலும், இந்த கேஷ்லெஸ் பயன்முறை முதல் கட்டமாக 3 நகரங்களில் கொண்டுவரப்படவுள்ளது. இதனை தொடர்ந்து, மற்ற தமிழக நகரங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Chennai Madurai Coimbatore Tamil Nadu State Transport Corporation Plans Cashless Ticket System QR Scan UPI Payment Method
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X