Home
News

சென்னை ஐடி பார்க்-களில் அறிமுகமாக இருக்கும் புதிய வசதி.! என்னென்ன தெரியுமா?

கொரோனா வைரஸ் முதலில் ஜலதோஷம், உடல் வலி, இருமல், தும்மல், காய்ச்சல், நெஞ்சுவலி கடைசியில் மரணம் வரை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இது லேசான காய்ச்சலில்தான் இது துவங்கும் எனக் கூறப்படுகிறது.

தொற்று இருப்பவர்களுடன்

கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்தால் வைரஸ் தொற்று வேகமாக பரவும் அபாயம் இருக்கிறது. இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை நேரடியாக சோதித்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நோய் தொற்றால் உலக

இந்நிலையில் கொரோனா நோய் தொற்றால் உலக நாடுகளை போல இந்தியாவிலும் பல துறைகளில் பல்வேறு புதியநடைமுறைகளும் அலுவலக கட்டுப்பாடுகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஐ.டி துறை

அதேபோன்று சென்னை ஐ.டி துறை வளாகங்களும், தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் தங்கள் பணியாளர்களின் பாதுகாப்புக்கு ஏற்றார்போல வேலை இடத்தை நிறுவ தங்களால் முடிந்த அனைத்தையும் மாற்றம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தககது. இந்த கொரோனா பரவாமல் இருக்க வலியுறுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முக்கியமானது சமூக விலகல். தொழில்துறை ஊழியர்கள் பணிக்கு திரும்பி வரும் போது அரசின் விதிமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்ய பல அலுவலகஙகள்நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இவற்றை உறுதி செய்யும் வகையில் பல

அதன்படி இவற்றை உறுதி செய்யும் வகையில் பல நிறுவனங்கள் உயர்நிலை இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்(ஐஒடி) எனும் அம்சங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. பொதுவாக இந்த செயலியை உருவாக்க கிட்டத்தட்ட 5வருடங்கள் ஆகும் எனவும், விலை உயர்ந்தது என்றாரும் கூட ஐ.டி ஊழியர்களை பாதுகாக்க இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வழங்கம்போல் தொழில்நுட்ப

இந்த செயலி வழங்கம்போல் தொழில்நுட்ப வளாகங்களில் நடைமுறைக்கு வரும் போது ஊழியர்கள் பணியிடத்தின் நுழைவாயிலிருந்து கழிவறை வரை கடுமையான வேறுபாடுகளை கவனிக்க போகிறார்கள் என்றும் கூறுகின்றனர். அதாவது பணிக்கு வரும் ஊழியர்களை
பரிசோதனை செய்ய தனியாங்கி ஸ்கேனர்கள் நுழைவாயில் இருக்கும் எனவும், இது உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் அவர்களை தனிமைப்படுத்த தனியே வசதியான இடம் அமைக்கப்படும் எனவும், பின்பு QR குறியீடு மூலம் லிப்டினை இயக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அடையான அட்டைகள் மூலம்

மேலும் சரியான அடையான அட்டைகள் மூலம் கதவினை திறத்தல், மூடுதல் போன்ற வசதிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது, இந்த வசதி ஏற்கனவே சில நிறுவனங்களில் உள்ளது. மேலும் குடிநீர் விநியோகிப்பாளர்களுக்கு கூட சென்சார்கள் இருக்கும் இதனால் வேலையிடத்தில் ஒருவரை ஒருவர் தொடுவதைத் தவிர்க்கலாம் என்றும், கழிவறைகளிலும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்து வருகின்றனர்.

ஆப் இந்தியாவின் ஒரு

வெளிவந்த டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஒரு அறிக்கையின் படி, கோயம்புத்தூரில் இருககும் இந்தியா லேண்ட் தொழில்நுட்ப பூங்கா இந்த மாற்றங்களில் சிலவற்றை ஏற்கனவே செயல்படுத்தியுள்ளது. பின்பு இந்தியா லேண்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சலாய் குமரன் என்பவர் இது பற்றி தெரிவிக்கையில், எங்களது நிறுவனங்களில் பணிக்கு திரும்பும் ஊழியர்களுக்கு ஏற்றவாறு லிஃப்ட் செயல்பாடு, ஒருவரை ஒருவர் தொடாமல் சமூக விலகளோடு பணிபுரியும் வகையில் உட்கட்டமைப்பை மேற்படுத்தியுள்ளோம், ஊழியர்களுக்கும் பாதுகாப்பு நம்பிக்கையை அளித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

நடவடிக்கைகளால் சென்னை

மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளால் சென்னை ஐ.டி பூங்காகள் உலக அளவுக்கு சிறந்த கட்டமைப்புகளை உடையதாக மாறும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Chennai IT Park Makes Touch Free Workplace: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X