ஆன்லைன் வகுப்புக்கு தடையா?., ஆபாச இணையம் பார்க்க நேரிடும் என மனு- உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

|

தேவையில்லாத விஷயங்களில் இருந்து விலகி இருக்கும்படி சட்டவிதிகள் விதித்தப்பிறகு ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அதுவரை தடைவிதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம்

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா., உலகின் 212 நாடுகளில் பரவித் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 ஊரடங்கு அமல்

ஊரடங்கு அமல்

பிரதான ஒன்றாக ஊரடங்கு அமல்
கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பிரதான ஒன்றாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களுக்குள் நுழையும் வெளியேறவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இ-பாஸ் இல்லாம எங்கயும் போகாதிங்க., இ-பாஸ் வாங்காமல் ஊருக்கு வந்த 4 பேர்., என்ன நடந்தது தெரியுமா?இ-பாஸ் இல்லாம எங்கயும் போகாதிங்க., இ-பாஸ் வாங்காமல் ஊருக்கு வந்த 4 பேர்., என்ன நடந்தது தெரியுமா?

2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு அதிகம்

2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு அதிகம்

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு அதிகமாக அதிகரித்துள்ளது. உலகில் கொரோனாவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் நாடுகளின் பட்டியலில் 6-வது இடத்தில் இந்தியா இருக்கிறது.

கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை

கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை தமிழகத்தில் மட்டும் 34914 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து பத்து நாளாக பாதிப்பு 1500 கடந்து வருகிறது.

பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட முடியாத நிலை

பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட முடியாத நிலை

கொரோனா கட்டுப்படுத்துவதில் பிரதான நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதில் பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு பள்ளி கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த சரண்யா என்ற பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் வசதி படைத்தவர்கள் ஸ்மார்ட்போன் இணைய இணைப்பு அனைத்தும் இருக்கும். அவர்கள் எளிதாக பின்பற்றி பாடம் படிப்பார்கள்.

ஆன்லைன் மூலம் பாடம்

ஆன்லைன் மூலம் பாடம்

ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவதால் நகர்ப்புற கிராமப்புற மாணவர்களுக்கு இடையில் இருக்கும் பொருளாதார ரீதியான சமநிலை இல்லாத நிலை உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரமத்தை ஏற்படுத்தும்

சிரமத்தை ஏற்படுத்தும்

ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது தொடர்பாக ஆசிரியர்கள் பழகியிருக்க மாட்டார்கள். இது அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். முறையான உட்கட்டமைப்பு இல்லாத காரணத்தால் மாணவர்களும் ஆசிரியர்களும் இடையூறுகளை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான வழிக்கு அழைத்து செல்லும் வாய்ப்பு

தவறான வழிக்கு அழைத்து செல்லும் வாய்ப்பு

ஆன்லைனில் படிக்கும் மாணவர்களை தவறான வழிக்கு அழைத்து செல்லும் வாய்ப்பு இருக்கிறது. மாணவர்கள் வகுப்புகளில் இருந்து விலகி தேவையில்லாத தேவையில்லாத விஷயங்களுக்கு இணையத்தை பயன்படுத்த நேரிடும்.

அட ஜிமெயிலில் இப்படி ஒரு வசதி இருக்கா? இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சேஅட ஜிமெயிலில் இப்படி ஒரு வசதி இருக்கா? இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே

தடை விதிக்க வேண்டும்

தடை விதிக்க வேண்டும்

ஆபாச இணையதளங்களை மாணவர்கள் பார்ப்பதை தடுக்கும் வகையில் சரியான சட்ட விதிகளின்படி முறையான விதிகளை வகுக்காமல் ஆன்லைன் வகுப்புகளை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு

இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு

ஆன்லைன் வகுப்பின்போது ஆபாச விளம்பரங்கள் வருவதாகக் கூறி சரண்யா தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதேபோல் வரும் 20 ஆம் தேதிக்குள் பாதுகாப்பான ஆன்லைன் கல்வி வழங்க என்னென்ன நடவடிக்கை உள்ளது என்பது குறித்து பதிலளிக்குமாறு மத்திய மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Best Mobiles in India

English summary
Chennai high court refuses to ban online classes and order to state and central government

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X