நவம்பர் 19ல் சென்னையில் டிஜிட்டல் மயமாகும் கேபிள் டிவி

Posted By: Karthikeyan
நவம்பர் 19ல் சென்னையில் டிஜிட்டல் மயமாகும் கேபிள் டிவி

சென்னையில் கேபிள் டிவியை டிஜிட்டல் மயமாக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணியை அக்டோபர் 31க்குள் முடித்துவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருந்தது. ஆனால் இந்த பணி இன்னும் முடிவடையாததால் வரும் நவம்பர் 19க்குள் முடித்துவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மறுஆணை பிறப்பித்திருக்கிறது.

ஆகவே நவம்பர் 19 முதல் சென்னை மாநகர் கேபிள் டிவி சேவை முழுவதுமாக டிஜிட்டல் மயமாகிவிடும் என்று நம்பலாம். மேலும் சென்னை வாசிகளும் இந்த புதிய டிஜிட்டல் கேபிள் சேவையை மிகவும் விரும்பி அனுபவிப்பார்கள் என்று நம்பலாம்.

நேற்று கேபிள் சேவை கூட்டமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு புகார் மனு செய்திருந்தினர். அந்த மனுவின் பேரில் நடந்த விவாதத்தில் சன் டிவியின் மூத்த அதிகாரி பிஎஸ் ராமன் தங்களது சன் நெட்வொர்க் 2 லட்சம் செட்அப் பாக்ஸ்களை இயக்கி வருவதாகத் தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த 2 லட்சம் செட்அப் பாக்சுகளுக்கும் டிஜிட்டல் சேவையை வழங்க இன்னும் 20 நாள்கள் ஆகும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே டில்லியின் கேபிள் டிவி சேவையை டிஜிட்டல் மயமாக்கும் பணி முடிந்துவிட்டது. மேலும் மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் இந்த டிஜிட்டல் மயமாக்கும் பணி முடிவடைந்துவிட்டது. இந்த டிஜிட்டல் சேவையை வழங்குவதற்காக மும்பையில் 22.4 லட்சம் எடிபிக்களும், டில்லியில் 25.15 லட்சம் எடிபிக்களும், கொல்கத்தாவில் 17.74 எடிபிக்களும் நிறுவப்பட்டுள்ளன.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot