4ஜி இணைய வேகம்: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

|

மிகப்பெரிய கிரிக்கெட் போட்டிகளில் ஒன்று இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) இந்த போட்டிகளை காண பல்வேறு மக்கள் ஸ்மார்ட்போன்களை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் மக்கள் பயன்படுத்தும் 4ஜி சேவைகளில்
பல்வேறு பிரச்சனைகள் உள்ளது, உதரனமான இன்டர்நெட் வேகம் குறைவதால் ஐபிஎல் போட்டிகளை ஸ்மார்ட்போனில் பார்ப்பதற்கு மிகுந்த சிறமமாக உள்ளது என பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

4ஜி இணைய வேகம்: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

ஆனால் சில இடங்களில் இன்டர்நெட் வேகம் அருமையாக இருப்பதால் வீடியோ உடனே லோடு ஆகிவிடும், பார்ப்பதற்கும் மிக அருமையாக இருக்கிறது என்று மக்கள் கூறியுள்ளனர்.

கேரளா

கேரளா

அதன்படி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் இன்டர்நெட் வேகம் அதிகமாக உள்ளது என ஒபன் சிக்னல் தகவல் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரத்தில் 5.8 விநாடிகளில் வீடியோ லோடு ஆகிவிடும் என ஒபன் சிக்னல் தகவல்
கூறியுள்ளது. எனவே இந்தியாவில் அதிவேக இணைய வேகம் திருவனந்தபுரத்தில் கிடைக்கிறது, பின்பு இணைய வேகத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளது இந்த மாநிலம். குறிப்பாக ஐபிஎல் போட்டிகளை ஸ்மார்ட்போனில் தடையின்றி பார்க்க முடியும்.

 சென்னை

சென்னை

அடுத்து இணைய வேகத்தில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது நமது சென்னை. ஒபன் சிக்னல் அறிவித்த தகவலின் அடிப்படையில் சென்னையில் 6.0விநாடிகளில் வீடியோ லோடு ஆகிவிடும்,ஐபிஎல் போட்டிகளை தடையின்றி பார்க்க முடியும்.

 ஸ்ரீநகர்

ஸ்ரீநகர்

இணைய வேகத்தில் அடுத்தடுத்த உள்ள மாநிலங்கள் ஸ்ரீநகர் (6.1விநாடிகளில் வீடியோ லோடு ஆகிவிடும்) மூன்றவது
இடம், வதோதரா (6.2விநாடிகளில் வீடியோ லோடு ஆகிவிடும்) நான்கவது இடம், ஐதராபாத் (6.2விநாடிகளில் வீடியோ லோடு ஆகிவிடும்) ஐந்தாவது இடம் பிடித்துள்ளது என ஒபன் சிக்னல் தகவல் தெரிவித்துள்ளது..

ஜியோ

ஜியோ

தற்போது இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். மேலும் அதிகப்படியான சலுகைகள் மற்றும் குறைந்த அளவு கட்டனங்கள் போன்றவற்றில் இயங்கிக்கொண்டிருக்கிறது ஜியோ நிறுவனம். மேலும் ஜியோ-வின் 4ஜி இணைய வேகம் சற்று வேகமாக இருக்கிறது என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
chennai-has-fastest-4g-video-load-time-among-ipl-cities-but-thiruvananthapuram-tops-amid-50-cities: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X