ஸ்மார்ட் கழிவறை : இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் துவங்கப்பட்டது.!!

By Meganathan
|

பெரும்பாலான இந்திய நகரங்களில் பொது கழிவறை வசதிகள் சரிவர மேம்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. இந்த பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும் புதிய திட்டம் ஒன்று இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கழிவறை : இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் துவக்கம்.!!

அதன்படி சென்னையில் சுமார் 180 தானாக சுத்தம் செய்து கொள்ளும் இடாய்லெட்கள் கட்டமைக்கப்ப்டுள்ளன. இந்த கழிவறைகள் இருக்கும் இடத்தை பயனர்கள் ஆண்ட்ராய்டு செயலி மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சென்னை வாசிகள் மேப் மூலம் கழிவறைகளை கண்டறிய முடியும். இதோடு கழிவறை குறித்த கருத்துகளையும் அவர்கள் செயலி மூலம் தெரிவிக்க முடியும்.

ஸ்மார்ட் கழிவறை : இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் துவக்கம்.!!

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றொரு செயலியை பயன்படுத்தி ஸ்மார்ட் கழிவறைகளின் சுத்தம், பயன்பாடு நிலவரம், மற்றும் நீர் இருப்பு போன்றவற்றை கண்காணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட் கழிவறை : இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் துவக்கம்.!!

சுமார் 35 சதுர அடியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் கழிவறைகள் பயன்படுத்தும் முன்பும் பயன்படுத்தி வெளியே வந்த பின்பும் தானாக சுத்தம் செய்து கொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்கள் எக்சாஸ்ட் ஃபேன், மின்விளக்கு, மற்றும் நீர் பயன்பாடு போன்றவற்றை சரிவர பயன்படுத்த வழி செய்கின்றது.

ஸ்மார்ட் கழிவறை மற்றும் செயலியும் இராம் சயின்டிஃபிக் சொல்யூஷன் எனும் இந்திய நிறுவனம் தயாரித்து தற்சமயம் இந்தியாவின் 18 மாநிலங்களின் பல்வேறு இடங்களில் சுமார் 1600 ஸ்மார்ட் கழிவறைகளை மக்கள் பயன்பாட்டிற்கு கட்டமைத்துள்ளது.

ஸ்மார்ட் கழிவறை : இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் துவக்கம்.!!

சுற்றுப்புறச்சூழலை பாதிக்காத படி வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட் கழிவறைகள் சூரிய சக்தியை மின்சாரமாக மாற்றும் சோலார் தகடுகளை கொண்டிருக்கின்றது. இதோடு இதனை அடிக்கடி பராமரிக்க வேண்டிய அவசியமும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட் கழிவறை : இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் துவக்கம்.!!

தற்சமயம் இந்தியாவில் சுமார் 60.1 சதவீதம் பேர் திறந்த வெளியில் மலம் கழித்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டம் முழுமையாக வெற்றி பெறும் போது சுத்தமான இந்தியாவை உருவாக்குவது சுலபமாக இருக்கும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Chennai gets India's first self cleaning smart toilets Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X