TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் தமிழக தலைநகர். தொடர்ந்து பெய்து வரும் பேய் மழையில் இன்னல்கள் மற்றும் தொந்தரவுகளை மக்கள் சந்தித்து வரும் நிலையில் பல்வேறு நிறுவனங்களும் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றன.
ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் முக்கிய அறிவிப்புகள் மக்களுக்காக பகிரப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட பல்வேறு நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன.
ப்ராக்டோ
மருத்துவ சேவை வழங்கும் ப்ராக்டோ நிறுவனம் உதவ தயாராக இருக்கும் மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் தொலைபேசி எண்களை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.
சோமாட்டோ
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உணவு சார்ந்த விசேஷ சலுகைகளை சோமாட்டோ அறிவித்துள்ளது.
தங்குமிடம்
சென்னை வாசிகள் சிலர் காலியாக இருக்கும் பாதுகாப்பான இடங்கள் குறித்த தகவல்களை ஆன்லைனில் பதிவு செய்திருக்கின்றனர். இதை அவசரமாக தங்குமிடம் தேவைப்படுவோர் பயன்படுத்தி கொள்ளலாம்.
பேடிஎம்
அவசரமாக டாக்டைம் தேவைப்படுவோருக்கு பேடிஎம் தளம் ரூ.30 வரை இலவச டாக்டைம் வழங்குகின்றது. இந்த வசதியை பெற பேடிஎம் தளத்தின் அவசர எண் 18001030033 தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல்
அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் ஒரு வார காலத்திற்கு இலவச சேவையை வழங்கி இருக்கின்றது. ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசஸ டாக்டைம் மற்றும் இதர சேவைகளை வழங்கி இருக்கின்றது.
போக்குவரத்து
இதோடு தாழ்வான பகுதிகளில் சிக்கத்தவிக்கும் மக்களை மீட்க ஓலா மற்றும் சூம் கார் போன்ற நிறுவனங்களும் முன்வந்திருக்கின்றது.
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.