சென்னை வெள்ளம் : ஊழியர்களுக்கு உதவ ரூ.1,100 கோடி ஒதுக்கியது டிசிஎஸ்.!
இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம் சென்னை மழையில் பாதிக்கப்பட்ட தனது ஊழியர்களுக்கு வட்டி இல்லா முன்பணம் வழங்க ரூ.1,100 கோடி ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

சம்பள முன்பணமாக ரூ.1,00,000 முதல் அதிகபட்சம் மூன்று மாத சம்பளம் வழங்கப்படும் என டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், தலைவருமான சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இதற்காக ரூ.1,100 கோடி ஒதுக்கப்படுவதோடு முன்பணம் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் பணம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு சென்னை வெள்ளத்தில் அதிகமான பாதிப்படைந்தோருக்கு வழங்க ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக சென்னையில் பெய்த பலத்த மழையின் காரணமாக நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications