தர்ம சங்கடம்: என் பேரு பிரியா., போன்ல பேசனும்னா ரூ.1000, போட்டோக்கு தனி- சென்னையை மிரட்டிய சம்பவம்!

|

சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் இணையதள ஆப் மூலம் பெண்களுடன் டேட்டிங் செய்வதற்கு ஒருவர் பணம் வசூலித்து ஏமாற்றியதாக புகார் அளித்திருந்தார். அழகான் பெண்களுடன் பேச கூகுள்பேயில் பணம் செலுத்தும்படியும் அனுப்பியவுடன் அந்த பெண் போன் செய்து பேசுவார் என கூறி பணத்தை வசூலித்ததாக தெரிவித்தார்.

எந்த பெண்ணும் போன் செய்யாததால் புகார்

எந்த பெண்ணும் போன் செய்யாததால் புகார்

பணம் செலுத்தியும் எந்த பெண்ணும் போன் செய்யாத காரணத்தால் தான் ஏமாற்றப்பட்டது அறிந்து அந்த நபர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். கூகுள் பே எண்ணை வைத்து போலீஸார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் சமூகவலைதளங்களில் இருக்கும் அழகான பெண்களின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து தவறாக பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.

வாக்குமூலத்தில் பல அதிர்ச்சி தகவல்

வாக்குமூலத்தில் பல அதிர்ச்சி தகவல்

இந்த நிலையில் பெண் குரலில் பேசி மோசடியில் ஈடுபட்டு வந்ததாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் பெற்ற வாக்குமூலத்தில் பல அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதில் தனது பெயர் வளன் ராஜ்குமார் ரீகன் என குறிப்பிட்டுள்ள அவர், 27 வயது ஆகியும் தனக்கு திருமணமாகவில்லை எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Google pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி!Google pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி!

புதிய வேலை தேடும்போது வந்த போன்

புதிய வேலை தேடும்போது வந்த போன்

இன்ஜினியரிங் படித்த தான் தனியார் கம்பெனி ஒன்றில் பயற்சியாளராக வேலை செய்ததாகவும் அதன் பின்பு தன் உறவினருடைய நிறுவனத்தில் பணி புரிந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின்பு தனது வேலையை விட்டுவிட்டு புதிய வேலை தேடி வந்துள்ளார். அப்போதுதான் லொகோண்டோ இணையதளத்தில் வேலை குறித்து பதிவு செய்துள்ளார்.

ரூ. 500, 1000 என கமிஷன்

ரூ. 500, 1000 என கமிஷன்

அப்போது தான் அவருக்கு அந்த வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் தங்களுக்கு வழங்கப்படும் வேலை டெலி காலர் வேலை என்றும் வாடிக்கையாளருக்கு தேவையான வகையில் பேசினால் ரூ. 500, 1000 என கமிஷன் தரப்படும் எனவும் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

பிரியா என்ற பெயரில் தொடங்கிய அழைப்பு

பிரியா என்ற பெயரில் தொடங்கிய அழைப்பு

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், தன்னுடைய குரல் பெண் போன்றே இருப்பதால் லொக்கோன்டாவில் பிரியா என்ற பெயரில் தன் செல்போனை பதிவு செய்ததாகவும் கூறினார். அதேபோல் தன்னிடம் பேசும் ஆண்களிடம் ஆபாசமாக பேச வேண்டும் எனவும் அந்த நிறுவனம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

ரூ. 100 வாங்கிக்கிட்டு ஏதாவது ஒரு பெண்ணின் போட்டோவை அனுப்பிவேன்

ரூ. 100 வாங்கிக்கிட்டு ஏதாவது ஒரு பெண்ணின் போட்டோவை அனுப்பிவேன்

வேலை இல்லை என்ற காரணத்தால் தானும் அதற்கு சம்மதித்து பெண் குரலில் பேசி சம்பாதிக்க தொடங்கியதாக கூறியுள்ளார். விளம்பரத்தைப் பார்த்து அழைக்கும் ஆண்களில் சிலர் தன்னுடைய போட்டோவை அனுப்பும்படி கேட்பார்கள். அவர்களிடம் 100 ரூபாய் வாங்கிக்கொண்டு ஏதாவது ஒரு பெண்ணின் போட்டோவை அனுப்பி விடுவேன்.

Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்! குஷியில் வாடிக்கையாளர்கள்!Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்! குஷியில் வாடிக்கையாளர்கள்!

தேவைப்படும் வாட்ஸ ஆப்-ல சொன்ன பணம் போடுவாங்க

தேவைப்படும் வாட்ஸ ஆப்-ல சொன்ன பணம் போடுவாங்க

தன்னிடம் பெண் எனக் கருதி பேசும் ஆண்களில் பலரிடம் நான் எனக்கு தேவையானபோது வாட்ஸ்அப்பில் பேசி பணத்தைப் பெற்றுக்கொள்வேன் என கூறியுள்ளார்.அதில் சில ஆண்கள் இலவசமாகப் பேசுமாறு தன்னைத் தொந்தரவு செய்தார்கள்.

ஆன்லைன் இணையதளத்தில் புகார்

ஆன்லைன் இணையதளத்தில் புகார்

அதைப் பற்றி தனது கம்பெனியில் கூறியதாகவும், அவர்களின் பேரில் போலீஸார் ஆன்லைன் இணையதளத்தில் புகார் அளித்து அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அவர்களிடம் அனுப்பும்படி கூறினார்கள் என தெரிவித்துள்ளார்.

ஸ்கிரீன் ஷாட்டை தொந்தரவு செய்யும் ஆண்களுக்கு அனுப்புவேன்

ஸ்கிரீன் ஷாட்டை தொந்தரவு செய்யும் ஆண்களுக்கு அனுப்புவேன்

இதையடுத்து ஆன்லைன் புகார் அளித்து அந்த ஸ்கிரீன் ஷாட்டை தொந்தரவு செய்யும் ஆண்களின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பியதாக தெரிவித்தார். அவர்கள் புகாரை வாபஸ் வாங்கும்படி கூறினார்கள் எனவும் வாபஸ் வாங்க வேண்டும் என்றால் பணம் செலுத்தும்படி அவர்களிடம் கேட்டு வாங்கியதாக கூறினார்.

இரண்டு ஆண்டுகளாக இதே வேலை

இரண்டு ஆண்டுகளாக இதே வேலை

கடந்த இரண்டு ஆண்டுகளாக இதே வேலையை செய்து வந்ததாகவும் ஆனால் தற்போது போலீஸார் தன்னை கைது செய்து விட்டார்கள் எனவும் அந்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இனி போன்லாம் பண்ணாதிங்க whatsapp-லயே கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம்: இதோ நம்பர் மற்றும் முறை?இனி போன்லாம் பண்ணாதிங்க whatsapp-லயே கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம்: இதோ நம்பர் மற்றும் முறை?

எத்தனை பேர் காதலித்தார்களோ

எத்தனை பேர் காதலித்தார்களோ

இந்த இரண்டு வருடத்தில் எத்தனை பேர் இவரை பிரியா என நினைத்து காதல் வலையில் விழுந்தார்கள் என தெரியவில்லை எனவும் ஏராளமான இளைஞர்கள் இவருக்கு பணம் செலுத்தி ஏமாந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரியா என்ற போனில் பேசி ஆண்களுக்கு இது தர்ம சங்கடமாக இருந்திருக்கும் எனவும் மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்திருக்கும் என கருத்து தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Chennai engineer arrest who cheated using female voice

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X