Home
News

தண்ணீர் பிரச்சனையை தீர்க்க 800 புதிய வாட்டர் ஏ.டி.எம் மையங்கள்.! கேன் ரூ.7 மட்டுமே.!

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு கோடைக்காலம் ஆரம்பம் ஆனதும் துவங்கிவிட்டது. இந்த நிலையைச் சரி செய்யச் சென்னை மாநகராட்சி புதிய வாட்டர் ஏ.டி.எம் மையங்களை 800 இடங்களில் நிறுவ திட்டமிட்டுள்ளது.

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு கோடைக்காலம் ஆரம்பம் ஆனதும் துவங்கிவிட்டது. இந்த நிலையைச் சரி செய்யச் சென்னை மாநகராட்சி புதிய வாட்டர் ஏ.டி.எம் மையங்களை 800 இடங்களில் நிறுவ திட்டமிட்டுள்ளது.

வாட்டர் கேன்களுக்கும் பெரிய அளவில் தட்டுப்பாடு

வாட்டர் கேன்களுக்கும் பெரிய அளவில் தட்டுப்பாடு

சென்னையில் வாட்டர் கேன்கள் சுமார் ரூ.30 முதல் ரூ.40 என்ற விலை வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏழை எளிய மக்களுக்கு வாட்டர் கேன்களை வாங்கி பயன்படுத்துவது ஏற்றதாக இல்லை. சில பகுதிகளில் வாட்டர் கேன்களுக்கும் பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

800 இடங்களில்  வாட்டர் ஏ.டி.எம் மையங்கள்

800 இடங்களில் வாட்டர் ஏ.டி.எம் மையங்கள்

குறைந்த விலையில் மக்களுக்குப் பயனளிக்கும் விதத்தில், இந்த வாட்டர் ஏ.டி.எம் மையங்களைச் சென்னை மாநகராட்சி சுமார் 800 இடங்களில் நிறுவத் திட்டமிட்டுள்ளது. ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் முறைப்படி சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர், இந்த வாட்டர் ஏ.டி.எம் மையங்களில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 20 லிட்டர் தண்ணீர் வெறும் ரூ.7 மட்டும்

20 லிட்டர் தண்ணீர் வெறும் ரூ.7 மட்டும்

சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான 20 லிட்டர் தண்ணீர் வெறும் ரூ.7 என்ற விலையில் மக்களுக்கு வாட்டர் ஏ.டி.எம் மையங்களில் கிடைக்கும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு வார்டிலும் 10 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கப்படும் வாட்டர் ஏ.டி.எம் மையங்கள்

அதிகரிக்கப்படும் வாட்டர் ஏ.டி.எம் மையங்கள்

ஒவ்வொரு வாட்டர் ஏ.டி.எம் மையங்களைப் பாதுகாப்பாகப் பராமரிக்க இரண்டு பெண்கள் பணியில் நிறுவப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் சென்னையில் சுமார் 400 வாட்டர் ஏ.டி.எம் மையங்கள் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
chennai corporation introduces water atms with cheap rate : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X