சென்னை போலீஸார் பிடித்த 'ஹை டெக்' திருடர்கள்

Written By:

CB-CID போல் ஏமாற்றிய 'ஹை டெக்'திருடர்களை சென்னை போலீஸார் கைதுசெய்துள்ளார்கள். 'ஸ்பூபிங்' முறையில் மோசடிசெய்வது இந்தியாவில் இதுதான் முதல்முறையாம்.

சென்னை போலீஸார் பிடித்த 'ஹை டெக்' திருடர்கள்

ஆந்திரா மாநிலத்தைச்சேர்ந்த ஒரு வியாபாரியிடமிருந்து 4.5 கோடிகள் பரிக்கபட்டதாகவே வழக்கு. இந்த வியாபாரியின் மகளிடமிருந்து பணத்தை பெறுவதற்காக கோயம்பேடு பேருந்துநிலையம் வந்தபோது 24 வயதேயான கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த அருண்குமார் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

VoIP என்ற தொழில்நுட்ப முறையில் CB-CID அலுவலக எண்களை பயன்படுத்தி மிரட்டியுள்ளார்கள். இந்த சதியில் மொத்தமாக 8 பேர் ஈடுபட்டிருக்கிறார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

'கால்' வந்த அதே எண்ணுக்கு வியாபாரியின் மகள் திரும்பவும் அழைத்தபொழுது, அது நேராக CB-CID கன்ட்ரோல் அறைக்கே சென்றுள்ளது. அவர்களும் நடந்ததை கூறவே இந்த திருட்டுத்தனமானது அம்பலமாகியுள்ளது.

இந்த அதிநவீன மோசடியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்ற தகவலானது விரைவில் வெளியாகும்.

More pictures

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot