கூகுளில் ரூ.60 லட்சம் வேலையை பிடித்து சாதித்த தமிழன் இவர்.!
பெங்களூர் ஐஐடியில் படிப்பு: ஐஎம் டெக் என்படும் 5 ஆண்டு படிப்பை படித்துள்ளார். இவர் கடந்த 2014ல் படித்து துவங்கி தற்போது முடித்துள்ளார். படிக்கும் காலத்திலேயே கோடிங் தொடர்பான போட்டிகளில் நண்பர்களுடன்
சென்னையை சேர்ந்த மாணவனுக்கு கூகுள் நிறுவனத்தில் ரூபாய் 60 லட்சத்தில் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளார். இவர் கூகுள் நிறுவனத்தில் வேலை பெறுவதற்காக பல்வேறு கோடிங் போட்டியிலும் பங்கேற்று பெற்றி பெற்றுள்ளார்.

மேலும், ஒருநேர்முக தேர்வில் பெற்றி பெற்றுள்ளது என்பது அனைவராலும் மறுக்க முடியாததாக நிகழ்வாக மாற்றி காட்டியுள்ளார் இந்த மாணவர். இதுவர் குறித்து இனி காணலாம்.
கூகுள் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு தமிழனாக இருக்கின்றார் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். இந்நிலையில், தற்போது, சென்னையை சேர்ந்த மாணவனும் ரூ.60 லட்சம் சம்பளத்தில் சேலைக்கு சேர்ந்துள்ளார் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.

சென்னையில் குடும்பம்:
சென்னை மேற்கு அண்ணா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் கே.என்பாபு. ரெயில்வே துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றுகின்றார். இவருடைய மனைவி ஜெயஸ்ரீ, இவரும் தமிழக அரசு துறையில் உயர்ந்த பதவியில் இருக்கினறார்.

ஷியாம் இளைய மகன்:
தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில், மூத்த மகன் அமெரிக்காவில் தங்கி வேலை செய்கின்றார். இளைய மகன் ஷியாம் . இவர் கூகுள் நிறுவனத்தில் சொந்த முயற்சியால் தற்போது, வேலைலையில் சேர்ந்துள்ளார். ஷியாம் சென்னை சிபிஎஸ்இ பாடத்தில் கீழ் படித்து முடித்து விட்டு ஜே.இ.இ நுழைத்தேர்வு எழுதி அதில் வெற்றி கண்டார்.

பெங்களூர் ஐஐடியில் படிப்பு:
ஐஎம் டெக் என்படும் 5 ஆண்டு படிப்பை படித்துள்ளார். இவர் கடந்த 2014ல் படித்து துவங்கி தற்போது முடித்துள்ளார். படிக்கும் காலத்திலேயே கோடிங் தொடர்பான போட்டிகளில் நண்பர்களுடன் சேர்ந்து பங்கு பெற்று இருக்கின்றார். இதுதான் கூகுள் நிறுவனத்தின் அவர் சேலைக்கு சேறுவதற்கு அடித்தளமாக இருந்துள்ளது.

நண்பன் வழிகாட்டியுள்ளார்:
இவருடன் படித்த நண்பர் கூகுள் நிறுவனத்தில் சேவையில் இருக்கின்றார். அவரின் வழிகாட்டுதலின் படி ஷியாமுக்கு வேலையும் கிடைத்து விட்டது. இதற்காக கடந்த ஜனவரி மாதத்தில் ஆன்லைன் வீடியோ மூலம் நேர்முகத்தேர்வை எதிர்கொண்டார். பின்னர் ஜெர்மன் நாட்டின் முனிச் நகரில் கூகுள் நிறுவனம் நடத்திய நேர்முகத்தேர்வில் நேரடியாக கலந்து கொண்டார்.

அக்டோபரில் பணிக்கு செல்கிறார்:
போலந்து நாட்டில் இவருக்கு வேலை செய்ய பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் அக்டோபரில் போலாந்து நாட்டிற்கு செல்கின்றார். ரூ.60 லட்சம் சம்பளத்துடன் மகிழ்ச்சியாக பணியாற்ற இருக்கின்றார்.

கூகுள், பேஸ்புக் பணி ஆசை:
கூகுள் அல்லது பேஸ்புக் நிறுவனத்தின் பணியில் சேர வேண்டும் என்று ஆசையில் இருந்துள்ளார். இவரின் எண்ணத்தின்படியே தற்போது கூகுள் நிறுவனத்தின் வேலையில் சேர்ந்துள்ளார். தற்போது ஷியாம் அளவற்ற மகிழ்ச்சியில் குதித்து வருகின்றார்.

கூகுள் கிளவுடு பிளாட்பாம்:
இந்த துறையில் பணியை தொடர இவருக்கு பணி நியமான ஆணையும் கிட்டியுள்ளது. யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் பணி நியமான ஆணை கிடைக்காது என்பது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications