Home
News

5 ஊழியர்களுக்கு BMW கார் பரிசளித்த சென்னையை சேர்ந்த நிறுவனம்.!

சென்னையை சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு விலை உயர்ந்த 5 பிஎம்டபிள்யூ கார்களை பரிசாக வழங்கி அவர்களை மட்டுமல்ல, ஐ.டி ஊழியர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. மேலும் இதுகுறித்த தகவல்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

நிறுவனங்கள் சம்பள உயர்வுடன் விலை

சில நிறுவனங்கள் சம்பள உயர்வுடன் விலை உயர்ந்த பரிசுகையும் வழங்கி வருவதை நாம் செய்திகளில் பார்த்திருப்போம். அதன்படி சென்னையைதலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கிஸ்ஃப்ளோ (Kissflow) என்ற நிறுவனம் மிகவும் பிரபலமான சாஃப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றாகும்.இந்த நிறுவனம் தான் ஊழியர்களுக்கு பிஎம்டபிள்யூ கார்களை பரிசாக வழங்கி உள்ளது.

கிஸ்ஃப்ளோ சாஃப்ட்வேர் நிறுவனம் கடந்

இந்த கிஸ்ஃப்ளோ சாஃப்ட்வேர் நிறுவனம் கடந்த 2012 ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிலையில் கிஸ்ஃப்ளோ(Kissflow) தனது 10-வது ஆண்டு விழாவில் ஐந்து பிஎம்டபிள்யூ (BMW) கார்களை அந்த நிறுவனத்தில் ஆரம்பித்திலிருந்து பணியாற்றிய தலைமைப் பொறுப்பிலுள்ள ஐந்து பேருக்கு அளித்து அசத்தியுள்ளது.

கிஸ்ஃப்ளோ சாஃப்ட்வேர் நிறுவனம்

குறிப்பாக கிஸ்ஃப்ளோ சாஃப்ட்வேர் நிறுவனம் தனது முதல் நோகோட் மென்பொருளை 2012-ஆம் ஆண்டு கூகுள் I/O நிகழ்ச்சியில் வெளியிட்டது. பின்புஅன்று முதல் சுமார் 160 நாடுகளில் அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்து தனது தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 கிஸ்ஃப்ளோவின் அலுவலகங்கள் சென்னை, துபாய்

மேலும் கிஸ்ஃப்ளோவின் அலுவலகங்கள் சென்னை, துபாய் மற்றும் வட அமெரிக்காவில் சுமார் 400 பேர் கொண்டு இயங்கி வருகிறது எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் தினேஷ், வரதராஜன், பிரசன்ன ராஜேந்திரன், விவேக்,ஆதி ராமநாதன், கிருஷ்ணசாயி உள்ளிட்டோருக்கு பிஎம்டபிள்யூ கார்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

 கிஸ்ஃப்ளோ நிறுவனரும், தலைமை

அதேபோல் கிஸ்ஃப்ளோ நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான சுரேஷ் சம்பந்தம் தான் இந்த 5 ஊழியர்களுக்கும் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ கார்களை பரிசாக வழங்கி, அவர்களது குடும்பத்தினரையும் மகழ்ச்சி கடலில் ஆழத்தியுள்ளார்.

கார்களை பரிசாக பெற்ற அந்ந

குறிப்பாக கார்களை பரிசாக பெற்ற அந்ந ஊழியர்கள் அனைத்து ஏற்ற, இறக்கங்களிலும் சுரேஷ் சம்பந்தத்துடன் சேர்ந்தே பயணம் செய்தவர்கள்என்று கூறப்படுகிறது. மேலும் அவர்களது உழைப்பை கௌரவிக்கும் வகையில் தான் பிஎம்டபிள்யூ கார்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.இந்த நிகழ்வு மென்பொருள் உலகில் பலரையும் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Chennai-based company presents BMW car to 5 employees!.! Here is the list!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X