சோலார் மின்சாரத்தை உருவாக்க, 5 'ஆட்டோ பார்ட்ஸ்' நிறுவனங்கள் இணைகின்றன...

Written By:

நமது சென்னையில் வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து சோலார் முறையில் மின்சாரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

சோலார் மின்சாரத்தை உருவாக்க, 5 'ஆட்டோ பார்ட்ஸ்' நிறுவனங்கள் இணைகின்றன.

தி ரானே குரூப், MM போர்ஜின்க்ஸ், சூப்பர் ஆட்டோ போர்ஜ், நடேசன் நிறுவனங்கள் மற்றும் ஆட்டோ பார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தி தமிழகத்தில் சிவகங்கை மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் சோலார் மூலம் மின்சாரம் தயாரிக்கும் அமைப்பை நிருவவுள்ளனர்.

இந்த சோலார் ஃபார்ம் ஆனது 7 மெகாவாட் அளவில் இருக்கும். மேலும் இதற்காக ரூ.70 கோடிகளை இந்த 5 நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளதாகத்தெரிகிறது.

இந்த திட்டமானது மார்ச் மாதத்தின் இறுதில் தொடங்கப்பட்டு, செப்டம்பர் மாதம் முடிவடையும் என நிர்வாக வட்டாரங்களால் தெரிவிக்கப்படுகிறது.

மொபைல் போனை சுடுதண்ணீரால் 'சார்ஜ்' செய்யலாம்...

Gadgets Gallery

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot