Home
News

வந்தாச்சு குட் நியூஸ்.. இனி விமானத்தில் பறக்க பாஸ்போர்ட் தேவையில்லை.. ஆதார் தேவையில்லை.. மாறுகிறது ரூல்ஸ்..

சென்னை (Chennai) மக்களுக்கு ஒரு குட் நியூஸ். வருகிற மார்ச் 31, 2024ம் தேதி முதல் சென்னை விமான நிலையம் வழியாக பயணிக்கவிருக்கும் விமான பயணிகள் பாஸ்போர்ட் (Passport) மற்றும் ஆதார் போன்ற ஆவணங்களை காண்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எது வினமானத்தில் பறக்க பாஸ்போர்ட் மற்றும் ஆதார் (Aadhaar) போன்ற ஆவணங்கள் தேவையில்லையா? அப்படியானால், எப்படி இனி விமான பயணத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று இப்போது பார்க்கலாம். வரும் மார்ச் 31ம் தேதி முதல் சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா (DigiYatra) திட்டம் துவங்கப்படவுள்ளது. டிஜியாத்ரா திட்டம் என்றால் என்ன? இதன் நன்மைகள் என்னென்ன? இதை எப்படி தமிழக மக்கள் எளிமையாக பயன்படுத்தலாம் என்ற முழு விபரத்தை இப்போது பார்க்கலாம்.

வந்தாச்சு குட் நியூஸ்.. இனி விமானத்தில் பறக்க பாஸ்போர்ட் தேவையில்லை..

சென்னை விமான நிலையத்தில் அறிமுகம் செய்யப்படும் டிஜியாத்ரா திட்டம் என்றால் என்ன?

முதலில் டிஜியாத்ரா (DIGIYATRA) என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம். பிறகு இது என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். டிஜியாத்ரா திட்டம் என்றால் என்ன? மத்திய விமான நிலைய ஆணையம் (Ministry of Civil Aviation India) கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் துவங்கப்பட்ட டிஜிட்டல் பயணமுறை திட்டம் தான் இந்த DigiYatra திட்டம்.

முழு விமான பயண (flight traveling) செயல்முறையையும் காகிதமற்ற செயல்முறையாக மாற்றும் முயற்சியின் வெற்றி திட்டம் தான் இந்த டிஜியாத்ரா. அதாவது, விமான பயணிகள், விமான நிலையத்திற்குள் நுழைவதில் இருந்து, பாதுகாப்பாக செக்கின் (check-in) செய்து, விமானத்தில் உள்ளே ஏறுவது வரை தேவைப்படும் அணைத்து விதமான சோதனைகளுக்கும் உங்கள் முகத்தை மட்டும் காண்பித்தால் போதுமானது.

உங்கள் விமான பயணத்தில் நீங்கள் எடுத்து செல்லும் பொருட்களை சரிபார்தற்கும் கூட, நீங்கள் இந்த டிஜியாத்ரா முறையை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆகையால், டிஜியாத்ரா திட்டம் அமல்படுத்தப்பட விமான நிலையங்களுக்குள் நீங்கள் பாஸ்போர்ட், ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை காண்பிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, டிஜியாத்ரா திட்டத்துடன் செயல்படும் மொபைல் ஆபிஸில் (DigiYatra mobile apps) உங்கள் பயண விபரங்கள் வழங்ககப்படும்.

வந்தாச்சு குட் நியூஸ்.. இனி விமானத்தில் பறக்க பாஸ்போர்ட் தேவையில்லை..

பாஸ்போர்ட், ஆதார் தேவையில்லை.. முகத்தை காண்பித்து விமானத்தில் பயணிக்கலாம்:

அதனுடன், உங்கள் பாஸ்போர்ட் விபரம் மற்றும் முக அங்கீகார (face Recognition) விபரங்கள் இணைக்கப்படும். இதன் காரணமாக இனி எந்த ஆவணத்தையும் காண்பிக்காமல், பயணிகள் அவர்களுடைய முகத்தை மட்டும் காட்டி பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த டிஜியாத்ரா டிஜிட்டல் முயற்சியின் மூலம், பயணிகளுக்கு சிரமம் இல்லாத பயணத்தை அனுபவிக்க முடியும்.

டிஜியாத்ரா திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும் 14வது இந்திய விமான நிலையமாக சென்னை விமான நிலையம் (Chennai airport) வரும் மார்ச் 31 ஆம் தேதி முதல் செயல்படவுள்ளது. மார்ச் 31 ஆம் தேதி முதல் சென்னை விமான நிலைய பயணிகள் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் கார்டு அல்லது பிற ஆவணங்களை அதிகாரிகளிடம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த முக அங்கிகார அம்சத்தை ஆதரிக்கும் டிஜியாத்ரா மொபைல் ஆப்ஸை இப்போது சுமார் 4.58 மில்லியன் பயனர்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் 2.12 மில்லியன் பயனர்கள் ஆண்ட்ராய்டு (android) டிஜியாத்ரா ஆப்ஸ் பயனர்கள் என்றும், 2.46 மில்லியன் பயனர்கள் iOS டிஜியாத்ரா ஆப்ஸ் பயனர்கள் என்றும் கணக்கெடுப்பு சொல்கிறது. தற்போது டெல்லி, பெங்களூர், வாரணாசி உட்பட 10 இடங்களில் டிஜியாத்ரா திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த வரிசையில் சென்னை சேர்க்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Chennai Airport Gets DigiYatra Service From March 31 2024 Says Ministry of Civil Aviation in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X