செல்போனில் ஆபாச படங்கள் வைத்திருந்தால் நடவடிக்கை: சென்னை ஏடிஜிபி எச்சரிக்கை.!

|

தேவையில்லாத ஆபாச வீடியோக்கள் பலரின் வாழ்க்கையை சீரழிக்கிறது என்றுதான் கூறவேண்டும், இந்நிலையில் குழந்தைகளின் ஆபாச படங்களை செல்போனில் வைத்திருப்பவர்கள் மீது கண்டிபாக நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஏடிஜபி ரவி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மோசமான இணையதளங்கள்

மோசமான இணையதளங்கள்

பல மோசமான இணையதளங்கள் தங்கள் தளங்களில் உறுப்பினர்களாக வைத்துக் கொண்டு அவர்கள் பார்ப்பதற்கு ஆபாவ படங்களை வழங்கி வருகின்றன. அதிலும் சில தளங்கள் கட்டணமில்லாமல் இலசமாக ஆபாச படங்களை வழங்கி வருகின்றன.

ஆபாச இணையதளங்கள்

அதாவது இந்தியாவில் ஆபாச தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும் சில ஆபாச இணையதளங்கள் இன்னும் தொடர்வதாக புகார்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க புலனாய்வு துறை

அமெரிக்க புலனாய்வு துறை

மேலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச் சம்பவங்களில் இந்த ஆபாச படங்களே அதிக முக்கிய பங்கு வகிப்பதாகபல்வேறு சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பின்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க புலனாய்வு துறை வெளியிட்ட தகவலில், குழந்தைகளின் ஆபாசபடங்களை பார்க்கும் மக்களின் பட்டியலில் தமிழகம் இருப்பது தெரியவந்தது.

சென்னை ஏடிஜிபி ரவி

சென்னை ஏடிஜிபி ரவி

இந்நிலையில் சென்னை ஏடிஜிபி ரவி,குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மற்றும் இணையத்தில் பதிவேற்றம்
செய்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவித்தார். ஏற்கனவே இது தொடர்பாக 12நபர்கள் கைதும்செய்யப்பட்டனர், இது அனைத்து இடங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 நடவடிக்கை

நடவடிக்கை

தற்போது ஏடிஜிபி ரவி அவர்கள் மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அதில் செல்போனில் ஆபாச படங்களை
வைத்திருந்தாலே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார், இது தொடர்பாக இன்றுசெய்தியாளர்களை சந்தித்து பேசிய இவர் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றம் சற்று குறைவாக உள்ளது என்று
தெரிவித்தார்.

 குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் முதலிடத்தில் உள்ளதாக

அதிலும் சென்னை நகர் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் முதலிடத்தில் உள்ளதாக புள்ளிவிவரங்கள்
தெரிவிக்கின்றன. பெண்களுக்கான எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் முறை தமிழகம் முழுவதும் உள்ளது எனவும், பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் பட்டியல், ஒவ்வொரு காவல்நிலையத்திலும் ஆவணம் செய்யப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது

போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது

குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து காவல்துறை ஈடுபட்டு வருகிறது,பின்பு குழந்தைகள் ஆபாச படத்தை செல்போனில் வைத்தருந்தால் குற்றம் என போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஜ.ஜி.களுக்கு இந்த சுற்றறிக்கை

ஜ.ஜி.களுக்கு இந்த சுற்றறிக்கை

மேலும் ஆபாச படம் குற்றம் தொடர்பாக அனைத்து உயர் அதிகாரிகள் மற்றும் ஜ.ஜி.களுக்கு இந்த சுற்றறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புகார் அளிக்கும் பட்சத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,குற்றமில்லாத
மாநிலமாக தமிழகம் உருவாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Chennai ADGP Warned Users Having Adult Pictures On Their Smartphones : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X