ஏர்டெல்,ஜியோ, வோடபோன் நிறுவனங்களின் மலிவு விலை போஸ்ட்பெய்ட் திட்டங்கள்.!

|

இந்த கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து வேலை செய்யும் மக்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சிறப்பு சலுகைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது டெலிகாம் நிறுவனங்கள். குறிப்பாக ஏர்டெல், ஜியோ, வோடபோன் போன்ற நிறுவனங்கள் மலிவு விலை பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வந்தது என்றுதான் கூறவேண்டும்.

திட்டங்களிலும் அதிக

அதேசமயம் போஸ்ட்பெயிட்ட திட்டங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது டெலிகாம் நிறுவனங்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஊரடங்கு சமயத்தில் நிறைய மக்கள் போஸ்டபெய்ட் திட்டங்களையும் தேர்வுசெய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தனி வகையை வடிவமைத்துள்ளனர்

தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்காக ஒரு தனி வகையை வடிவமைத்துள்ளனர். அதாவது வோடபோன் ரெட் ஃபேமிலி மற்றும் ரெட் X போன்ற திட்டங்களில் ழுவுவு உள்ளடக்கத்துடன் பல நன்மைகளை வழங்குகிறார்கள்.மேலும் உங்களுக்கு தேவைப்படும் குறைந்த விலை போஸ்ட் திட்டங்களை நாங்கள் இங்கே பட்டியலிடுகிறோம்.

நாசா: விண்வெளி வீரர் பகிர்ந்த கலபகோஸ் தீவு.! வைரல்.! என்ன சிறப்பு?

ரிலையன்ஸ் ஜியோவின் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்

ரிலையன்ஸ் ஜியோவின் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்

ரிலையன்ஸ் ஜியோவின் போஸ்ட்பெய்ட் திட்டங்கள். உண்மையை கூற வேண்டும் என்றால், இந்த குறைந்த விலை பிரிவில் அதிக திட்டங்களை கொண்டிருக்கவில்லை ஜியோ நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் குறைந்த விலை திட்டங்களில் மிகக் குறைந்த பங்களிப்பையே கொண்டுள்ளது. அதன்படி ரூ.199 விலை திட்டத்தை வைத்துள்ளது இந்நிறுவனம். இந்த ரூ.199-திட்டத்தில் 25ஜிபி டேட்டா, 100எஸ்எம்எஸ், அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகல் ஆகியவற்றை வழங்குகிறது. எல்லா நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகளும் இதில் அடங்கும்.

ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்

ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்

ஜியோ நிறுவனத்தை போல் இல்லமால் ஏர்டெல் நிறுவனம் அதிகமான போஸ்ட்பெய்ட் திட்டங்களை கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் முதல் திட்டத்திற்கு ரூ.499 என்ற விலையைக் கொண்டுள்ளது. இந்த திட்டம் 75ஜிபி டேட்டா,வரம்பற்ற அழைப்பை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் அமேசான் பிரைம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப்பிற்கு ஒரு வருட இலவச சந்தாவை வழங்குகிறது. பின்பு இதனுடன் ஜீ 5 சந்தா மற்றும் நன்மைகளை வழங்குகிறது. கூடுதலாக, நீங்கள் விங்க் பிரீமியம், ஷா அகாடமி மற்றும் இலவச ஹெலோட்யூன்களுக்கான சந்தாவைப் பெறுவீர்கள். இருந்தபோதிலும் ஏர்டெல்லின் இந்த திட்டம் கூடுதல் இணைப்பு எதுவும் வழங்கவில்லை.

பெய்ரூட் விபத்தின் அழிவை சாட்டிலைட் படத்தின் மூலம் வெளியிட்ட நாசா!

வோடபோன் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்

வோடபோன் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்

வோடபோன் நிறுவனமும் நிறைய போஸ்ட்பெய்ட் திட்டங்களை கொண்டுள்ளது. இதன் ரூ.399 மதிப்புடையை போஸ்ட்பெய்ட் திட்டம் ஆனது ரோல்ஓவர் வசதியுடன் 40ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் 100எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறத. பின்பு இந்த திட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு ரூ.499 மதிப்புள்ள இலவச வோடபோன் ப்ளே சந்தா மற்றும் ZEE5 பிரீமியம் அணுகல் கிடைக்கிறது. இந்த எல்லா திட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகு, ஏர்டெல் பேக் மற்ற எல்லாவற்றையும் விட பல நன்மைகளை வழங்குகிறது என்று தெரிகிறது.

சொல்ல வேண்டும் என்றால் ஏர்டெல்

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஏர்டெல் நிறுவனம் சிறந்த போஸ்ட்பெய்ட் நன்மைகளை வழங்குகிறது. மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.499-திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது, இதை பயனர்கள் தேர்வு செய்வது மிகவும் நல்லது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Checkout This All Low Cost Postpaid Plans From Jio, Airtel And Vodafone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X