உண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.!

விருந்தோம்பல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி இவ்விரண்டையும் ஒன்று சேர்த்து, தனியார் ஹோட்டல் நிறுவனம் ஒன்று ஸ்மார்ட் ஹோட்டல் சேவையை உருவாகியுள்ளது.

|

விருந்தோம்பல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி இவ்விரண்டையும் ஒன்று சேர்த்து, தனியார் ஹோட்டல் நிறுவனம் ஒன்று ஸ்மார்ட் ஹோட்டல் சேவையை உருவாகியுள்ளது.

உண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.!

சீனாவில் உள்ள முன்னணி நிறுவனமான மேரியாட் இன்டர்நேஷனல் நிறுவனம், இந்த ஸ்மார்ட் LYZ ஹோட்டல் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்மார்ட் ஹோட்டல்

ஸ்மார்ட் ஹோட்டல்

இந்த ஸ்மார்ட் ஹோட்டலின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த ஹோட்டலில் மனிதர்களின் சேவையே கிடையாது. அனைத்துச் சேவைகளையும் ரோபோட்கள் தான் செய்து முடிகிறது. இதற்காகப் பிரத்தியேக ஏ.ஐ ரோபோட்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

ரோபோட் சேவை

ரோபோட் சேவை

மனிதர்களே இல்லாமல் எப்படி ஹோட்டல் சேவை என்று நீங்கள் கேட்கலாம், செக் இன் மற்றும் செக் அவுட் செய்து பில் பணத்தைக் கணக்கிட்டு சொல்வதற்கும், ரூம் சர்வீஸ் செய்வதற்கும், உணவு தயாரிப்பதற்கும் மற்றும் அதனை உங்கள் ரூம் கொண்டு வந்து சேர்ப்பதற்கும் என்று அனைத்துச் சேவைகளையும் ரோபோட்கள் மட்டுமே செய்கிறது.

வெளி ஆட்களுக்கு அனுமதி இல்லை

வெளி ஆட்களுக்கு அனுமதி இல்லை

வாசலில் செக்யூரிட்டி வேலைக்குக் கூட மனிதர்கள் இந்த ஹோட்டலில் இல்லை. ஹோட்டலில் தங்கியிருக்காத யாரும் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். நுழைவாயிலில் உள்ள ரோபாட்டிடம் விண்ணப்பதாரர்கள் தங்கள் மொபைல் எண்ணைச் சரிபார்க்க வேண்டும், அனுமதி என் இல்லாத யாரையும் ரோபோட்கள் உள்ளே அனுமதிப்பதில்லை.

தொழில்நுட்ப சொர்க உலகம்

தொழில்நுட்ப சொர்க உலகம்

ஹோட்டலின் முழு கட்டுப்பாட்டையும் ரோபோட்கள் பக்குவமாக கவனித்துக்கொள்கிறது. இங்குத் தங்கும் விருந்தாளிகள் மட்டுமே மனிதர்கள் என்று ஹோட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இங்குத் தங்கும் விருந்தாளிகளுக்கு நிச்சயம் "தொழில்நுட்ப சொர்க உலகம்" காட்டப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நடமாடும் ரோபோட்

நடமாடும் ரோபோட்

இந்த ஹோட்டலில் ரிசெப்ட்ஷன் டேபிள் கிடையாது, நடமாடும் ரோபோட் உங்கள் செக் இன் பதிவுகளை சரி பார்த்து உங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு உங்களை அன்புடன் வரவேர்த்து அழைத்துச் செல்கிறது.

ரூம் சர்வீஸ் ரோபோட்

ரூம் சர்வீஸ் ரோபோட்

நீங்கள் ஆர்டர் செய்யும் உணவு மற்றும் உதவிகளை ரூம் சர்வீஸ் ரோபோட்கள் கட்சிதமாக செய்து முடிகின்றது. நீங்கள் இருக்கும் அறைக்கே நீங்கள் ஆர்டர் செய்த உணவுகளைப் பத்திரமாக கொண்டு வந்து சேர்த்து உங்களை அன்புடன் உபசரிக்கிறது.

 கீ-கார்டு

கீ-கார்டு

மேரியாட் இன்டர்நேஷனல் நிறுவனம், அலிபாபா நிறுவனத்துடன் இணைந்து புதிய செக் இன் ரோபோட்டை உருவாகியுள்ளது. இதன்படி வெறும் 3 நிமிடங்களில் உங்களைப் போட்டோ பிடித்து, உங்களின் ஐ.டி களை ஸ்கேன் செய்து, உங்கள் மொபைல் எண்களைச் சரிபார்த்துவிட்டு உங்கள் ரூமிற்க்கான கீ-கார்டை உடனே வழங்கிவிடுகிறது.

வாய்ஸ் கண்ட்ரோல் சேவை

வாய்ஸ் கண்ட்ரோல் சேவை

இந்த ஹோட்டலில் தங்கும் விருந்தாளிகளுக்குச் சிறப்பான தொழிநுட்ப அனுபவத்தை வழங்குவதற்காகவே, வாய்ஸ் கண்ட்ரோல் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அறையின் ஏ.சி, லைட், டிவி, ஷவர் என அனைத்தும் தயாரிப்புகளும் வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் இயங்கும் வசதியுடன் வருகிறது. இது போன்ற ஹோட்டல்கள் தான் எதிர்காலத்தில் அதிகம் இருக்கும் என்கிறது ஆய்வின் முடிவு.

Best Mobiles in India

English summary
Checking into a Chinese hotel just got more fun : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X