வங்கியில் எளிதாக கடன் வாங்க வேண்டுமா? அப்போ முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க.. ஆன்லைன் CIBIL ஸ்கோர் செக்..

|

கோவிட் தோற்று நோய் மீண்டும் நாட்டில் பரவத் துவங்கியுள்ள நிலையில், மக்கள் பதட்டம் அடைந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு நாட்டில் ஏராளமாக நிதிப் பற்றாக்குறை உருவாகி வருகிறது. மக்களும் அவர்களின் தேவைக்காகவும், அவர்களின் நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காகவும் பல வழிகளில் பணத்தைச் சேகரிக்க முயன்று வருகின்றனர். சிலர் வங்கிகளிடம் இருந்து கடன் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இன்னும் சிலர் அவர்களின் EPFO கணக்கில் இருக்கும் பணத்தை வெளியில் எடுத்து அவர்களின் நிதிப் பற்றாக்குறையை மேம்படுத்த முயன்று வருகின்றனர்.

உங்கள் கைகளில் இந்த தகவல் இருந்தால் வங்கிக் கடன் எளிதாகக் கிடைக்குமா?

உங்கள் கைகளில் இந்த தகவல் இருந்தால் வங்கிக் கடன் எளிதாகக் கிடைக்குமா?

உங்களுடைய சூழ்நிலை ஏதுவாக இருந்தாலும் சரி, வங்கியில் இருந்து நீங்கள் கடன் வாங்கும் எண்ணத்தில் இருக்கிறீர்கள் என்றால், இந்த பதிவை முழுமையாக இறுதி வரை தொடர்ந்து படியுங்கள். அரசுடன் தொடர்புடைய வங்கி அல்லது தனியார் வங்கி என்று ஏதுவாக இருந்தாலும், நீங்கள் எளிமையாகக் கடன் வாங்க வேண்டும் என்றால், முதலில் உங்கள் சிபில் ஸ்கோர் மதிப்பெண்களைச் சரி பார்த்து, அந்த தகவலை உங்கள் கைகளில் தயாராக வைத்துக்கொண்டு வங்கியை நாடுவது சிறப்பானது.

சிபில் ஸ்கோர் என்ன அடிப்படையில் செயல்படுகிறது?

சிபில் ஸ்கோர் என்ன அடிப்படையில் செயல்படுகிறது?

சிபில் என்பது கடன் தகவல் பணியகம் லிமிடெட் (இந்தியா) அல்லது சிபில் அறிக்கை அல்லது கடன் தகவல் அறிக்கை என்ற சிஐஆர் (CIR) மூலம் உங்களின் கடன் வரலாற்றுத் தேதியைப் பட்டியலிட்டு மதிப்பெண்ணை வழங்கும் ஒரு சேவையாகும். இதில் நீங்கள் எப்படிக் குறிப்பிட்ட காலப் பகுதியில் பல்வேறு வகையான கடன்கள் மற்றும் வரவுகளைத் திருப்பிச் செலுத்தியுள்ளீர்கள் என்பது போன்ற முக்கிய நிதி தகவல்கள் அனைத்தும் இதில் பதிவு செய்யப்பட்டிருக்கும். முந்தைய கொடுப்பனவுகளை நீங்கள் எவ்வளவு சரியான நேரத்தில் திருப்பி செலுத்தியுள்ளீர்கள் என்பதை இது அடிப்படையாகக் கொண்டது. அதன் அடிப்படையிலேயே உங்களின் சிபில் ஸ்கோர் மாறுபடும்.

கிரெடிட் கார்டு பயனர்ளே உஷார்.. இனி தாமதமாக கட்டணம் செலுத்தினால் டபுள் அபராதம்.. அதிகரிக்கும் கட்டணம்..கிரெடிட் கார்டு பயனர்ளே உஷார்.. இனி தாமதமாக கட்டணம் செலுத்தினால் டபுள் அபராதம்.. அதிகரிக்கும் கட்டணம்..

சிபில் ஸ்கோர் வரம்பு எத்தனை மதிப்பெண் தெரியுமா?

சிபில் ஸ்கோர் வரம்பு எத்தனை மதிப்பெண் தெரியுமா?

உங்கள் சிபில் மதிப்பெண் 300 முதல் 900 என்ற வரம்பைக் கொண்டுள்ளது. உங்களுடைய தரமான சிபில் மதிப்பெண் புதிய கடன் ஒப்புதல்களை எளிதில் பெற உங்களை அனுமதிக்கிறது. டிரான்ஸ்யூனியன் சிபில் வலைத்தளத்தின்படி, அனுமதிக்கப்பட்ட கடன்களில் 79 சதவிகிதம் மேற்பட்ட பயனர்களின் சிபில் ஸ்கோர் 750க்கும் அதிகமாக இருந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் சிபில் மதிப்பெண்ணைப் பல ஏஜென்சிகள் மூலம் நீங்கள் சரிபார்க்கலாம். இதைச் சிலர் இலவசமாகச் சோதனை செய்து உங்களுக்கு வழங்குவார்கள். இன்னும் சிலர் இதைக் கட்டணம் இல்லாமல் உங்களுக்கு வழங்குவதில்லை.

இலவசமாக சிபில் ஸ்கோர் செக் செய்வது எப்படி?

இலவசமாக சிபில் ஸ்கோர் செக் செய்வது எப்படி?

ஆனால், பெரும்பாலானவர்கள் உங்களிடம் ஒருவித சந்தா கட்டணத்தை வசூலித்த பிறகே உங்களின் சிபில் மதிப்பினை உங்களுக்குத் தெரியப்படுத்துவார்கள். உங்கள் சிபில் மதிப்பெண்ணைச் சரிபார்க்கச் சிறந்த வழி அதிகாரப்பூர்வ வலைத்தளமான cibil.com வலைத்தளத்தை நீங்கள் பயன்படுத்தலாம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நீங்கள் இலவசமாக உங்களின் சிபில் மதிப்பெண் அறிக்கையைப் பெற முடியும். நீங்கள் இதை இலவசமாக எவ்வாறு செய்யலாம் என்பதற்கான செயல்முறைகளை இப்போது பார்க்கலாம்.

நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறீர்களா? பிஎஃப் கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் உடனே எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறீர்களா? பிஎஃப் கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் உடனே எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?

சிபில் மதிப்பெண்ணை இலவசமாகச் சரிபார்க்க என்ன செய்ய வேண்டும்?

சிபில் மதிப்பெண்ணை இலவசமாகச் சரிபார்க்க என்ன செய்ய வேண்டும்?

  • உங்கள் சிபில் மதிப்பெண்ணை இலவசமாகச் சரிபார்க்க இந்த செயல்முறையைப் பின்பற்றுங்கள்.
  • முதலில் நீங்கள் உங்கள் சிபில் மதிப்பெண் அறிக்கையைத் தெரிந்துகொள்ள, அதிகாரப்பூர்வ தளமான Cibil.com வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்.
  • ஹோம் பேஜில் உள்ள தனிப்பட்ட டேப் இன் கீழ் இருக்கும் Help Center ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். இப்போது Free CIBIL Score and Report விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அடுத்து, Get Your Free CIBIL Score and Report பட்டனை கிளிக் செய்க.
  • அடையாள எண் பகுதியில் எந்த அடையாள எண்களை எண்டர் செய்வது?

    அடையாள எண் பகுதியில் எந்த அடையாள எண்களை எண்டர் செய்வது?

    • அடுத்த பக்கத்தில், மின்னஞ்சல் முகவரி போன்ற உங்கள் தனிப்பட்ட தகவல்களை உள்ளிடவும். பாஸ்வோர்டு, பெயர், தொலைப்பேசி எண் மற்றும் அடையாள எண் போன்றவற்றை உருவாக்கவும்.
    • இந்த அடையாள எண் உங்கள் பான், பாஸ்போர்ட், வாக்காளர் ஐடி, டிரைவர் உரிமம் அல்லது ரேஷன் கார்டு எண்ணாக இருக்கலாம்.
    • நீங்கள் அனைத்து தகவல்களையும் உள்ளிட்டதும், Accept and Continue என்பதைக் கிளிக் செய்க.
    • அடுத்து, சந்தா திட்டத்தைத் தேர்வு செய்யுமாறு கேட்கப்படுவீர்கள்.
    • ஆனால் கீழே No Thanks என்பதைக் கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு முன்னேறலாம்.
    • பிளாட்பாரம் டிக்கெட்டை வைத்து ரயிலில் பயணம் செய்ய முடியுமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே..பிளாட்பாரம் டிக்கெட்டை வைத்து ரயிலில் பயணம் செய்ய முடியுமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே..

      உங்கள் டிஸ்பிளேவில் இந்த செய்தி வரும் வரை காத்திருக்கவும்

      உங்கள் டிஸ்பிளேவில் இந்த செய்தி வரும் வரை காத்திருக்கவும்

      • நீங்கள் தற்போது பயன்படுத்தும் சாதனத்தை இணைக்க விரும்புகிறீர்களா என்று கேட்கப்படும்.
      • இது வலைத்தளத்தை எளிதான உள்நுழைவு அனுபவத்தை வழங்க அனுமதிக்கிறது.
      • நீங்கள் இங்கே இருக்கும் விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து Continue என்பதைக் கிளிக் செய்யலாம். "You have successfully enrolled" என்று ஒரு டிஸ்பிளே மெசேஜ்ஜை காண்பீர்கள்,Go To Dashboard பட்டனை கிளிக் செய்யுங்கள்.
      • அடுத்த பக்கம் உங்கள் சிபில் மதிப்பெண்ணை டிஸ்பிளேவில் காண்பிக்கும்.
      • வருடத்திற்கு எத்தனை முறை இலவசமாக சிபில் ஸ்கோர் செக் செய்யலாம்?

        வருடத்திற்கு எத்தனை முறை இலவசமாக சிபில் ஸ்கோர் செக் செய்யலாம்?

        வருடத்திற்கு ஒரு முறைக்கு மேல் சிபில் மதிப்பெண்ணை நீங்கள் சரிபார்க்க வேண்டும் என்றால், நீங்கள் அந்த சேவைக்கு என்று தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும். CRIF, Experian போன்ற பிற தளங்கள் வழியாகவும் உங்கள் சிபில் மதிப்பெண்ணை இலவசமாகச் சரிபார்க்கலாம். ஆனால், இந்த நிறுவனங்களுக்கு இடையில் உங்கள் மதிப்பெண் வேறுபடலாம் என்பதை நினைவில் கொள்க. முன்னர் குறிப்பிட்டபடி, உங்கள் சிபில் மதிப்பெண்ணைக் காட்டக்கூடிய மூன்றாம் தரப்பு வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகள் எல்லாமாக பிளே ஸ்டோரில் இருக்கின்றது.

        நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் வேகமாக தான் இருக்கிறதா? எப்படி அதை கண்டறிவது? ஈஸி டிப்ஸ்..நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் வேகமாக தான் இருக்கிறதா? எப்படி அதை கண்டறிவது? ஈஸி டிப்ஸ்..

        எப்படி சிபில் ஸ்கோரை சரியான ஸ்கேலில் பராமரிப்பது?

        எப்படி சிபில் ஸ்கோரை சரியான ஸ்கேலில் பராமரிப்பது?

        ஆனால், அவற்றின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை மீது உறுதியான நம்பிக்கை இல்லாததினால் நீங்கள் எப்போதும் அதிகாரப்பூர்வ சிபில் வலைத்தளத்தைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது. வங்கியில் இருந்து கடன் வாங்க விரும்புபவர்கள் முன்கூட்டியே சிபில் ஸ்கோர் மதிப்பெண்களைச் சோதனை செய்து பார்த்துக்கொள்வது சிறப்பானது. சிபில் ஸ்கோர் அடிப்படையில் தான் உங்களுக்கு வங்கியில் இருந்து கடன் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதனால், உங்கள் சிபில் மதிப்பெண்களை எப்போது பச்சை நிறத்தில் இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள். சிபில் மதிப்பெண் பச்சையில் இருப்பதற்கு நீங்கள் வாங்கிய கடன்கள் மற்றும் வரவுகளைச் சரியான நேரத்தில் தவறாமல் செலுத்தி வாருங்கள்.

Best Mobiles in India

Read more about:
English summary
Check Your CIBIL Score On Online For Free Before You Get Loan From Banks : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X