Home
News

இந்த Vi, Airtel மற்றும் BSNL திட்டங்களை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்.. இவையெல்லாம் 'கேம் சேஞ்சிங்' திட்டங்கள்

இந்தியச் சந்தையில் ஏராளமான ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன. அதிக போட்டியின் காரணமாக, ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக முடிந்தவரைப் பல விருப்பங்களை வழங்கி வருகிறது. வோடபோன் ஐடியா (Vi), பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவற்றிலிருந்து சில ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன. இந்தத் திட்டங்கள் மிகவும் தனித்துவமானவை மற்றும் பயனர்கள் செலுத்தும் பணத்திற்கு உண்மையிலேயே சிறந்த பலன்களை வழங்குகின்றன என்பதனால் இதை இங்கே உங்களுக்குப் பரிந்துரைக்கிறோம்.

நீங்கள் கவனிக்க வேண்டிய வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டம்

நீங்கள் கவனிக்க வேண்டிய வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டம்

Vodafone Idea (Vi) பயனர்களுக்கு ரூ. 699 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் தனித்துவமான விஷயம் என்னவென்றால், இது நிறுவனத்தின் டபுள் டேட்டா சலுகையைத் தனது பயனர்களுக்கு இணைத்து வழங்குகிறது. இந்தியாவில் உள்ள வேறு எந்த டெலிகாம் ஆபரேட்டரும் அதன் பயனர்களுக்கு இரட்டை டேட்டா சலுகையுடன் கூடிய ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நன்மையுடன் பயனர்களுக்கு இன்னும் ஏராளமான நன்மைகளும் கிடைக்கிறது.

டபுள் டேட்டா நன்மையோடு கிடைக்கும் ஏராளமான சலுகைகள்

டபுள் டேட்டா நன்மையோடு கிடைக்கும் ஏராளமான சலுகைகள்

இந்த திட்டத்தில், தினசரி 2 ஜிபி டேட்டாவைப் பெறுவதற்குப் பதிலாக, டபுள் டேட்டா நன்மையோடு பயனர்களுக்குத் தினசரி 4 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். இந்த திட்டம் மொத்தம் 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகிறது. அதாவது பயனர்கள் இந்த திட்டத்தின் மூலம் மொத்தம் 336 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். ஆனால், நன்மைகள் இத்துடன் நிற்கவில்லை, இன்னும் இருக்கிறது. இந்த திட்டத்தில் உள்ள பயனர்களுக்கு வார இறுதியில் டேட்டா ரோல்ஓவர் நன்மையையும் நிறுவனம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இரவு முழுக்க இலவச டேட்டா வேண்டுமா? அப்போ இது தான் சரியான திட்டம்

இரவு முழுக்க இலவச டேட்டா வேண்டுமா? அப்போ இது தான் சரியான திட்டம்

இத்துடன் Binge All Night சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் மூலம் நாளிரவு முதல் அதிகாலை வரை அன்லிமிடெட் டேட்டா பயன்பாட்டை நீங்கள் எந்த கட்டணமும், எந்த வரம்பும் இல்லாமல் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். நிறுவனத்தின் இரண்டு கூடுதல் சலுகைகளும் Vi இன் ப்ரீபெய்ட் திட்டங்களில் நீங்கள் பெறும் டேட்டா அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. நிச்சயமாக, இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 SMS ஆகிய நன்மைகளுடன் OTT நன்மையோடு விஐ மூவீஸ் & டிவி நன்மையையும் பயனர்களுக்கு வழங்குகிறது.

கம்மி விலையில் இதே நன்மைகளுடன் திட்டங்கள் உள்ளதா?

கம்மி விலையில் இதே நன்மைகளுடன் திட்டங்கள் உள்ளதா?

வோடஃபோன் ஐடியா நிறுவனம் இதேபோன்ற நன்மைகளுடன் ரூ. 299 விலையில் ஒரு திட்டத்தையும் மற்றும் ரூ. 449 என்ற விலையில் மற்றொரு திட்டத்தையும் இப்போது வழங்குகிறது. இந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களுடன் இரட்டை டேட்டா சலுகைகள் முதல் அனைத்து நன்மைகளும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய திட்டத்திற்கும் இந்த இரண்டு திட்டங்களுக்கும் செல்லுபடியாகும் காலங்களில் மட்டும் மாற்றம் உள்ளது. இது தவிர இந்த இரண்டு திட்டங்களும் வழங்கும் பலன்கள் எல்லாம் ஒரே மாதிரியானது தான் என்பதில் குழப்பமில்லை.

பாரதி ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம்

பாரதி ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம்

பாரதி ஏர்டெல் பயனர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு அதன் சராசரி வருவாயை ஒரு பயனருக்கு (ARPU) அதிகரிப்பதில் உதவுவது மட்டுமல்லாமல், அதற்கு எதிராகப் பயனர்களுக்குச் சிறப்பான ஒன்றையும் வழங்கும். நாங்கள் பேசும் திட்டத்தின் விலை ரூ. 2798 ஆகும். இது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான இலவச சந்தாவை ஒரு வருடத்திற்கான திட்டமாக மட்டுமே வழங்குகிறது.

இந்த விலையில் இத்தனை நன்மைகளை ஏர்டெல் வழங்குகிறதா?

இந்த விலையில் இத்தனை நன்மைகளை ஏர்டெல் வழங்குகிறதா?

மேலும், இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 SMS நன்மை0 ஆகியவற்றை வழங்குகிறது. அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பின் ஒரு மாதத்திற்கான இலவச சோதனை, Apollo 24|7 சர்க்கிள் காப்பீடு, விங்க் மியூசிக் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய Airtel தேங்க்ஸ் நன்மைகளுக்கான அணுகலையும் பயனர்கள் பெறுகின்றனர். சிறப்பான கூடுதல் நன்மைகள் வழங்கும் திட்டங்களில் ஏர்டெல் மட்டுமே முன்னிலையில் உள்ளது. கூடுதல் டேட்டா வழங்கும் திட்டங்களை Vi மட்டுமே வைத்துள்ளது.

பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் தனது பயனர்களுக்கு ரூ. 398 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டம் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குப் பல வகைகளில் கேம்-சேஞ்சராக உள்ளது. பயனர்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் திட்டத்துடன் உண்மையிலேயே வரம்பற்ற டேட்டா நன்மையை இந்த திட்டம் வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் வழங்கும் ரூ. 398 திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் மட்டுமே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா நன்மை கிடைக்கிறது என்பது சிறப்பானது.

இதை கவனிக்க மறக்காதீர்கள்

இதை கவனிக்க மறக்காதீர்கள்

இந்த திட்டத்தால் வழங்கப்படும் OTT நன்மைகள் எதுவும் இல்லை. பயனர்களுக்கு உண்மையிலேயே வரம்பற்ற டேட்டாவை வழங்கும் வேறு எந்தத் திட்டமும் இந்தத் துறையில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. மற்ற ஆபரேட்டர்கள் தங்கள் ARPU எப்படி அதிகரிக்கும் என்பதைப் பார்க்க அதிக விலைக்கு இதேபோன்ற ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கினால் அற்புதமாக இருக்கும். யாருக்குத் தெரியும், ஒருவேளை எதிர்காலத்தில் இது மாறலாம். உங்கள் தேவைக்கேற்ப எந்த சலுகை வேண்டும் என்பதை யூகித்து, உங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களைத் தேர்வு செய்யுங்கள்.

Best Mobiles in India

English summary
Check These Vi Airtel and BSNL Prepaid Plans With Great Unlimited And Extra Benefits : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X