Home
News

இந்த விஷயங்களை செக் செய்த பிறகு தான் புது Laptop வாங்கணும்! இல்லைனா ஏமாந்துடுவீங்க!

புது லேப்டாப் வாங்கும் போது, நாம் என்னென்ன விஷயங்களை எல்லாம் நுணுக்கமாக கவனிக்க வேண்டும் என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, நீங்கள் ஒரு கேமிங் லேப்டாப்பை வாங்க போகிறீர்கள் என்றால், கட்டாயம் இந்த நுணுக்கங்கள் தெரியாமல் லேப்டாப் வாங்கக்கூடாது.

ஒரு புது லேப்டாப்பை வாங்கும் போது, என்னென்ன விஷயங்களை எல்லாம் நாம் கட்டாயம் கவனிக்க வேண்டும் என்பதை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். உயர்தர ஸ்பெக்ஸ் அம்சங்களை ஒரு லேப்டாப் பெற்றிருக்கிறது என்றால், அது அருமையான சாதனம் என்று பொருள் ஆகிவிடாது. உங்கள் பட்ஜெட்டிற்குள், எது சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது? எது உங்களுக்குச் சிறப்பானது? என்பதை நாம் தெரிந்து வாங்க வேண்டும்.

இந்த விஷயங்களை செக் செய்த பிறகு தான் புது Laptop வாங்கணும்! இல்லைனா?

இந்த விஷயங்கள் கேமிங் லேப்டாப்பிற்கு மட்டும் பொருந்தும் என்று நினைக்காதீர்கள். பொதுவாக நீங்கள் ஒரு லேப்டாப்பை வாங்க நினைத்தாலும், இந்த விஷயங்களைக் கவனித்த பிறகு, உங்கள் இறுதி தேர்வை முடிவு செய்தால், கட்டாயமாக உங்களால் ஒரு சிறந்த லேப்டாப் சாதனத்தை வாங்க முடியும். சரி, முதலில் நாம் எந்த விஷயத்தைக் கவனிக்க வேண்டுமென்று பார்க்கலாமா? முதலில் நீங்கள் கவனிக்க வேண்டியது,
உங்களுடைய பட்ஜெட்டை தான்.

நீங்கள் ஷாப்பிங் செய்யத் தொடங்குவதற்கு முன் எவ்வளவு செலவழிக்கத் தயாராக இருக்கிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கவும். கேமிங் பிசிக்களுக்கான விலை வரம்பு பரவலாக மாறுபடும், எனவே யதார்த்தமான பட்ஜெட்டை அமைப்பது முக்கியம். உங்கள் கேமிங் லேப்டாப்பில் இருந்து உங்களுக்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்மானிக்க உங்கள் பட்ஜெட் மிகவும் முக்கியமானது. ஒரு சரியான வரம்பிற்குள், உங்களுக்கான மாடலை தேடுவது சிறப்பானது.

கேமிங் லேப்டாப்கள் பல விதமான பரந்த அளவிலான ஸ்பெக்ஸ் அம்சங்களுடன் கிடைக்கின்றன. எனவே, உங்கள் கேமிங் லேப்டாப்பில் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை முன்பே புரிந்துகொள்வது அவசியம். இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் மிட்-ரேஞ்சில் ஒரு கேமிங் லேப்டாப்பை தேடுகிறீர்கள் என்றால், இடைப்பட்ட விவரக்குறிப்புகளுடன் ஒரு லேப்டாப் மாடலை தேர்வு செய்யவும். நீங்கள் இப்போது கவனிக்க வேண்டிய விஷயம் கிராபிக்ஸ் கார்டை பற்றியது.

இந்த விஷயங்களை செக் செய்த பிறகு தான் புது Laptop வாங்கணும்! இல்லைனா?

கிராபிக்ஸ் கார்டு கேமிங் பிசியின் மிக முக்கியமான கூறுகளில் ஒன்றாகும். ஆகையால், இதை நீங்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். சிறந்த செயல்திறனை உறுதிசெய்யக் குறைந்தது 4ஜிபி VRAM கொண்ட கார்டு முதல் தேர்வு செய்வது சிறப்பானது. அடுத்தபடியாக நீங்கள் கவனிக்க வேண்டியது, உங்கள் புது கேமிங் லேப்டாப்பின் பிராசஸர் பற்றியது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மறக்காதீர்கள்.

CPU தான் உங்கள் லேப்டாப்பின் மூளை என்பதனால், குறைந்தபட்சம் நான்கு கோர்கள் மற்றும் 3GHz அல்லது அதற்கும் அதிகமான கிளாக் வேகம் கொண்ட CPU ஐக் நீங்கள் குறிவைப்பது சிறப்பானது. முடிந்த வரை, சமீபத்திய தலைமுறை செயலிகளுக்குச் செல்வது கூடுதல் சிறப்பானது. அடுத்தபடியாக, லேப்டாப்பின் ரேம் மற்றும் ஸ்டோரேஜ்ஜை நாம் நன்றாகக் கவனிக்க வேண்டும். உங்களிடம் அதிக ரேம் இருந்தால், உங்கள் லேப்டாப் சூப்பர் சிறப்பாகச் செயல்படும் என்பதே உண்மை.

குறைந்தபட்சம் 8 ஜிபி ரேம் கொண்ட லேப்டாப்கள் முதல் உங்கள் தேர்வை தேட துவங்கலாம். இதேபோல், அதிக ஸ்டோரேஜ் கொண்ட மாடலை தேர்வு செய்வது சிறந்தது. கேமிங் செயல்திறனை அதிகரிக்க SSD விருப்பம் சிறந்தது. அடுத்தபடியாக நீங்கள் கவனிக்க வேண்டியது, அந்த லேப்டாப்பின் வெப்ப நிர்வாகத் தன்மையைப் பற்றியது. ஒரு கேமிங் லேப்டாப்பின் மிக முக்கியமான அம்சம் அதில் உள்ள குளிரூட்டும் அமைப்பு ஆகும்.

சரியான கூலிங் அம்சம் இல்லாத லேப்டாப் கட்டாயமாகச் சிறிய காலத்தில் திறனற்றதாக மாறிவிடும். எனவே, நீங்கள் செலக்ட் செய்யும் லேப்டாப்பில் சிறந்த குளிரூட்டலுக்கு போதுமான காற்றோட்டம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது தவிர RGB கீபோர்ட் உள்ளதா என்று கவனியுங்கள். அதேபோல், நீங்கள் தேர்வு செய்யும் மாடலில் உங்கள் தேவைக்கேற்ப அதன் செயல்திறனை நன்றாக மாற்றுவதற்கான தீர்வு உள்ளதாக என்பதைச் சோதனை செய்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Check These Important Things Before Buying a New Gaming Laptop
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X