Just In
- 3 hrs ago
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- 4 hrs ago
இவ்வளவு கம்மி விலைனா கண்டிப்பா Infinix Note 12i வாங்கலாமே.! ரேட் எவ்வளவு தெரியுமா?
- 4 hrs ago
ஆப்பிள் வாட்ச் தோற்றத்தில் அறிமுகமான Ptron ஸ்மார்ட்வாட்ச்: கம்மி விலை.!
- 4 hrs ago
அங்கே சூரிய வெளிச்சமே படாது.. அதனால் அங்கே? நிலவின் முதுகு பற்றிய நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானி!
Don't Miss
- News
வருது! வருது!.. தமிழ்நாடு டூ ஆந்திரா.. புதிய 6 வழிச்சாலைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி
- Automobiles
எவ்வளவு காசை கொட்டி கொடுத்தாலும் இந்த புதிய ஜாவா பைக்கை வாங்குறது கஷ்டம்!! காரணம் என்ன தெரியுமா?
- Lifestyle
உங்க முகம் பொலிவிழந்து கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை நைட் டைம்-ல போடுங்க...
- Sports
கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமா?
- Finance
தீபிந்தர் கோயல் கொடுத்த செம அப்டேட்.. 800 பேருக்கு நல்ல சான்ஸ்.. நீங்க ரெடியா?
- Movies
பரிதாபங்கள் கோபி -சுதாகர் இணையும் புதிய படம்.. பூஜையுடன் இன்று துவக்கம்!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
WhatsApp இல் யார் உங்களை Block செய்தார்கள் என்று தெரியனுமா? இந்த 5 டிப்ஸை பாருங்க.!
WhatsApp தனது பயனர் பாதுகாப்பின் மீது அதிக கவனம் செலுத்துகிறது. இதற்காக, மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் தொடர்ந்து பல அம்சங்களை மேம்படுத்தி, ஒவ்வொரு மாதமும் புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. இப்படி, பயனர்களின் பாதுகாப்பான சாட்டிங் அனுபவத்தைச் சிறப்பானதாக மாற்ற WhatsApp அறிமுகம் செய்த அம்சம் தான் Block அம்சம். வாட்ஸ்அப் இல் இந்த பிளாக் அம்சம் எதற்காக இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும் தானே.

நீங்கள் WhatsApp இல் Block செய்யப்பட்டுள்ளீர்களா? WhatsApp Block என்ன செய்யும்?
இருந்தாலும், ஒரு முறை ஷார்ட்டாக இந்த Block அம்சம் என்ன செய்யும் என்பதை விளக்கிவிட்டு, பின் நேரடியாக விஷத்திற்குள் செல்லலாம். உங்கள் WhatsApp பட்டியலில் உள்ள எந்த எண்ணையும் அல்லது வாட்ஸ்அப் காண்டாக்ட்டையும் இந்த அம்சம் பிளாக் செய்ய அனுமதிக்கும். வாட்ஸ்அப் இல் பிளாக் செய்யப்பட்ட பயனர்களிடம் இருந்து மெசேஜ், வாய்ஸ் மற்றும் வீடியோ கால் போன்ற எந்த சேவையும் உங்களைத் தொந்தரவு செய்ய அனுமதிக்காது.

உங்களுக்கு பிடிக்காத நபரை வாட்ஸ்அப் இல் பிளாக் செய்வது எப்படி?
அதேபோல், பிளாக் செய்யப்பட்ட வாட்ஸ்அப் பயனர்களுக்கு உங்களுடைய ஸ்டேட்டஸ் விபரம், ப்ரொபைல் போட்டோ, லாஸ்ட் சீன் தகவல் போன்ற மற்ற அம்சங்களும் கூட காண்பிக்கப்படமாட்டாது. பிளாக் செய்யப்பட்ட பயனர்களால் எந்த தகவலையும் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு விருப்பம் இல்லாத நபர்களை பிளாக் செய்ய WhatsApp Settings > Account > Privacy > Blocked contacts > Add contact என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

சேவ் செய்யாத மொபைல் எண்ணை எப்படி WhatsApp Block செய்வது?
உங்கள் போனில் சேமிக்கப்படாத மொபைல் நம்பரை பிளாக் செய்ய விரும்பினால், நீங்கள் பிளாக் செய்ய விரும்பும் சாட் பாக்ஸை ஓபன் செய்து, அங்குக் காணப்படும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும், பின்னர் contact option > more > block > confirm கிளிக் செய்யவும். சரி, பிளாக் செய்வது எப்படி என்பதை இப்போது பார்த்துவிட்டோம். உங்களுக்கு நெருக்கமான சிலர் உங்களை WhatsApp இல் பிளாக் செய்துள்ளார்களா என்பதைக் கண்டறிய சில எளிய வழிகள் உள்ளது.

WhatsApp இல் நீங்கள் பிளாக் செய்யப்பட்டதை கண்டறிய முடியுமா?
உங்கள் நெருங்கிய நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது உங்களுடைய கோபமான காதலி கூட உங்களை WhatsApp Block செய்திருக்க வாய்ப்பிருக்கிறது. இப்படி, உங்கள் காண்டாக்ட் உடன் இருக்கும் யாராவது உங்களை பிளாக் செய்துள்ளார்களா என்பதைச் சரிபார்க்க வாட்ஸ்அப் இல் நேரடி அம்சம் என்று எதுவுமே இல்லை. ஆனால், இந்த 5 விஷயங்களை நீங்கள் காண்கிறீர்கள் என்றால், நீங்கள் பிளாக் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

லாஸ்ட் சீன் விபரங்களை செக் செய்ய வேண்டுமா?
உங்கள் WhatsApp காண்டாக்ட்டில் இருக்கும் நபரின் லாஸ்ட் சீன் தகவலை உங்களால் பார்க்க முடியவில்லை என்றால், நீங்கள் பிளாக் செய்யப்பட்டிருக்கலாம். இருப்பினும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைன் லாஸ்ட் சீன் நிலையை மறைக்க அனுமதிக்கும் புதிய அம்சத்தை WhatsApp சேர்க்கத் திட்டமிட்டுள்ளதால், இந்த முறைப்படி இனி விரைவில் நீங்கள் லாஸ்ட் சீன் விபரங்களைப் பார்க்க முடியாது.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் ப்ரொபைல் போட்டோ தெரியவில்லையா?
உங்கள் காண்டாக்ட்டில் இருக்கும் நபரின் WhatsApp ஸ்டேட்டஸ் மற்றும் ப்ரொபைல் போட்டோ தகவலைப் பார்க்க முடியவில்லை எனில், அந்த பயனர் உங்களை Block செய்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட காண்டாக்ட்களுக்கு மட்டும் ஸ்டேட்டஸ் மற்றும் ப்ரொபைல் போட்டோவை மறைக்க கூடிய அம்சத்தை வாட்ஸ்அப் வழங்குகிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்த விஷயம் உங்களுக்கு நடந்தால் நீங்கள் கட்டாயம் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தமா?
கவலைப்பட வேண்டாம், இந்த முறைகள் எதுவும் கண்டுபிடிக்க உதவவில்லை என்றால், வேறு சில வழிகளிலும் நாம் இதைக் கண்டுபிடிக்கலாம். நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்று சந்தேகப்படும் நபருக்கு ஒரு WhatsApp மெசேஜ்ஜை அனுப்புங்கள். உங்கள் மெசேஜ் டெலிவரி செய்யப்பட்டுப் பல மணி நேரம் கழித்தும் டபுள் டிக் மார்க்கை பெறவில்லை என்றால், கட்டாயமாக நீங்கள் Block செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதே உண்மை.

WhatsApp வாய்ஸ் கால் மூலம் கூட Block செய்யப்பட்டதை கண்டுபிடிக்க முடியுமா?
அடுத்தபடியாக, நீங்கள் சந்தேகிக்கும் நபரின் WhatsApp எண்ணிற்கு வாய்ஸ் கால் மூலம் தொடர்புகொள்ளலாம். உங்களுடைய காலிங் ஸ்டேட்டஸ் 'Ringing' ஆக மாறவில்லை என்றால், நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். இறுதியாக, நீங்கள் சந்தேகிக்கும் நபரை ஒரு குரூப் இல் ஆட் செய்ய முயலுங்கள், உங்களை அவரால் ஆட் செய்ய முடியவில்லை என்றால், உங்கள் நம்பரை அவர் பிளாக் செய்திருக்கிறார் என்பதே பொருள். இப்படி சில எளிமையான விஷயங்களைக் கொண்டு நீங்கள் Block செய்யப்பட்டுள்ளீர்களா? இல்லையா? என்பதை நாம் கண்டறியலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470