Jio prepaid recharge: கம்மி விலையில் பெஸ்டான திட்டங்கள்.. தினமும் 1ஜிபி முதல் 3ஜிபி வரை டேட்டா வேண்டுமா?
இன்றைய நாட்களில் அனைவரிடமும் ஸ்மார்ட்போன் உள்ளது. அதற்கு நன்றி அன்புக்குரியவர்கள் மற்றும் நண்பர்களுடன் தொடர்புகொள்வது எளிதாகிவிட்டது. மேம்படுத்தப்பட்ட தொலைத்தொடர்பு சேவைகளுக்கு நன்றி, இப்போது நாம் ஒருவருடன் குறுகிய காலத்தில் எளிதாக இணைக்க இந்த சாதனங்கள் பெரிதும் உதவுகின்றது. இருப்பினும், டெலிகாம் சேவைகளைப் பயன்படுத்தாமல் இது சாத்தியமாகாது, என்னதான் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனை வைத்திருந்தாலும் அதில் பயன்பாட்டில் உள்ள ஒரு சிம் இல்லை என்றால், அதற்குப் பயனில்லை.

மக்கள் அதிகம் விரும்பும் 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்கள்
பயனர்கள் அவர்களின் சிம் கார்டுகளை செயல்பாட்டில் வைத்திருக்க தங்கள் எண்ணைத் தொடர்ந்து ரீசார்ஜ் செய்து அவற்றை இயங்கும் நிலையில் பார்த்துக்கொள்ளவேண்டும். இந்தியாவில் உள்ள பல்வேறு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படும் பல ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில், பெரும்பாலான மக்கள் 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களையே ரீசார்ஜ் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். இது மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றாகும்.

பாக்கெட் பிரெண்ட்லியாக இருக்கும் ஜியோ திட்டங்கள் இது தானா?
இதற்கான முக்கிய காரணமே இந்தத் திட்டங்கள் மலிவு விலையில் கிடைக்கிறது. இந்தத் திட்டங்களுக்கு மக்கள் அவர்களின் பையிலிருந்து அதிகப் பணம் செலுத்தவேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இப்போது இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ, 28 நாட்கள் வேலிடிட்டியுடன் பல ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இதில் எந்த திட்டம் உங்களுக்கு பாக்கெட் பிரெண்ட்லியாக இருக்கும் என்று பார்க்கலாம்.

ஜியோ கம்மி விலையில் வழங்கும் 5 பெஸ்டான திட்டங்கள்
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தின் பட்டியலில் நிறுவனம் சுமார் 5 திட்டங்களை வழங்குகிறது. இந்தத் திட்டங்கள் முறையே ரூ. 209 விலை முதல் துவங்குகிறது. அதேபோல், அதிகப்படியாக ரூ. 601 விலை வரை செல்கிறது. இந்த அனைத்து ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களும் பயனர்களுக்குப் பல நன்மைகளை வழங்குகின்றன. குறிப்பாக இந்த திட்டங்கள் அனைத்தும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்கள் என்பதை மறக்காதீர்கள்.

ஜியோ ரூ. 209 விலை திட்டம் மற்றும் அதன் நன்மைகள்
ஜியோ சந்தாதாரர்கள் இந்த திட்டம் தினமும் 1 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்த அனுமதிக்கும். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் வேலிடிட்டி 28 நாட்களாகும். இது தவிர இந்த திட்டத்துடன் அதன் பயனர்களுக்குச் செல்லுபடியாகும் காலம் நிறைவடையும் வரை வரம்பற்ற அழைப்பு நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை ஆகியவற்றை நிறுவனம் வழங்குகிறது. மலிவு விலையில் வரம்பற்ற அழைப்பு நன்மை மற்றும் தினமும் எஸ்எம்எஸ் நன்மை வேண்டும் பயனர்கள் இந்த திட்டத்தைக் கருத்தில்கொள்ளலாம்.

ஜியோ ரூ. 239 விலை திட்டம் மற்றும் அதன் நன்மைகள்
ஜியோ இந்த திட்ட சந்தாதாரர்களுக்குத் தினமும் 1.5 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்த அனுமதிக்கும். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் வேலிடிட்டி 28 நாட்களாகும். இது தவிர இந்த திட்டத்துடன் அதன் பயனர்களுக்குச் செல்லுபடியாகும் காலம் நிறைவடையும் வரை வரம்பற்ற அழைப்பு நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை ஆகியவற்றை நிறுவனம் வழங்குகிறது.

ஜியோ ரூ. 299 விலை திட்டம் மற்றும் அதன் நன்மைகள்
இந்த திட்டம் தினமும் 2 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்த அனுமதிக்கும். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் வேலிடிட்டி 28 நாட்களாகும். இது தவிர இந்த திட்டத்துடன் அதன் பயனர்களுக்குச் செல்லுபடியாகும் காலம் நிறைவடையும் வரை வரம்பற்ற அழைப்பு நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை ஆகியவற்றை நிறுவனம் வழங்குகிறது.

இன்னும் கூடுதல் டேட்டா வேண்டுமா?
உங்களுக்கு இந்த டேட்டா நன்மை எல்லாம் போதாது, இன்னும் கூடுதல் டேட்டா கொண்ட திட்டங்கள் தான் தேவை என்றால், நீங்கள் ஜியோ வழங்கும் ரூ. 419 திட்டம் மற்றும் ரூ. 601 விலை கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்ய திட்டமிடலாம். இந்த இரண்டு திட்டங்களும் அதன் பயனர்களுக்குத் தினமும் 3 ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் ஹெவி டேட்டா திட்டங்களாகும். இத்துடன் இந்த திட்டத்தில் OTT நன்மையையும் நிறுவனம் வழங்குகிறது.

ஜியோ ரூ. 419 விலை திட்டம் மற்றும் அதன் நன்மைகள்
இந்த திட்டம் தினமும் 3 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்த அனுமதிக்கும். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் வேலிடிட்டி 28 நாட்களாகும். இந்த திட்டத்துடன் வரம்பற்ற அழைப்பு நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை ஆகியவற்றை நிறுவனம் வழங்குகிறது. OTT மற்றும் டேட்டா பலன்கள் இரண்டையும் நீங்கள் பயன்படுத்த விரும்பினால் ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ. 601 திட்டத்தைப் பார்வையிடவும்.

ஜியோ ரூ 601 திட்டம்:
ஜியோ இந்த திட்டத்தின் மூலம் அதன் பயனர்களுக்குத் தினமும் 3 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு வசதி ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தில் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளிலும் இது கிடைக்கிறது. இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையையும் நிறுவனம் வழங்குகிறது. இத்துடன் பயனர்களுக்கு 6 ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் ரூ.499 மதிப்புள்ள 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவையும் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டங்களில் உங்கள் பாக்கெட் பணத்திற்கு அதிக செலவு வைக்காத திட்டம் எது என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications