மின்னஞ்சலில் புதிய பிழை கண்டறிந்த செக்பாயின்ட் ஆராய்ச்சியாளர்கள்

|

செக்பாயிண்ட் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆராய்ச்சி கட்டுரையில் மின்னஞ்சல் மூலம் மக்கள் சந்திக்கும் புதுவித பிரச்சனை புற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த பிரச்சனை செக்ஸ்டார்சன் என குறிப்பிடப்படுகிறது.

மின்னஞ்சலில் புதிய பிழை கண்டறிந்த செக்பாயின்ட் ஆராய்ச்சியாளர்கள்

இதில் மர்ம நபர்கள் ஒருவரது அந்தரங்க புகைப்படம் அல்லது வீடியோக்களை ரகசியமாக படம்பிடித்து அவற்றை வெளியிடுவதாக மிரட்டி அவர்களிடம் பணம் கேட்டு மின்னஞ்சலில் மிரட்டுவதை செக்ஸ்டார்சன் ஆகும். பொதுவாக இதுபோன்ற அந்தரங்க விவரங்கள் பயனரின் வெப்கேமரா மூலம் எடுக்கப்படுகிறது.


ஐந்து மாதங்கள் நடைபெற்ற ஆராய்ச்சியில் செக்பாயிண்ட் ஆராய்ச்சியாளர்கள் பெரிய மால்வேர் ஒன்றை கண்டறிந்துள்ளனர். இந்த மால்வேர் பாதிக்கப்பட்ட பயனர்கள் சார்பில் செக்ஸ்டார்சன் மின்னஞ்சல்களை அவர்களுக்கே தெரியாமல் பலருக்கு அனுப்புகிறது. இவ்வாறு அனுப்பப்படும் மின்னஞ்சல்களின் எண்ணிக்கை கணிக்க முடியாத அளவு அதிகமாக இருக்கிறது.


ஆய்வின் படி மக்கள் அவர்களுக்கே தெரியாமல் சுமார் 2.7 கோடி பேருக்கு செக்ஸ்டார்சன் மின்னஞ்சல்களை அனுப்புகின்றனர் என செக்பாயிண்ட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 30,000 செக்ஸ்டார்சன் மின்னஞ்சல்களை இவ்வாறு அனுப்புவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செக்பாயிண்ட் ஆய்வின் முக்கிய விவரங்களை பார்ப்போம்.


- இதன் மூலம் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் நபர்களில் நீங்களும் இணையலாம்


- ஜிமெயில், அவுட்லுக் என தடயத்தை வழங்கும் சேவைகளை போட்நெட் கடந்துவிடும்


- மின்னஞ்சல் முகவரிகளுடன் லீக் ஆகும் பாஸ்வேர்டுகள் மற்ற பயனர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்


- பிட்காயின் வாலெட்கள் இதன் மூலம் வருவாய் ஈட்ட முயற்சிக்கும்


- போர்பிக்ஸ் பாட்நெட் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருக்கிறது. இது சுமார் 4.5 லட்சம் பாதிக்கப்பட்ட ஹோஸ்ட்களில் இயங்குகிறது


- இவற்றை செக்பாயிண்ட் ஆராய்ச்சியாளர்கள் கடந்த ஐந்து மாதங்களாக கண்கானித்து வருகின்றனர். இதன் மூலம் சுமார் 11 பி.டி.சி.-க்களை போர்பிக்ஸ் செக்ஸ்டார்சன் வாலெட்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.


- பிழை கொண்ட பாட் ஆயிரக்கணக்கான ஸ்பேம் மின்னஞ்சல்களை உருவாக்கும் - இது ஒருமணி நேரத்திற்கு 30,000 என கணக்கிடப்பட்டுள்ளது


- ஒவ்வொரு ஸ்பேம் அதிகபட்சம் 2.7 கோடி பேரை பாதிக்கும்

மின்னஞ்சலில் புதிய பிழை கண்டறிந்த செக்பாயின்ட் ஆராய்ச்சியாளர்கள்

எஃப்.பி.ஐ. அறிக்கையின் படி செக்ஸ்டார்சன் ரக மின்னஞ்சல்கள் 242 சதவிகிதம் வளர்ந்து வருகிறது. இதுபோன்ற மின்னஞ்சல்களில் பெரும்பான்மையானவை செக்ஸ்டார்சன் சம்மந்தப்பட்டவை ஆகும். இவற்றின் மூலம் 8.3 கோடி டாலர்கள் அளவு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்பிக்ஸ் ஸ்பாம் பாட் உருவாக்கிய செக்ஸ்டார்சன் மின்னஞ்சல்களுக்கான எடுத்துக்காட்டை கீழே காணலாம்:

Best Mobiles in India

English summary
Check Point Researchers Discover Email Vulnerability Which Can Lead To Sextortion: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X