ஜியோ பெஸ்ட் ரீசார்ஜ்: ரூ.75 முதல் ரூ.250 விலைக்குள் கிடைக்கும் திட்டம்.. இது ரொம்ப பாக்கெட் பிரெண்ட்லி..
ரிலையன்ஸ் ஜியோ தனது மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போனான "ஜியோபோன் நெக்ஸ்ட்" கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இது ஜியோஃபோனின் பயனர்களுக்குப் பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. ஜியோபோன் பயனர்களுக்கான ப்ரீபெய்ட் திட்டங்கள், ஜியோ பயனர்களுக்குக் கிடைக்கும் திட்டங்களிலிருந்து வேறுபட்டவை. உங்களிடம் ஜியோபோன் இருந்தால், ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை ரூ.250க்கும் குறைவான விலையில் வாங்கி பயன்பெற முடியும்.

ரூ.250 விலைக்குக் கீழ் கிடைக்கும் ஜியோபோன் ப்ரீபெய்ட் திட்டங்கள்
மலிவான ஜியோபோன் திட்டத்தின் விலை ரூ.75 ஆகும். இந்த திட்டம் ஒரு நாளைக்கு 0.1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது மற்றும் 23 நாட்கள் செல்லுபடியாகும் காலம் கொண்டது. அதாவது, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்கள் மொத்தம் 2.3GB டேட்டாவைப் பெறுவார்கள். கூடுதலாக, இந்த திட்டம் 200எம்பி டேட்டாவையும் வழங்குகிறது. இது மொத்த டேட்டா தொகையை 2.5ஜிபியாகக் கொண்டுவருகிறது. இந்த திட்டத்தில் பயனர்கள் மொத்தம் 50 எஸ்எம்எஸ்களையும் பெறலாம். இத்துடன் ஜியோ ஆப்ஸ் நன்மைகளும் கிடைக்கிறது.

ஜியோவின் ரூ. 91 திட்டம் வழங்கும் நன்மைகள்
பட்டியலில் நாம் விவாதிக்கவிருக்கும் அடுத்த திட்டத்தின் விலை ரூ.91 ஆகும். இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம், நாம் முன்னர் பார்த்த ரூ.75 திட்டத்தைப் போலவே செயல்படுகிறது. ஆனால், இதன் வேலிடிட்டி காலம் மற்றும் சற்று அதிகம். ரூ.91 ரீசார்ஜ் திட்டமும் 0.1ஜிபி/நாள் கூடுதல் 200எம்பி டேட்டா மற்றும் 50 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. அதாவது ரூ.75 திட்டத்தில் கிடைக்கும் அதே பலனைப் பயனர்கள் வெவ்வேறு வேலிடிட்டியுடன் பெறுவார்கள்.

ஜியோவின் ரூ.125 மற்றும் ரூ.152 ரீசார்ஜ் திட்டம் வழங்கும் நன்மைகள்
பட்டியலில் உள்ள அடுத்த இரண்டு திட்டங்களின் விலை ரூ.100 விலை புள்ளிக்கு மேல் செல்கிறது. இவை ரூ.125 மற்றும் ரூ.152 ரீசார்ஜ் திட்டங்களாகும். இரண்டு திட்டங்களும் தினசரி 0.5ஜிபி டேட்டா மற்றும் மொத்தம் 300 எஸ்எம்எஸ் போன்ற பலன்களை வழங்குகிறது. இருப்பினும், ரூ.125 திட்டமானது 23 நாட்கள் வேலிடிட்டி காலத்துடன் வருகிறது. அதே சமயம் ரூ.152 திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. அதாவது ரூ.125 திட்டத்துடன் மொத்தம் 11.5ஜிபி டேட்டா கிடைக்கிறது. மறுபுறம் ரூ.152 திட்டம் வழங்கும் மொத்த டேட்டா 14ஜிபி ஆகும்.

ஜியோவின் ரூ. 186 திட்டம் வழங்கும் நன்மைகள்
ஜியோபோன் பயனர்களுக்கு நிறுவனம் ரூ.186 ப்ரீபெய்ட் திட்டத்தையும் ஜியோ வழங்குகிறது. இந்த ரூ.186 ஜியோ திட்டம் ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தைக் கொண்டுள்ளது. அதாவது, இந்த திட்டத்தில் பயனர்கள் மொத்தம் 28ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். கூடுதலாக, இது ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. ரூ.200 விலை பிரிவின் கீழ் ஜியோபோன் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு 1 ஜிபி வழங்கும் திட்டம் இதுதான் என்பது கவனிக்கத்தக்கது.

ஜியோவின் ரூ. 222 திட்டம் வழங்கும் நன்மைகள்
கடைசியாக, ஜியோ ரூ.222 விலையில் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது. இது 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்திற்குத் தினசரி 2ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மொத்த டேட்டா 56ஜிபி ஆகும். இது திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்திற்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இத்துடன் ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச அணுகலும் அதன் பயனர்களுக்குக் கிடைக்கிறது. ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற ஆப்ஸ்களின் அணுகல் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications