Jio-வில் இப்படி இலவசங்கள் கூட இருக்கா? அடடா.. இது தெரியாம போச்சே.! இனி மிஸ் பண்ணிடாதீங்க.!

|

இந்திய டெலிகாம் (Telecom) துறையில் அறிமுகமான தினத்திலிருந்தே மக்கள் மத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது ஜியோ (Jio). அதன் இலவச சிம் கார்டுகள், ஓராண்டு இணைய வசதி என்று அனைத்துமே மக்களை வெகுவாக கவர்ந்தது.

இது இந்தியாவில், ஜியோவை முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக மாற்றியது. ஜியோ வெளியிட்ட வரலாறு காணாத சலுகைகளைப் பயன்படுத்தாதவர்கள் இந்தியாவில் மிகக்குறைவு என்றே கூறலாம். 2016 ஆம் ஆண்டு, இலவச இணைய சேவை கொண்ட சிம்கார்டுகளை அறிமுகம் செய்ததிலிருந்து இன்று வரை, தொலைத்தொடர்பு துறையில் ஜியோ முதன்மை வகித்து வருகிறது.

Jio-வில் இப்படி இலவசங்கள் கூட இருக்கா? அடடா.. இது தெரியாம போச்சே.!

சில ஜியோ பயர்னர்களுக்கே தெரியாத சில இலவச நன்மைகள்.!

மக்களுக்கு 4ஜி-யை (4G) அறிமுகம் செய்து வைத்த ஜியோ, சமீபத்தில் 5ஜி (5G) சேவையையும் நாடு முழுவதும் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்துள்ளது. தொலைத்தொடர்புத் துறையில் நுழைந்து சில ஆண்டுகளிலேயே முதன்மையான இடத்தை பிடித்த ஜியோ, ஜியோமார்ட் (JioMart), ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ மியூசிக் (Jio Music) என்று பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

ப்ராட்பேண்ட் (Broadband), ஜியோ வைஃபை (Jio WiFi), ஜியோஃபை மோடம் (JioFi Modem) போன்ற பல இணையச் சேவைகளை வழங்கி வரும் ஜியோ, இவை அனைத்தையும் ஒன்று சேர்க்கும் பிரத்தியேக மை ஜியோ ஆப்ஸ் (My Jio Apps) மற்றும் இணையதளத்தையும் கொண்டுள்ளது. ஜியோவின் இந்த பிரத்தியேக 'மை ஜியோ ஆப்ஸ்' செயலியில் அதன் பயனாளர்கள் பலருக்குமே கூட தெரியாத கவர்ச்சிகரமான இலவச அம்சங்கள் உள்ளன.

அவற்றில் கவர்ச்சிகரமான மூன்று சிறப்பு இலவச ஜியோ அம்சங்களைப் (Free Jio Benefits) பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

Jio-வில் இப்படி இலவசங்கள் கூட இருக்கா? அடடா.. இது தெரியாம போச்சே.!

உங்கள் பெயர் கொண்ட 'இலவச' காலர் ட்யூன் (Caller Tune).!

உங்கள் மொபைல் எண்ணிற்கு (Mobile Number) யாராவது அழைக்கும் போது, எப்போதும் போல ட்ரிங் ட்ரிங் சத்தமே கேட்டால் அது சலிப்பாக இருக்கும். இதற்கு பதிலாகக் காலர் ட்யூர் (Caller Tune) சேவையைப் பயன்படுத்தி உங்கள் ரிங் டோனை மாற்றலாம். வழக்கமாக இதில் பாடல் கேட்கும். ஆனால், இதற்குப் பதிலாக உங்களைப் பெயரையே நீங்கள் உங்கள் மொபைல் எண்ணிற்காகக் காலர் டியூனாக செட் செய்துகொள்ளலாம். அதுவும் இலவசமாக.!

உங்கள் பெயரை காலர் டியூனா வைக்க இதை செய்யுங்கள்.!

- ஜியோவின் மை ஜியோ ஆப்ஸ் ஓபன் செய்யவும்.
- Home Screen அடிப்பகுதியில் ஜியோ ட்யூன்ஸ் (Jio Tunes) என்று ஒரு தேர்வு இருக்கும்.
- அதனுள் சென்றால், முதல் தேர்வாக நேம் ஜியோ ட்யூன்ஸ் (Name Jio Tunes) என்று இருக்கும்.
- அதில் உங்களது பெயரை டைப் செய்ய வேண்டும்.
- அப்படி செய்தால் இனி உங்கள் ஜியோ எண்ணிற்கு அழைப்பவர்களுக்கு உங்களது பெயர் காலர் ட்யூனாக கேட்கும்.

உதாரணமாக, உங்களது பெயர் 'லதா' என்றால், நீங்கள் செட் செய்துள்ள காலர் ட்யூனில், "லதாவை கால் செய்ததற்கு நன்றி. உங்கள் காலிற்கு விரைவில் பதில் அளிக்கப்படும். அதுவரை ம்யூசிக்கை கேட்டு மகிழவும் என்று" கேட்கும். இந்த காலர் ட்யூன் சேவை அணைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கிறது.

Jio-வில் இப்படி இலவசங்கள் கூட இருக்கா? அடடா.. இது தெரியாம போச்சே.!

இலவச 5G டேட்டா வேண்டும்? அதுவும் உங்கள் நார்மல் பிளானில் அன்லிமிடெட்டாக.!

இந்தியா முழுவதும் தனது ஜியோ ட்ரூ 5ஜி (Jio True 5G) சேவையை ஜியோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்தியா முழுவதும் சுமார் 250-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஜியோவின் 5ஜி (Jio 5G) சேவை தற்போது இலவச பயன்பாட்டில் உள்ளது. இதைப் பெற உங்களிடம் ஜியோ சிம் இருந்தால் போதும்.

- உங்களிடம் 5ஜி அம்சம் கொண்ட ஸ்மார்ட் போன் இருக்க வேண்டும்.
- நீங்கள் My Jio Apps செயலியில் சென்று, அதில் இருக்கும் Welcome Offer என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.
- பின்னர், உங்கள் ஜியோ எண்ணை டைப் செய்ய வேண்டும்.
- இப்போது உங்களது 4ஜி சேவை அதிவேக 5ஜி சேவையாக இலவசமாக மாற்றப்படும்.
- இதற்காக நீங்கள் புது 5ஜி சிம் கார்டை வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இலவச Jio ஸ்டேட்மெண்டை (Statement) அம்சம்.!

நம்முடைய சிம் கார்டில் என்னென்ன பயன்படுத்தியிருக்கிறோம் என்பதனை அறிந்து கொள்வது கொஞ்சம் கடினம். அதற்கான சேவையை நிறுவனம் இப்போது இலவசமாக வழங்குகிறது.

- உங்கள் My Jio Apps ஓபன் செய்துகொள்ளுங்கள்.
- அதன் ஹோம் ஸ்க்ரீனின் கீழே வலது ஓரம் இருக்கும் மெனுவை (Menu) தேர்வு செய்யவும்.
- அதில் ஸ்டேட்மெண்ட் என்ற ஒரு தேர்வு இருக்கும்.
- அதை ஓப்பன் செய்து உங்களுக்குத் தேவைப்படும் நாட்களில் என்னென்ன பயன்பாடுகளை உங்கள் ஜியோ எண்ணைப் பயன்படுத்திச் செய்துள்ளீர்கள் என்ற ஸ்டேட்மெண்ட் (Statement) கிடைக்கும்.
- இதை தேவைப் பட்டால் இமெயிலோ, பதிவிறக்கமோ செய்தும் கொள்ளலாம்.
- இதுவும் முற்றிலும் இலவசம்.

இத்தகைய இலவச அம்சங்களை உடனே நீங்கள் ட்ரை செய்து பாருங்கள். மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Check Out These 3 Free Jio Benefits By Using My Jio App On Your Mobile

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X